ilakkiyainfo

2014 ஆம் ஆண்டுக்கான ‘சிறந்த பகுடி’ (joke) வெளியாகியுள்ளது!! (வீடியோ)

2014 ஆம் ஆண்டுக்கான ‘சிறந்த  பகுடி’ (joke) வெளியாகியுள்ளது!! (வீடியோ)
June 21
02:04 2014

பிரபாகரன் இருந்திருந்தால் எமக்கு இந்த அவலம் ஏற்பட்டிருக்காது’   என  வடமாகாணசபை  உறுப்பினர் அஸ்மினை   தர்க்கா நகர்  பேருவளையில்  வைத்து   முஸ்லிம் தாய்  ஒருவர்  கட்டிபிடித்து  கதறி அழுதவராம்??   இந்த  கதை  உங்களுக்கு  தெரியுமா?

இதுதான் 2014 ஆம் ஆண்டுக்கான..,   வடமாகாணசபை  உறுப்பினர் அஸ்மினால்  சொல்லப்பட்ட   சிறந்த பகுடிக் கதை.

தர்க்கா நகர்  பேருவளையில்  வைத்து   முஸ்லிம் தாய்  ஒருவர்… ‘என்னை நோக்கி ஓடி வந்து,    என் கழுத்தைப் பிடித்துக் கொண்டு பிரபாகரன் எங்கே? பிரபாகரன் எங்கே? அவர்  இருந்திருந்தால்  நாங்கள் இன்றைக்கு  இந்த நிலையில் இருந்திருக்க மாட்டோமே? அவர் எங்கே என என்னைக் கேட்டது  என்னை மிக உருக்கியது  என்று….,

அளுத்கம பகுதியில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற   இனவெறித்தாக்குதலை கண்டித்து இன்று யாழ்ப்பாணத்தில் போராட்டம் இடம்பெற்றது. அப்போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அஸ்மின்  இந்தக்  கதையை  அவுட்டு  விட்டிருக்கிறார்.  (நல்லா  கதை  சொல்லுகிறார்.  அஸ்வினிடம்  சீமான்  பிச்சை தான்  வாங்கவேண்டும்)

அடி ஆத்தி! இது  உலக அதிசயமான    கதையாக  இருக்கிறதே!!. அஸ்மின்  அண்ணா! நீங்கள் சொல்லும்  இக்கதை  உண்ணயைிலும்  உண்மையானதா? அல்லது  பொய்யிலேயே  பொய்யா?

சரி,  இக்கதை உண்மையானால்.. உங்களை  கட்டிப்பிடித்து  கதறியழுத  தாய்  யார்? அவரின்  பெயர்  என்ன?   அவர்  உங்களுக்கு  தெரிந்தவரா?  அவரின்  முகத்தை   ஒருமுறை உங்களால்  காட்டமுடியுமா?

வேறென்றுமில்லை.. பிரபாகரன்  பற்றி  பெருமையாக   சொன்ன  அந்த  தாய்க்கு   வாயில்  பால்  ஊற்றவேண்டும்.   அத்தோடு..,  புலம்பெயர்  தேசங்களில்  வாழும்  புலியாதரவு  தமிழர்களிடமிருந்து   அந்த தாய்  நிறைய  பணம்  பெற்றுக்கொள்ளவும்   வழியுண்டு,  அதுமட்டுமல்லாது    இந்த  கதையை  சொன்ன   உங்கள்  ‘வாய்’க்கும்  பால்  ஊற்றவேண்டும்.

அஸ்மின்  அண்ணா! உங்களை கட்டிபிடித்து  அழுத தாய்க்கு….  தேசிய  தலைவர்  பிரபாகரனால்     முஸ்லிம்களுக்கு செய்யப்பட்ட   நன்மைகள்  (கொடுமைகள் )  பற்றி   எதாவது  தெரியுமா?   தெரியாவிட்டால்  கேட்டுச்சொல்லுங்கள் . ஒரு  மில்லியனுக்கு  மேற்பட்ட   கதைகள் உண்டு.

