15 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில்  27 வயது பகுதிநேர ஆசிரியை  வெலிகாமம் போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

பாதிக்கப்பட்ட சிறுவன்  மற்றும் அவனின் பெற்றோர் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய குறித்த ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த சிறுவன் ஒக்டோபர் 06 ஆம் தகதி ஆசிரியையின் வீட்டிற்கு  பகுதிநேர வகுப்பிற்காக சென்றுள்ளார்.. வகுப்பைத் தொடர்ந்து சிறுவன் வீடு திரும்பாததால், சிறுவனின் தாய் ஆசிரியையின் வீட்டிற்குச் சென்று சிறுவன் குறித்து விசாரித்துள்ளார்.

எனினும் சிறுவனும் ஆசிரியையும் வீட்டில் இருக்கவில்லை. இதனையடுத்து பதட்டமடைந்த சிறுவனின் தாய் வெலிகாமா பெலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் ஆசிரியை சிறுவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது.

குறித்த ஆசிரியை தன்னை கொழும்பு மற்றும் கண்டியில் உள்ள ஹோட்டல்களுக்கு அழைத்துச் சென்றதாக சிறுவன் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

சிறுவனின் வாக்குமூலத்திற்கு அமைய குறித்த ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார்.