தவறுதலான தொலைபேசி அழைப் பின் மூலம் அறிமுகமான தனது அறுபது வயது காதலியின் பதினாறு வயது மகளான சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்திவிட்டு தலைமறைவான அம்பாறை பகுதியைச் சேர்ந்த இருபத்து நான்கு வயது இளைஞரை காதல் வலைவீசி கைது செய்தார் வெலம்பொட பொலிஸ் நிலைய சிறுவர் பிரிவு பொறுப்பதிகாரி இஷாரா.
இதன்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், காதலியே அவரின் மகளை காதலனுக்கு விருந்தளித்த விடயம் தெரிய வந்ததையடுத்து மேற்படி இருவரையும் கைது செய்த பொலிஸார் அவர்களை கம்பளை நீதிமன்ற நீதவான் ஸ்ரீநித் விஜேசேகர முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது குறித்த இருவரையும் இன்று வெள்ளிக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
மேற்படி சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது, வெலம் பொட பகுதியைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தாயான 60 வயதுடைய பெண் சில காலங்களுக்கு முன்னர் தனது கைத் தொலைபேசிக்கு வந்த தவறிய அழைப்பின் மூலம் அறிமுகமான அம்பாறை பகுதியைச் சேர்ந்த இளைஞருடன் காதல் வயப்பட்டுள்ளார்.
பின்னர் காதலனை வெலம்பொடைக்கு வரவழைத்து அங்கு கழிவுத் தேயிலை கலப்படம் செய்யும் சட்டவிரோத தொழிற் சாலைஒன்றில் வேலையும் பெற்றுக் கொடுத்து வாழ்ந்து வந்த நிலையிலேயே மேற்குறிப்பிட்ட சந்தேக நபருக்கு காதலியின் மகளான 16 வயது சிறுமியான பாடசாலை மாணவி மீது ஈர்ப்பு ஏற்படவே, காதலியின் பூரண ஒத்துழைப்போடு சிறுமியின் எதிர்ப்பையும் மீறி வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்.
பின்னர் குறித்த சந்தேக நபருடன் சிறுமியை வலுக்கட்டாயமாக அனுப்பி வைத்து விட்டு பொய்யாக வெலம்பொட பொலிஸ் நிலையத்தில் குறித்த இளைஞர்தனது மகளுடன் தலை மறைவாகி விட்டதாக முறைப்பாடு செய்துள்ளார்.
இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், சந்தேக நபரின் தொலைபேசி இலக்கத்தைப் பெற்று பொலிஸ் நிலையத்துக்கு வரவழைக்க முயற்சித்த போதும் அது பலனளிக்கவில்லை.
இதனையடுத்து சந்தேக நபரின் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்ட வெலம் பொட பொலிஸ் நிலைய சிறுவர் பிரிவு பொறுப்பதிகாரி இஷாரா, குறித்த இளைஞருடன் சில காலமாக காதலிப்பது போல் நடித்து வரக்காபொல பிரதேச ஹோட்டல் ஒன்றுக்கு அவரை வரவழைத்து கைது செய்தார்.
அந்த இளைஞரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது அவர் வழங்கிய வாக்குமூலத்தில் இந்த விடயங்கள் தெரிய வந்துள்ளன.
பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டு அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோ
தனையில் குறித்த சிறுமி வல்லுறவுக்கு உட்படுத்தப் பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது