பிக் பாஸ் வீட்டில் இப்படி ஒரு விஷயம் நடக்கும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.
பிக் பாஸ் நிகழ்ச்சி நம் தமிழ் கலாச்சாரத்திற்கு எதிரானது என்று கடந்த ஆண்டு போர்க்கொடி தூக்கினார்கள்.
அதையும் தாண்டி நிகழ்ச்சி வெற்றி பெற்றது. இந்நிலையில் இரண்டாவது சீசனும் துவங்கி நடந்து கொண்டிருக்கிறது. இந்த சீசனில் இப்படி ஒரு விஷயம் நடக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்
ஐஸ்வர்யா ஷாரிக் ஹஸனுக்கும், ஐஸ்வர்யா தத்தாவுக்கும் இடையே காதலை ஏற்படுத்த போட்டியாளர்கள் முயற்சி செய்து வருகிறார்கள்.
நேரம் கிடைக்கும் போது எல்லாம் இருவரையும் சேர்த்து வைத்து பேசுகிறார்கள். அதை கேட்டு அவர்களும் வெட்கப்படுகிறார்கள்.
#பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. #VivoBiggBoss @Vivo_India pic.twitter.com/dKybhYEmlZ
— Vijay Television (@vijaytelevision) 22 juin 2018
காதல்
ஷாரிக் ஹஸனும், ஐஸ்வர்யா தத்தாவும் காதலில் விழுவார்கள் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. ஷாரிக் ஆரவ் போன்று மருத்துவ முத்தம் கொடுப்பாரோ என்று நினைத்தால் ஐஸ்வர்யாவும், ஜனனியும் லிப் டூ லிப் முத்தம் கொடுத்துள்ளனர்.
நிகழ்ச்சி
ப்ரொமோ எப்பொழுதுமே பரபரப்பாக தான் இருக்கும். இன்று இரவு நிகழ்ச்சியை பார்த்துவிட்டு நாளை பேசுவோம். அது எந்த வகை முத்தம் என்று நிச்சயம் ஒரு விளக்கம் வைத்திருப்பார்கள்.