பிரான்ஸ் நாட்டின் பிரதமர் அடுத்த மாதம் தனது 60வது பிறந்தநாளை வெகு சிறப்பாக கொண்டாட உள்ளதாகவும், அவருடைய பிறந்த நாள் அன்று அவர் பிரபல நடிகை ஒருவரை திருமணம் செய்ய உள்ளதாகவும், பிரான்ஸ் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
இரண்டு பெண்களை திருமணம் செய்து இருவரையும் விவாகரத்து செய்துவிட்டு தற்போது தனியாக வாழ்ந்து வரும் பிரான்ஸ் பிரதமர் Francois Hollande, சமீபத்தில் சில நாட்களாக பிரபல நடிகை Julie Gayet என்பவரை காதலித்து வருவதாகவும், அவரை விரைவில் திருமணம் செய்ய உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தன.
அந்த செய்திகள் தற்போது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
Valérie Massonneau
ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி தனது பிறந்தநாளில் தனது திருமணத்தையும் நடத்த ஏற்பாடு செய்துவருவதாக பிரதமர் அலுவலகமும் உறுதிபடுத்தியுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
பிரான்ஸ் பிரதமர் Francois Hollande, கடந்த 1978ஆம் ஆண்டு Ségolène Roya என்பவரை திருமணம் செய்தார். பின்னர் அவரை 2007ஆம் ஆண்டு விவாகரத்து செய்துவிட்டு அதே ஆண்டில் Valérie Massonneau என்பவரை திருமணம் செய்து கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அவரையும் விவாகரத்து செய்தார்.
இரு மனைவிகளுடன் வாழ்ந்ததில் பிரதமருக்கு மொத்தம் நான்கு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது