இலங்கை அணியின் இளம் வேகப் பந்து வீச்சாளர் மத்தீஷா பதிரானா 175 கிலோ மீற்றர் வேகத்தில் பந்துப் பரிமாற்றம் மேற்கொண்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

 

19 வயதுக்குட்பட்ட இளையோர் ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் நேற்று இடம்பெற்ற 7 ஆவது போட்டியிலேயே மத்தீஷா பதிரானா இவ்வாறு பந்துப் பரிமாற்றம் மேற்கொண்டுள்ளார்.

இந்திய அணி துடுப்பெடுத்தாடும்போது 4 ஆவது ஓவருக்காக பந்துப் பரிமாற்றம் மேற்கொண்ட மத்தீஷா பதிரானா யஷஸ்வி ஜெய்ஸ்வாலை நோக்கிப் பந்துப் பரிமாற்றம் மேற்காண்டனர்.

எனினும் இந்தப் பந்து உதிரிப் பந்தாக நடுவரால் அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் குறித்த பந்துப் பரிமாற்றத்தின் வேகமானது மணிக்கு 175 கிலோ மீற்றராக (108 மைல்) பதிவானது.

EOqY2j4WoAAkM7v

இதற்கு முன்னர் சர்வதேச கிரிக்கெட்டில் மிக வேகமாக பதிவுசெய்யப்பட்ட பந்துப் பரிமாற்றமாக பாகிஸ்தான் அணியின் சோயிப் அக்தரின் பந்து வீச்சு பதிவாகியது.

அவர் கடந்த 2003 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 161.3 கிலோ மீற்றர் வேகத்தில் (100 மைல்) பந்துப் பரிமாற்றம் மேற்கொண்டார்.

இந் நிலையில் அக்தரின் இந்த சாதனையை 17 வயதான மத்தீஷா பதிரானா 17 வருடங்களின் பின்னர் முறியடித்துள்ளார்.

குறித்த பந்து வீச்சின் வேகமானது தொழில்நுட்பக் கோளாறு  காரணமாக பதிவாகி இருக்கக்கூடும் என விமர்சனங்கள் எழுந்தபோதிலும் ஐ.சி.சி. சார்பில் இதற்கு மறுப்பு எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.