ilakkiyainfo

ஜம்மு|காஷ்மீர்|லடாக்: புவியியல் முதல் பொருளாதாரம் வரை அறியவேண்டிய வேறுபாடுகள்!

ஜம்மு|காஷ்மீர்|லடாக்: புவியியல் முதல் பொருளாதாரம் வரை அறியவேண்டிய வேறுபாடுகள்!
August 09
02:35 2019

10 வருடங்களுக்கு முன்புவரை காஷ்மீரில் 79 சதவிகித மக்கள் வேலைக்குச் செல்பவர்களாக இருந்தார்கள். ஆனால், இன்று 59 சதவிகிதமாக அது குறைந்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் லடாக்

நாட்டின் மிக முக்கியப் பேசுபொருளாக அமைந்துள்ளது, ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா. மக்களவையில் 370 பேரின் ஆதரவுடன் பிரிவு 370 (1) நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

ஜம்மு - காஷ்மீர்
ஜம்மு – காஷ்மீர்

ஜம்மு காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டதற்கும் தற்போது அது யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டிருப்பதற்கும் பின்னணியில் அதன் சமூகப் பொருளாதாரக் காரணிகளுக்கும் புவியியல் எல்லைகளுக்கும் மிகப்பெரிய பங்கு உண்டு.

புவியியல் மற்றும் காலநிலை

ஜம்மு

2014 வரை மொத்தம் 13 மாவட்டங்களை மட்டுமே கொண்டிருந்த ஜம்மு காஷ்மீரில், 2015-ல் குலாம் நபி ஆசாத் தலைமையிலான அமைச்சரவையின் கீழ்தான் கூடுதலாக 7 மாவட்டங்கள் சேர்க்கப்பட்டன.

அதன்படி காஷ்மீரில் பந்திபூர், சோபியான், குல்காம், கந்தேர்பால் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களும் ஜம்முவில் சம்பா, கிஷ்வார், ரம்பன் உள்ளிட்ட பகுதிகளும் சேர்க்கப்பட்டன.

தற்போது 10 மாவட்டங்களைக் கொண்டுள்ள ஜம்முவில் மட்டும் மொத்தம் 53 லட்சம் மக்கள் வாழ்கிறார்கள்.

இந்தப் பிரதேசங்களில் ஜம்முவில்தான் அதிகமான மக்கள்தொகை காணப்படுகிறது. பாரதிய ஜனதா கட்சியின் வாக்குவங்கி ஜம்மு பகுதிதான்.

ஜம்மு
ஜம்மு

இங்கிருப்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள். ஜம்முவின் பெரும்பான்மையான மக்கள் டோக்ரி (Dogri) மொழியைப் பேசவும் எழுதவும் பயன்படுத்துகிறார்கள்.

ஜம்முவில் 1,000 ஆண்களுக்கு 863 பெண்கள் என்கிற கணக்கில் பாலின விகிதம் உள்ளது. காலநிலையைப் பொறுத்தவரை டெல்லி, மும்பை போன்ற பெருநகரங்களைப் போல ஜம்முவில் வெயிலும் குளிரும் சமஅளவில் இருக்கும்.

வெயில் காலத்தில் அதிகபட்சமாக 42° டிகிரி செல்சியஸும், குளிர் காலத்தில் குறைந்தபட்சமாக 7° செல்சியஸும் இருக்கும்.

காஷ்மீர்

அதேபோல் 10 மாவட்டங்களைக் கொண்டுள்ள காஷ்மீரில், 70 லட்சம் மக்கள் வாழ்கிறார்கள். இங்கு வாழும் பெரும்பான்மையான மக்கள் இஸ்லாமியர்கள்.

தவிர, நான்கு சதவிகித மக்கள் மட்டுமே இந்துக்கள். அவர்களுள் பெரும்பான்மையானவர்கள் அரசு வேலையில் உள்ளவர்கள்.

ஜம்முவில் வாழும் பெரும்பான்மையான இந்து மக்கள் 1990-களில் காஷ்மீரிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள்.

காஷ்மீர்
காஷ்மீர்

காஷ்மீரில் உள்ளவர்கள் காஷ்மீரி (Kashmiri) என்கிற மொழியைப் பேசுவதற்கும் உருதுவை எழுதுவதற்கும் பயன்படுத்துகிறார்கள்.

காஷ்மீரி மொழிக்கு எழுத்து வடிவம் கிடையாது. காஷ்மீரில் 1,000 ஆண்களுக்கு 860 பெண்கள் என்கிற கணக்கில் பாலின விகிதம் உள்ளது.

காலநிலைக் கணக்கீட்டில் காஷ்மீரில் எப்போதும் குளிரும் ஈரப்பதமும் நிறைந்தே இருக்கும். அங்கு அதிகபட்சமாக வெயில் காலத்தில் 32° செல்சியஸும் குறைந்தபட்சமாக குளிர் காலத்தில் -18° செல்சியஸும் இருக்கும். ரயேசி, உதம்பூர், ராஜோரி போன்று உயரமான இடங்களில் பனி மிகுதியாகப் பெய்யும்.

லடாக்

ஜம்மு மற்றும் காஷ்மீரைத் தவிர, தற்போது மூன்றாவது யூனியன் பிரதேசமாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது,

லடாக். இரண்டு மாவட்டங்களை மட்டுமே கொண்டுள்ள லடாக்கில், 2.74 லட்சம் மக்கள் மட்டுமே வாழ்கின்றனர்.

மக்கள்தொகை குறைவாகக் காணப்படும் பகுதியும் இதுதான். இங்குள்ள பெரும்பான்மையான மக்கள் பௌத்தத்தைத் தழுவியவர்கள்.

லடாக்கில் உள்ள மக்கள் லடாக்கி (Ladakhi) என்கிற திபெத்திய மொழியைப் பேசுவதற்கும் எழுதுவதற்கும் பயன்படுத்துகிறார்கள்.

இங்குள்ள பாலின விகிதத்தைக் காணும்போது லடாக்கில் 1,000 ஆண்களுக்கு 946 பெண்கள் வீதம் உள்ளனர்.

லடாக்
லடாக்

ஒப்பிட்டுப் பார்த்தால், ஜம்முவிலும் காஷ்மீரிலும் பெண்களின் விகிதம் லடாக்கைக் காட்டிலும் மிகக் குறைவாகவே உள்ளது.

காலநிலையைப் பொறுத்தவரை ‘குளிரும் பாலைவனம்’ என்று அழைக்கக்கூடிய லடாக்கில், சராசரியாக 20° செல்சியஸ் தட்பவெப்பம் காணப்படும். லடாக் மாகாணத்தில் உள்ள லே மற்றும் கார்கிலில் குறைந்தபட்சமாகத் தட்பவெப்பம் -30° செல்சியஸ் வரை பதிவாகியுள்ளது.

உணவு மற்றும் உடை பழக்கவழக்கம்

உணவுப் பழக்கவழக்கத்தில் இவர்களுக்குள் முற்றிலும் வேறுபாடு உண்டு. காஷ்மீர் மக்கள் இறைச்சிகளை விரும்பி உண்பார்கள்.

குறிப்பாக, மட்டனால் செய்யப்படும் ரோகன் ஜோஷ், கலியா, சோக் சர்வான், கபர்காஹ், மீனால் செய்யப்படும் டோய் மச் போன்ற உணவுகள் மக்களிடையே பிரபலம்.

காஷ்மீரில் கேவா என்கிற தேயிலை பாரம்பர்ய முறைப்படி தயாரிக்கப்பட்டு அனைவரின் வீடுகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இது அவர்களிடையே மிகவும் பிரபலம். பிரெட் வகைகளுள் லவாஸ், கிர்டா போன்றவையும் மிகவும் பிரபலம். ஜம்முவில் மூன்று உணவுகள் மிகவும் பிரபலம்.

