5 Days to Go என்ற டிவியில் தெரிந்த மெசேஜூடன் துவங்கியது பிக்பாஸ் வீட்டில் 93 வதுநாள். எட்டு மணிக்கு ‘வேக்கப் சாங்’ ஒலித்தது.
இன்றைய தேர்வு, ‘சேட்டை’ படத்திலிருந்து ‘நீ தாண்டி ஒஸ்திப் பொண்ணா’ என்ற பாடல். இரண்டு நாளாக டாஸ்க்குகள் கடினமானதாக இல்லை என்பதால் அனைவரும் மிக உற்சாகமாக ஆடினார்கள்.
ஆனால் வழக்கம்போல் தங்களிடம் ஸ்டாக் உள்ள நான்கே நான்கு ஸ்டெப்களை மட்டும்தான் திரும்ப திரும்பப் போட்டார்கள்.
ஹரிஷ் இசைக்குத் தகுந்தாற்போல் ஆடினார். எல்லாரும் ஒரு சைடு ஸ்டெப் போட்டுக்கொண்டிருக்க, சிநேகன் மட்டும் எதிர்சைடில் ஸ்டெப் போட்டுக்கொண்டிருந்தார்.
வழக்கமாக ஆடி முடித்தால் தாங்க்யூ பிக்பாஸ் என்று கோரஸாக கத்துவார்கள். இன்று ‘காலை வணக்கம் தமிழ்நாடு’ என்றார்கள்.
மக்கள் ஓட்டுகளைப் பெற வேண்டிய நிலைவந்தால் எல்லாருக்கும் ‘தமிழ் மக்கள்’, தமிழ்நாடு’ என்ற வார்த்தைகள் நாவில் தொற்றிக்கொள்ளும் போல. ஞாயிற்றுக்கிழமை உங்களுக்கு ஏன் ஓட்டுப்போடவேண்டும்? என்று கேட்டபோதும்கூட இதே வார்த்தைகளை எல்லாருமே பயன்படுத்தினார்கள்.
Part 02
Part 03
Part 04
Part 05