Site icon ilakkiyainfo

13 வயது அக்காவின் கத்திக்குத்துக்கு இலக்காகி 6 வயது தங்கை உயிரிழப்பு: மொனராகலையில் சம்பவம்: பெற்றோரின் பாரபட்சமான அன்பு காரணம் ?

மொன­ரா­கலை மாவட்­டத்தின் – படல் கும்­புர பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட அலு­பொத்த, பங்­க­ளா­தோட்டம் பிர­தே­சத்தில் தன­து ஆறு வயது தங்­கையை 13 வயது பாட­சாலை சிறு­மி­யான அக்கா கத்­தியால் குத்தி கொலை செய்த சம்­பவம் ஒன்று இடம்­பெற்­றுள்­ளது.

இந்த சம்­ப­வ­மா­னது நேற்று முன் தினம் மாலை இடம்­பெற்­றுள்­ள­தா­க­வும் சந்­தே­கத்தின் பேரில் அக்­காவை படல்­கும்­புர பொலிஸார் கைது செய்­துள்­ள­தா­கவும் சம்­பவம் தொடர்பில் பெற்­றோ­ரி­டமும் வாக்கு மூலங்­களை அவர்கள் பதிவு செய்­துள்­ள­தா­கவும் பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் அஜித் ரோஹண கேச­ரிக்கு தெரி­வித்தார்.

சம்­ப­வத்தில் 6 வய­தான சாதிலா பானு என்ற சிறு­மியே உயி­ரி­ழந்­துள்­ள­தா­கவும் படல்­கும்­புர பொலிஸார் மேல­திக விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ள­தா­கவும் அவர் மேலும் குறிப்­பிட்டார்.

தனது பெற்றோர்கள் தன்னை விட தனது தங்­கைக்கு அதிக அன்பு காட்­டு­வது தொடர்பில் மனதில் இருந்த ஆத்­தி­ரத்தில் இந்த கத்திக் குத்து நடத்­தப்­பட்­டுள்­ள­தாக படல்­கும்­புர பொலிஸார் நடத்­தி­யுள்ள ஆர்ம்­ப­கட்ட விசா­ர­ணைகளில் இருந்து தெரி­ய­வந்­துள்­ளது.

நேற்று முன் தினம் மாலை இந்த சம்­ப­வ­மா­னது சிறு­மியின் வீட்­டி­லேயே இடம்­பெற்­றுள்ள நிலையில் சம்­பவம் இடம்­பெறும் போது வீட்டில் குறித்த இரு சிறு­மி­ய­ரையும் தவிர வேறு எவரும் அங்கு இருக்­க­வில்லை எனவும் அறி­ய­மு­டி­கின்­றது.

நேற்று முன் தினம் குறித்த சிறு­மி­யரின் தந்தை ‘ பூந்தி ‘ எனப்­படும் இனிப்புப் பொருள் பார்சல் ஒன்றை வீட்­டுக்கு வாங்கி வந்­துள்­ள­துடன் அதில் சிறி­ய­தொரு பகு­தியை அக்­கா­வுக்கும் ஏனைய பெரும்­பா­லான பகு­தியை தங்­கைக்கும் பிரித்­துக்­கொ­டுத்­துள்ளார்.

இந்த சம்­ப­வத்தில் அக்­கா­வுக்கும் தங்­கைக்கும் இடையே மனக்­க­சப்பு ஏற்­பட்­ட­தா­கவும் இதனை அடுத்தே இந்த கத்­திக்­குத்து தாக்­குதல் இடம்­பெற்­றி­ருக்க வேண்டும் எனவும் சிறு­மி­யரின் தந்தை ஊட­கங்­க­ளி­டமும் பொலி­ஸா­ரி­டமும் தெரி­வித்­துள்ளார்.

எவ்­வா­றா­யினும் இந்த சிறு­மி­யரின் தாய் வெளி நாடொன்றில் வேலை செய்து வந்­துள்ள நிலையில் அண்­மையி­லேயே நாட்­டுக்கு திரும்­பி­யி­ருந்­த­தா­கவும் மீண்டும் வெளி நாடு செல்ல தயா­ராக இருந்­த­தா­கவும் தெரி­ய­வ­ரு­கின்­றது.

இந்த நிலையில் நீண்­ட­கா­ல­மாக மனதில் இருந்து வந்த ஆத்­திரம் ஒன்றின் வெளிப்­பா­டாக கூட இந்த சம்­பவம் இருக்­கலாம் என குறிப்­பிடும் பொலிஸார் சம்­பவம் தொடர்பில் விரி­வான விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ளனர்.

