யாழ்ப்பாணம் , அல்லைப்பிட்டி – ஊர்காவற்றுறை பிரதான வீதியில் இடம்பெற்ற டிப்பர் – மோட்டார் சைக்கிள் விபத்தில் இளம் குடும்பத்தலைவர் ஒருவர் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் இன்று மாலை இடம்பெற்றதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.
அளவெட்டி கிழக்கைச் சேர்ந்த நிதர்ஷன் (வயது-21) என்பவரே உயிரிழந்தார்.
மோட்டாா் சைக்கிளில் வந்த இளம் குடும்பத்தலைவர், டிப்பா் வாகனத்துடன் மோதி விபத்து இடம்பெற்றது என்றும் படுகாயமடைந்த இளைஞன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்தார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.