பாலைப் பயன்படுத்தி செய்யக்கூடிய கல்ஹாரி குல்ச்சா மிகவும் பிரபலம். காஷ்மீரில், இதை ‘மூஷ்க்ராஜ்’ என்றழைக்கின்றனர். கறி உணவு ஜம்மு பகுதிகளில் பயன்பாட்டில் இல்லை.

காஷ்மீர் ரொட்டி
காஷ்மீர் ரொட்டி
பனிக்காலங்களில் -30 டிகிரிவரை செல்லும் தட்பவெப்பத்தில் காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் அந்த மக்களின் உடல்நிலையைக் காப்பாற்றுவது மாட்டுக்கறி உணவு மட்டுமே.

லடாக்கில் திபெத்திய பாரம்பர்யம் பரவியிருப்பதால் சைனா, திபெத், நேபாளம், பூடான் போன்ற நாடுகளின் உணவும் இங்கு பரவலாக உண்ணப்படுகிறது. டிங்மோ, துக்பா, காம்பிர், சோளக் மற்றும் பட்டர் டீ போன்றவை இங்கே உண்ணப்படுகின்றன.

காஷ்மீர் மக்களின் பாரம்பர்ய உடை, ‘ஃபெரான்’ என்று அழைக்கப்படும். முழங்காலுக்குக் கீழே தொங்கும் இந்தக் குளிர்கால உடையை, முஸ்லிம் மக்கள் ஃபெரானுக்கு மேல் சல்வாரும் இந்து மக்கள் பைஜாமாவும் அணிந்து அழகு பார்த்துக்கொள்வார்கள்.

கரக்குல் (Karakul) என்கிற தொப்பியையும் பாரம்பர்யமாக அவர்கள் அணிவார்கள். ஜம்முவில் பெண்கள் காக்ரா சோளியை அணிவார்கள்.

ஆண்கள் ஜம்மா (முகலாய பாணி சட்டை), குர்தா போன்றவற்றை அணிவார்கள். லடாக் மக்கள் கவ்ச்சா (Goucha) என்கிற அடர்த்தியான கம்பளி அங்கியை அணிவார்கள்.

பெண்களும் இதைப்போலவே ஓர் அங்கியை அணிவார்கள். அதன்பெயர் குண்டாப் (Kuntop). இதுதவிர, பனிக்காலங்களில் -30 டிகிரிவரை செல்லும் தட்பவெப்பத்தில் காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் அந்த மக்களின் உடல்நிலையைக் காப்பாற்றுவது மாட்டுக்கறி உணவு மட்டுமே.

மாட்டுக்கறிக்கு எதிரான போர் பிற மாநிலங்களில் விஸ்வரூபம் எடுத்திருக்கும் நிலையில், தற்போது யூனியன் பிரதேசமாக்கப்பட்டிருக்கும் காஷ்மீரில் இனி மாட்டுக்கறிக்கான தடை எப்படிப் பார்க்கப்படும் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரம்

10 வருடங்களுக்கு முன்புவரை காஷ்மீரில் 79 சதவிகித மக்கள் வேலைக்குச் செல்பவர்களாக இருந்தார்கள். ஆனால், இன்று 59 சதவிகிதமாக அது குறைந்துள்ளது.

 

வேலைவாய்ப்பு மையத்தில் காஷ்மீர் மக்கள்
வேலைவாய்ப்பு மையத்தில் காஷ்மீர் மக்கள்

“ஜம்மு காஷ்மீரின் பொருளாதாரம் வரும் ஐந்தாண்டுகளில் உயரும்” என்கிறார், மத்திய அமைச்சர் அமித் ஷா.