கத்­திக்­குத்­துக்கு இலக்­காகி சிறிது நேரத்தில் அந்த சிறுமி படல்­கும்­புர வைத்­தி­ய­சா­லைக்கு கொண்­டு செல்­லப்­பட்­டுள்ள நிலையில் சிகிச்சை பல­னளிக்­காமல் அவர் உயி­ரி­ழந்­துள்­ள­தா­கவும் சிறுமியின் உடலில் சுமார் 9 குத்துக் காயங்கள் காணப்­பட்­ட­தா­கவும் வைத்­தி­ய­சா­லையின் பேச்­சாளர் ஒருவர் கேச­ரிக்கு குறிப்­பிட்டார்.

எவ்வாறாயினும் கைது செய்யப்பட்ட 13 வயதான அக்கா நேற்று மாலை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட இருந்த நிலையில் மஜிஸ்திரேட் விசாரணைகள் மொனராகலை நீதிவான் நீதிமன்றினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

படல் கும்புர பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திற்கு மென்பான போத்தல்களை ஏற்றிச் சென்ற கனரக வாகனம் குடை சாய்ந்தது: குரணையில் சம்பவம்

22-08-2014

யாழ்ப்பாணத்திற்கு மென்பான போத்தல்களை ஏற்றிச் சென்ற கனரக வாகனம் ஒன்று புதன்கிழமை காலை குடை சாய்ந்ததாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நீர்கொழும்பு – சிலாபம் பிரதான வீதியில் குரணை பிரதேசத்தில் இடம்பெற்றது. கனரக வாகனத்தின் ஒரு பக்க டயர் (சில்லு) கழன்றதன் காரணமாக சாரதிக்கு வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் வாகனம் குடை சாய்ந்துள்ளதாக தெரிய வருகிறது.

விபத்து காரணமாக கனரக வாகனத்தில் இருந்த மென்பான போத்தல்கள் வீதியில் சிதறி விழுந்து காணப்பட்டன. விபத்து காரணமாக எவருக்கும் காயம் ஏற்படவில்லை. நீர்கொழும்பு பொலிஸார் விபத்து தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கண்ணில் மிளகாய்த்தூள் தூவி கொள்ளையர்கள் கைவரிசை: முல்லைத்தீவில் பெண்ணிடமிருந்து பணம் அபகரிப்பு

மீளக்­கு­டி­ய­மர்ந்­த­வர்­க­ளுக்­கான நிரந்­தர வீட்­டுத்­திட்­டத்­திற்­கான பணத்தை முல்­லைத்­தீவு வங்­கி­யொன்­றி­லி­ருந்து பெற்­றுக்­கொண்டு வீடு திரும்பிக்கொண்டி­ருந்த போது மிள­காய்த்­தூளைத் தூவிய மர்ம நபர்கள் அப்­பெண்­ணி­ட­மி­ருந்து பணத்­தையும் பறித்துக் கொண்டு தப்­பி­யோ­டி­யுள்­ளனர்.

முல்­லைத்­தீவு குமா­ர­புரம் பகு­தியில் நேற்று நண்­பகல் இடம்­பெற்ற இச்­சம்­ப­வத்தில் அப்­ப­கு­தியைச் சேர்ந்த குமார் இலட்­சு­மி­தேவி (வயது 35) என்ற பெண்ணி­ட­மி­ருந்தே பணம் கொள்­ளை­ய­டிக்­கப்­பட்­டுள்ளது.

இச் சம்­பவம் தொடர்­பாக மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

குமா­ர­பு­ரத்தில் வசித்து வரு­கின்ற பெண்ணொ­ருவர் இடம்­பெ­யர்ந்­த­வர்­க­ளுக்­கான வீட்­டுத்­திட்ட கொடுப்­ப­னவை முல்­லைத்­தீவு நக­ரி­லுள்ள வங்கியொன்றில் பெற்றுக் கொண்டு துவிச்­சக்­கர வண்­டியில் திரும்­பி­யுள்ளார்.

இதன்­பொ­ழுது குறித்த பெண்ணை மோட்டார் சைக்­கிளில் பின் தொடர்ந்து சென்ற இரு மர்ம நபர்கள் குறித்த பெண்ணின் கண்களில் மிள­காய்த்­தூளைத் தூவி­விட்டு அவ­ரி­ட­மி­ருந்து பணத்தை பறித்துக் கொண்டு தப்பியோடியுள்ளனர். முல்லைத்தீவுப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version