ilakkiyainfo

விக்ரம் பிறந்தநாள்: டப்பிங் கலைஞர் முதல் முன்னணி நடிகர் வரை- ‘சீயான்’ விக்ரமின் கதை – பிறந்தநாள் பகிர்வு

விக்ரம் பிறந்தநாள்: டப்பிங் கலைஞர் முதல் முன்னணி நடிகர் வரை- ‘சீயான்’ விக்ரமின் கதை – பிறந்தநாள் பகிர்வு
April 17
22:59 2020

ஒரு கதாபாத்திரத்திற்காக எவ்வளவு வேண்டுமானாலும் மெனக்கெடும் கலைஞராக அறியப்படுபவர் ‘விக்ரம்’. இன்று (ஏப்ரல் 17)அவருடைய 54ஆவது பிறந்தநாள். விக்ரமின் பிறந்தநாளை அவருடைய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகிறார்கள்.

அவர் கடந்து வந்த பாதை குறித்த ரீவைண்ட்ர் இதோ!

  • விக்ரமின் இயற்பெயர் கென்னடி ஜான் விக்டர். இவர் பிறந்த ஊர் சென்னை.
  • தன்னுடைய பள்ளிப் பருவத்திலேயே கராத்தே, நீச்சல், குதிரையேற்றம் போன்றவற்றைக் கற்றுத் தேர்ந்தார்.

 

  • திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை விக்ரமிற்கு சிறு வயதிலேயே இருந்தாலும் அவருடைய தந்தையின் வற்புறுத்தல் காரணமாக முதுகலை வணிக மேலாண்மை படிப்பை சென்னையிலுள்ள லயோலா கல்லூரியில் படித்தார்.
  • கல்லூரியில் படிக்கும்போது ஒரு வாகன விபத்தில் படுகாயமடைந்து பல அறுவை சிகிச்சைகள் செய்து கொண்டு மீண்டு வந்தார்.
  • சினிமா பின்னணியிலிருந்து வந்தவராக இருந்தாலும் தன்னை ஒரு நடிகராக நிலைநிறுத்துவதற்கு ஆரம்ப காலகட்டத்தில் மிகவும் சிரமப்பட்டிருக்கிறார்.
  • பின்னர் தன்னுடைய கவனத்தை டப்பிங் பக்கம் செலுத்தியிருக்கிறார். நடிகர் அஜித்திற்கு அவருடைய முதல் படமான ‘அமராவதி’யில் விக்ரம் தான் டப்பிங் கொடுத்திருக்கிறார். அவ்வளவு ஏன் காதலன் படத்தில் பிரபுதேவாவின் குரலுக்கு சொந்தக்காரரும் விக்ரம் தான்.

  • டப்பிங்கில் மும்முரமாக இருந்த இவரை சேது படம் மீண்டும் நடிப்புத் துறைக்குள் கொண்டுவந்தது. ‘கென்னி’ என நண்பர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட விக்ரமை ‘சீயான்’ என அவருடைய ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்ததும் இந்தப் படத்திற்கு பின்னர் தான்.
  • அந்நியன், காசி, தெய்வத்திருமகள் போன்ற படங்களில் இவருடைய நடிப்பு மக்களிடையே பாராட்டைப் பெற்றுத் தந்தது.
  • இவருடைய வெற்றிக்கான காரணம் அவருடைய அர்ப்பணிப்பு மட்டும் தான். ’ஐ’ படத்தில் நடிப்பிற்காக எவ்வளவு வேண்டுமானாலும் மெனக்கிடலாம் என்பதை நிரூபித்துக் காட்டிய நடிகர் இவர். திரைக்கதைக்காக எந்த வேடமானாலும் எடுத்து நடிக்கக்கூடிய கலைஞர் ஆவார்.

  • பிதாமகன் படத்திற்காக இவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. மேலும், தமிழ்நாடு மாநில அரசின் கலைமாமணி விருதும் இவருக்கு கிடைத்துள்ளது.
  • விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடித்து வெளியான ‘ஆதித்யா வர்மா’ படம் வெளியாகி பாராட்டைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
  • விக்ரம் தற்போது நடித்து வரும் ‘கோப்ரா’ படத்தின் இயக்குநர் அஜய் ஞானமுத்து விக்ரம் பிறந்தநாள் பரிசாக பொதுவாக அவருடைய ரசிகர்கள் பயன்படுத்தும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருக்கிறார். விக்ரம் இதற்கு முன்னதாக நடித்த கதாபாத்திரங்களை ஒன்றிணைத்து ஸ்பெஷல் போஸ்டராக அதை வடிவமைத்திருக்கிறார்.
  • விக்ரம் நடித்துக் கொண்டிருக்கும் ’கோப்ரா’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் 7 விதமான கேரக்டர்களில் விக்ரம் காட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

July 2020
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 

Latest Comments

இந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com