ilakkiyainfo

‘2-வது முறையாக வெற்றிப்பெற்ற ஜஸ்டின்’… ‘இருந்தும் முன்பைவிட குறைவு’… !

‘2-வது முறையாக வெற்றிப்பெற்ற ஜஸ்டின்’… ‘இருந்தும் முன்பைவிட குறைவு’… !
October 22
14:16 2019

கனடா நாட்டின் நாடாளுமன்றத் தேர்தலில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி, மீண்டும் வெற்றிப்பெற்றிருக்கிறது.

உலகளவில், முற்போக்கு சிந்தனையுள்ள தலைவர்களில் ஒருவராக, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பார்க்கப்பட்டு வருகிறார். இந்நிலையில், அவரது பதவிக்காலம் முடிய உள்ளதையொட்டி, கடந்த திங்கள்கிழமையன்று தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 338 இடங்களுக்கு நடைப்பெற்ற தேர்தலில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி, 156 இடங்களை பெற்று வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும், பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களைவிட, 14 இடங்கள் குறைவாகவே, ஜஸ்டின் ட்ரூடோவுக்கு கிடைத்துள்ளது.

_109320509_bddd769f-aca6-4af7-a335-ee189a71e9cdஇதனால் ஜஸ்டின் ட்ரூடோ, மைனாரிட்டி ஆட்சியை அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. பெரும்பான்மைக்கு 170 இடங்கள் தேவை என்ற நிலையில், அந்த எண்ணிக்கையை பெற சிறிய கட்சிகளின் உதவியை நாட உள்ளதாக தெரிகிறது. இந்திய வம்சாவளியினரான ஜக்மீத் சிங் தலைமையிலான புதிய ஜனநாயக கட்சி குறிப்பிடத்தக்க இடங்களை வென்றிருப்பதால், அக்கட்சியின் உதவியை நாட இருப்பதாகவும் கூறப்படுகிறது. கடந்த 2015-ல், ஜஸ்டின் ட்ரூடோ கட்சி 184 இடங்களில் வெற்றிப்பெற்றிருந்தது.

தனியார் நிறுவனம் மீதான ஊழல் வழக்கை விசாரிக்க தடை விதித்தது மற்றும் இனவெறியை தூண்டும் வகையிலான அவரது பழைய புகைப்படங்கள் வெளியானது ஆகியவை, இந்த தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோவின் செல்வாக்கு சரிய காரணமாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் எதிர்கட்சியான ஆண்ட்ரூ ஷீர் கன்சர்வேட்டிவ் கட்சி, கடந்த முறையை விட அதிக இடங்களில், சுமார் 121 இடங்களில் வென்றுள்ளது. தமிழர்கள் அதிகம் வசிக்கும் நாடாக கனடா உள்ளது குறிப்பிடத்தக்கது.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

October 2020
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 

Latest Comments

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com