Site icon ilakkiyainfo

‘இது நம்ப ஆளு சிம்பு’ -நயனின் சொந்த வாழ்க்ககையா?

காதலை நிறைய பாத்­தாச்சு. ஆனா லும், அழ­கிய வண்­ணங்கள் காதலில் அப்­ப­டியே இருக்கு. நான் ஓவி­ய­னாக இருந்­தி­ருந்தால் தூரிகை எடுத்தி­ருப்பேன். இசைக் கலை­ஞ­னாக இருந்­தி­ருந்தால் வாசித்துக் காட்­டி­யி­ருப்பேன்.

சினிமா இயக்­கு­ந­ராக இருப்­ப­தனால் படம்­பி­டித் துக் காட்­டு­கின்றேன். அது தான் “இது நம்ம ஆளு” என்­கிறார் இயக்­குநர் பாண்­டிராஜ். அவர் வழங்­கிய நேர்­காணல் பின்­வ­ரு­மாறு,

பிரிஞ்­ச­வங்­களை சேர்த்துப் படம் எடுத்து எங்­களைத் தூண்­டு­றீங்க?

“படத்­துல ஒரு இடத்­தில சூரிக்­கிட்டே நயன் கேட்­பாங்க.” இந்த சிம்பு எப்­ப­டின்னு. சூரி சொல்வார் கொஞ்சம் ‘சென்­சிட்டிவ்’, கொஞ் சம் ‘பொஸிட்டிவ்’. அவன் நல்லா இருந்தா நாலு பேர் நல்லா இருப்­பாங்க.

பிடிச்­ச­வங்க மூஞ்­சி­யில சிரிப் பைப் பார்க்­க­ணும்னா அவன் என்ன வேணாலும் பண்­ணுவான். எதையும் தலையில் ஏத்­திக்­க­மாட் டான். ஒரே வரியில் சொல்­ல­னும்னா ஒரு அல்­பத்­தனம். சின்­னத்­தனம் எட்­டிப்­பார்க்­காத மனு­ஷன்னா இவன் தான்னு சொல்வார்.

மறு­ப­டியும் அவர் மைனஸ் சொல்­லுங்­கன்னு கேட்­பாங்க. “’கான்ட்­ர­வர்சி’ மன்னன் தண்ணி அடி ச்சா அலைப்­பறை கொடுப்பான் பாருங்க.. சொன்ன நேரத்­திற்கு வர­மாட்டான். அவன் நினைச்ச நேரத்­துக்­குத்தான் வருவான்.

இப்­பல்லாம் மாறிட்­டேன்னு சொல்றான். போகப் போகத்தான் தெரியும். நமக்­கெல்லாம் அடிக்­கடி கோபம் வரும்னா. அது­மா­திரி அவ­னுக்கு அடிக்­கடி காதல் காதல் வரும்னு சொல்வார்.

“அவரை இம்ப்ரஸ் பண்­றது எப்­ப­டின்னு அடுத்தக் கேள்வி வரும்” அவனை இம்ப்ரஸ் பண்­ற­துங்­கிற கதையே வேண்டாம். காதல்ங்­கிற ஒரு விதை போதும். அவுட்­டா­கி­டு­வான்னு” சூரி சொல்வார். இப்­ப­டித்தான் கதையே போகும். இவங்க இரண்டு பேரோட காதல்­தாங்க கதை.

“ரெண்டு பேரும் திரும்ப சேர்ந்து வந்த பீல் எப்­ப­டி­யி­ருக்கு?”

“ட்ரெய்லரை காட்­டினால் சூர்யா, ஆர்யா, சந்­தானம், சசி­குமார், சுசீந்­தின்னு எல்­லா ரும் பாராட்டித் தள்­ளிட்­டாங்க. நய­னுக்கு ‘வட்ஸ் அப்ல’ டிரெய்­லரை அனுப்­பினால், “எனக்கு ஒரு நல்ல படம் கொடுத்­திட்­டீங்க சார்னு” உருகி­னாங்க.

அவங்க ரெண்டு பேருக்கும் தனித்­த­னியா 20 நிமிஷம் தான் கதை சொல்­லி­யி­ருப்பேன். அந்த 20 நிமி­ஷமும் ரெண்டு பேரும் சிரிச்­சுக்­கிட்டே தான் இருந்­தாங்க.

இதில் பல இடங்­களில் அவங்க வாழ்க்­கையை திரும்பிப் பார்த்­தாங்­கன்னு நினைக்­கிறேன். அவங்க லைப் இதில் இருக்கும் போது நாம் நடிப்­புக்குக் கஷ்­டப்­படத் தேவை­யில்லை. அது தான் நடந்­தது. நிறைய தடவை ‘மொனிட்டர்’ போகும் போதே ஷாட் ஓகே பண்­ணி­யி­ருக்­கிறேன். “ஓகே…. ஷாட்­டுக்குப் போக­லாமா”ன்னு கேட்டால் எடுத்­தாச்சு சொல்­லுவேன்.

கெமரா மேன் பால­சுப்­பி­ர­ம­ணியம் கெம­ராவை ஆன்ல வச்­சு­கிட்டே இருப்­பாரு. நடுவே எங்க சிரிச்­சாலும் அவங்க விளை­யா­டி­னாலும் அது பட­மா­கிக்­கிட்டே இருக்கும். நயன் சொந்­தக்­கா­ரங்­க­கிட்ட போன்ல பேசு­றதைக் கூட அந்த வெள்ளைச் சிரிப்­புக்­காக எடுத்து வைப்போம்.

நிறைய பேர் என்­னிடம் “அவங்க ரெண்டு பேரும் கல்­யாணம் பண்­ணி­டு­வாங்­களா?”ன்னு கேட்­டுட்டே இருக்­காங்க. அது அவங்க சொந்த விஷ யம் .எனக்கு அவங்க மைலா, சிவா”

“சூரி முதல் தட­வையா சிம்பு கூட சேர்ந்­தி­ருக்­காரே….”

சூரி நமக்கு செட்­டா­வா­ரான்னு சிம்­புக்கு சந்­தேகம் இருந்­தது. சந்­தா­னத்தை   நானும் என்னை சந்­தா­னமும் நல்லா புரிஞ்­சி­ருக்­கோ­மேன்னு சொன்னார். முதல் நாளி­லேயே அந்த ‘டவுட்’ வில­கி­டுச்சு.

தூக்கிக் கட்­டின வேட்­டியும், பெரிய மீசையும், புழுதி அப்­பின காலுமா சூரியை பார்க்க முடி­யாது. ஐ.டி பையன் இரண்டு பேருக்கும் ஒரே பேச்சு. நக்கல், கிண்டல் தான். இனிமே சூரி ‘ஓல் ரவு ண்டர்’.

Thagadu Thagadu Audio Launch

Exit mobile version