யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் மூவர் உட்பட யாழ். மாவட்டத்தில் மேலும் 5 பேர் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று நல்லூரைச் சேர்ந்த 69 வயதுடைய பெண் ஒருவரும் நெல்லியடியைச் சேர்ந்த 64 வயதுடைய ஆண் ஒருவரும் சுன்னாகத்தைச் சேர்ந்த 76 வயதுடைய ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, மந்திகை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற 22 வயதுடைய இளம் பெண் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.