ஜோர்ஜிய நாட்டின் எதிர்க்கட்சி பெண் அரசியல்வாதி ஒருவர் தன் கணவரல்லாத ஒருவருடன் உறவு கொள்வது போன்ற காணொளி காட்சிகள் யூ டியூபில் வெளியான சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த வாரம் இந்த காணொளி காட்சிகள் யூ டியூபில் வெளியாகி அந்த நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் நேற்று இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்நாட்டின் பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஏழு மாதங்களே இருக்கின்ற நிலையில், சுதந்திர ஜனநாயக கட்சியின் பெண் அரசியல்வாதி ஒருவரின் இரண்டு வீடியோ காட்சிகள் இவ்வாறு வெளியாகியுள்ளதோடு, தற்போதைய ஆளும் கூட்டணியில் இருக்கும் பல்வேறு அரசியல் தலைவர்கள் சம்பந்தப்பட்ட இது போன்ற மேலும் பல படங்கள் வெளியாகும் எனவும் மிரட்டல்கள் வந்துள்ளன.
இந்நிலையில் இந்த காணொளி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை நடத்துமாறு அந்த நாட்டு பிரதமர் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஜார்ஜியாவில் தேர்தலுக்கு முன்பாக அரசியல்வாதிகளின் மரியாதையைக் குலைப்பதற்காக ரகசியமாக எடுக்கப்பட்ட படங்கள் இதற்கு முன்பும் இதேபோல வெளியாகியிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.