அப்படியென்றால், இதுநாள்வரை அங்கே எப்படி இருந்தது என்கிற கேள்வி நம்முன் எழுகிறது. 10 வருடங்களுக்கு முன்புவரை காஷ்மீரில் 79 சதவிகித மக்கள் வேலைக்குச் செல்பவர்களாக இருந்தார்கள்.

ஆனால், இன்று 59 சதவிகிதமாக அது குறைந்துள்ளது. மக்களிடையிலான பிளவு அதற்குக் காரணமாக ஒருபக்கம் கூறப்பட்டாலும், மறுபக்கம் அரசு அளவிலான ஊழலும், அரசுப் பணிகளை நிரப்புவதில் நிகழும் குளறுபடிகளும் பிரதானக் காரணங்களாகச் சொல்லப்படுகின்றன.

பல்கலைக்கழக அளவில் பட்டப்படிப்புகளை முடித்த இளைஞர்கள், தங்களது பெற்றோர்கள் சிறு கடைகள்மூலம் ஈட்டும் பொருளாதாரத்தை நம்பியிருக்கும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.

இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையத்தின் 2018-ம் வருட ஆய்வின்படி ஜம்மு காஷ்மீர், அதிக அளவிலாக 12.13 சதவிகத வேலையின்மையைச் சந்தித்துள்ளது.

காஷ்மீருக்காகப் போராட்டம்
காஷ்மீருக்காகப் போராட்டம்

ஜம்முவில் 63.5 சதவிகித மக்களும் லடாக்கில் 76 சதவிகித மக்களும் வேலைக்குச் செல்பவர்களாக இருக்கிறார்கள். காஷ்மீரில் வங்கிகளை உபயோகிக்கும் மக்களின் எண்ணிக்கை 2001-ல் 24 சதவிகிதமாக இருந்தது;

தற்போது அது 60 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. லடாக்கின் மக்கள் 87 சதவிகிதம் பேர் வங்கிகளைப் பயன்படுத்துகிறார்கள். குறைந்த மக்கள் தொகையும் லடாக்கின் முன்னேற்றத்துக்குப் பலவகையில் காரணம்.

ஜம்மு மக்களிடம் மசோதா குறித்து வரவேற்பு காணப்படுகிறது, “இனி எங்களுக்கான வணிக மற்றும் தொழில் வாய்ப்புகள் அதிகரிக்கும்” என்பதுதான் அவர்கள் சொல்லும் ஒற்றைக் காரணம்.

லடாக் மக்களும் தங்களுக்கான 70 ஆண்டுக்காலப் போராட்டத்தின் பலனாக யூனியன் பிரதேச அந்தஸ்து கிடைத்திருப்பதாக இதனை வரவேற்கின்றனர்.

ஆனால், காஷ்மீரிலோ இதை எதிர்க்கிறார்கள். ‘‘ஏற்கெனவே வேலை வாய்ப்பு இல்லாமல் தவிக்கும் காஷ்மீர் மக்களிடம் இன்னும் அதிகமான பொருளாதார நெருக்கடியைத்தான் அந்நிய முதலீடுகள் உண்டு பண்ணும்” என்று டெல்லியில் படிக்கும் காஷ்மீரைச் சேர்ந்த மாணவர்கள் கூறுகிறார்கள்.

ஜம்முவில் கொண்டாட்டம்
ஜம்முவில் கொண்டாட்டம்

புவியியல் சார்ந்த பிரிவினைதான் இதுநாள்வரை காஷ்மீரின் விதியை நிர்ணயித்தது. புவியியல் சார்ந்து கொண்டுவரப்பட்டிருக்கும் மாற்றம்தான் இனிமேலும் ஜம்மு|காஷ்மீர்|லடாக் பகுதிகளின் விதியை இனிவரும் காலங்களில் நிர்ணயிக்கப்போகிறது.

அடுத்து வரும் ஐந்தாண்டுகள் அமித் ஷா சொன்னதுபோல இருக்குமா அல்லது நெருக்கடியை மேலும் அதிகரிக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

September 2020
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 

Latest Comments

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com