* ரஜினிக்கு முதன்முதலில் ‘சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டத்தைக் கொடுத்து விளம்பரப்படுத்தியவர் கலைப்புலி தாணு!
* பொங்கல், தீபாவளி என அனைத்து விசேஷங்களிலும் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் தன்னுடன் இருக்க வேண்டும் என்பது ரஜினியின் சென்டிமென்ட். அவர் வரத் தாமதமானால், ‘இன்னும் வரலையா?’ என்று போன் செய்துவிடுவார்!
* பழமொழிகள், குட்டிக் கதைகள், பொன்மொழிகள் மீது ரஜினிக்கு அலாதி பிரியம். இவற்றுக்காகவே தனியாகப் பல நூறு புத்தகங்களை வாங்கிவைத்திருக்கிறார். அவற்றை மேடையில் பேசும்போது பயன்படுத்துவார்!
* அடிக்கடி நண்பர்களின் வீடுகளுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடிப்பது ரஜினியின் பழக்கம். வாசலில் தலையில் மப்ளர் கட்டிக்கொண்டு நின்றபடி மலர்ந்து சிரிப்பார்!
* ‘தலைவா, உங்க பிறந்த நாளன்று உங்களைச் சந்திக்க ஆசைப்படுகிறேன்’ என்று ரசிகர் ஒருவர் சொன்னதற்கு, ”பிறந்த நாளன்று ‘நான் ஏன் பிறந்தேன்?’ என்று சிந்திக்க எனக்கு அவகாசம் தேவை. அன்றைய நாளில் என் ஃபேமிலி மெம்பர்ஸ்கூட என்னைத் தனியாக விட்டுவிடுவார்கள். அன்னிக்கு வேண்டாமே ப்ளீஸ்!” என்று பிறந்த நாள் பற்றிய வித்தியாசமான கோணம் ஒன்றைக் கொடுத்தார் ரஜினி!
* ரஜினியின் ஆன்மிகம் பற்றிய விமர்சனங்கள் வந்தபோது அவர் சொன்னது, ‘நான் ஆன்மிகவாதிதான். ஆனால், ஒரு கன்னத்தில் அறைந்தால், இன்னொரு கன்னத்தைக் காட்டும் அளவுக்கு ஆன்மிகத்தில் இன்னும் உயரவில்லை. அந்த மாதிரியான ஆன்மிகவாதியாக ஆவதற்கு எனக்கு விருப்பமும் இல்லை!’
* ஒரு படத்தின் சூட்டிங் முடியும்போது அந்தப் படத்தில் பணிபுரிந்த உதவி இயக்குநர்களுக்கு ஒரு தொகையைப் பரிசாகத் தருவது ரஜினியின் பழக்கம். குறைந்தது 50 ஆயிரம் ரூபாய்!
* ரஜினி வீட்டில் இருக்கும் நேரங்களில் அவரது அறையில் ‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரம் ஒலித்துக்கொண்டே இருக்கும்!
* ராகவேந்திரா கல்யாண மண்டபத்தின் தொலைபேசிக்கு இன்னொரு இணைப்பு உண்டு. ரஜினி மண்டபத்தில் இருக்கும்போது ரசிகர்கள் யாராவது போன் பண்ணினால், அந்த இன்னொரு இணைப்பு வழியாக எல்லாவற்றையும் மௌனமாகக் கேட்டுக்கொண்டு இருப்பார். அந்த ரசிகருடன் பேச வேண்டும் என்று விரும்பினால் அவரே லைனில் வருவார்!
* யார் தன்னைப் பார்க்க வந்தாலும், வயது குறைந்தவர்களாக இருந்தால்கூட எழுந்து நின்று வரவேற்பது ரஜினியின் வழக்கம். வந்தவர் அமர்ந்த பின்புதான் இவர் அமர்வார்!
* ரஜினி எந்த காரில் வருவார் என்று யாராலும் தீர்மானிக்க முடியாது. அம்பாஸடர், குவாலீஸ் என்றுதான் அதிகபட்சம் செல்வார். எந்தக் காரணம் கொண்டும் விலை உயர்ந்த பி.எம்.டபிள்யூ, பென்ஸ் போன்ற கார்களைப் பயன்படுத்த மாட்டார்