தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் ஸ்ருதிஹாசனிடம் ரசிகர்கள் பலரும் சமையல் ஆர்டர் கொடுத்து வருகிறார்கள்.
ஸ்ருதிஹாசனிடம் சமையல் ஆர்டர் கொடுத்த ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஸ்ருதிஹாசன். இவரது நடிப்பில் வெளியான கிராக் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டாகியுள்ளது.
தற்போது விஜய் சேதுபதியுடன் லாபம் படத்தில் நடித்துள்ளார். இப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
இந்நிலையில் ஸ்ருதிஹாசன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தோசை சுடும் வீடியோவை பதிவு செய்திருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் பலர் எனக்கு ஸ்பெஷல் தோசை செய்து கொடுங்கள், முட்டை தோசை செய்து கொடுங்கள் என்று ஆர்டர் செய்து வருகிறார்கள்.
Voir cette publication sur Instagram