இந்த செய்தியை   புலம்பெயர்  புலியாதரவு  இணையத்தளங்கள்  யாவும்   போட்டிபோட்டு  பிரசுரித்துள்ளன.   பிரபாகரனை  புனிதராக  காட்ட  ‘புலியாதரவு  ஊடகங்கள்’   படாதபாடுபடுகின்றார்கள்.  அதனால்தான்  இப்படியான   பொய்  செய்திகளுக்கு   முக்கியத்துவம்  கொடுத்து  பிரசுரிக்கின்றார்கள்.

முஸ்லிம்களுக்கு  ஏற்பட்ட  அசம்பாவிதங்களையிட்டு  புலியாதரவு ஊடகங்கள்  கண்ணீர்வடிக்கிறார்கள்  என்றால்….  ‘அது  ஆடு  நனைகின்றது  என…  ஓநாய்  அழுத கதைதான்’ என்பதை முஸ்லிம்  தரப்பினர்கள்  புரிந்துகொள்ளவேண்டும்.

முஸ்லிம் பெண்கள்  இரத்த சம்பந்தமில்லாத  ஆண்கள்  யாரையாவது  கண்டிபிடிப்பார்களா? அப்படியிருக்கையில்  எப்படி  அஸ்மினை ஒரு  முஸ்லிம் பெண்  கட்டிபிடித்து அழுதாள்?  என்பதை  இந்த  செய்தியை வாசிக்கும்   முஸ்லிம்கள் தான்  விளங்கப்படுத்தவேண்டும்

About Author

admin

admin

Related Articles

3 Comments

 1. Yaseer
  Yaseer June 21, 05:21

  Pirabaharan irunthirunthal naadu ithai wida naasamai poai irukkum…

  Reply to this comment
 2. arya
  arya June 22, 03:08

  1986ம் ஆண்டு கொடுங்கோலன் பிரபாகரன் கூட்டம் தன் சொந்த இனம் என்று கூட பார்க்காமல் உயிருடன் டயர் போட்டு தமிழ் இளைநர்களை எரிக்கும் போது வராத உணர்வு , 1991ம் ஆண்டு முஸ்லிம்களை உடுத்த உடுப்புடன் 24 மணி நேரத்தில் விரட்டி அடித்த போது வராத உணர்வு , 2009 க்கு முன் பட்ட காலத்தில் புலி கொலை வெறி கூட்டம் மூவின மக்களையும் ( கிறிஸ்த மக்களை புலிகள் கொலை செய்ய வில்லை , ஏனெனில் மேற்குலகின் எடு பிடிகளாக ஆசியாவில் புலிகள் வளர்க்க பட்டார்கள். ) கொலை செய்யும் போது வராத உணர்வு , இப்ப இந்த யாழ் பாணிகளுக்கு வந்திருக்கு , அதுவும் பயங்கரவாதத்தின் ஊற்றுகலான யாழ் பல்கலை கழகம் , ஆயர் இல்லம் என்பனவற்றில் இருந்து.

  ஆடு நனையுது என்று ஓநாய் அழுகின்றது , இவர்களின் திடீர் பாசத்துக்கு முஸ்லிம் சகோதரர்கள் வச பட்டால் அவர்கள் இன்னும் கஷ்டப்படுவார்கள் , என்ன பிரச்சனை என்றாலும் அரசுடன் பேசி , நாம் அனைவரும் இலங்கையர் என்ற மனப்பான்மையுடன் தீர்வு காண வேண்டும் , அந்நிய சக்தி களையோ , இனவாத அமைப்புகளையோ அல்லது புலன் பெயர் புலிகளின் ஆலசனையில் செயல் படும் யாழ் இன வாத குழுக்களையோ நம்பினால் அதோ கதிதான்.

  2009க்கு முன் இஸ்லாமிய மக்களை புலி பயங்கர வாதிகள் கொலை செய்யும் பொது அதை ஆதரித்தவர்கள் தான் இன்று தம் சுய நலன்களுக்காக அரசை எதிர்ப்பதற்காக இந்த பிரச்னையை பயன் படுத்த பார்கின்றர்கள் , இவர்களுக்கு மேற்குலகில் இருந்து பணமும் ஆலோசனைகளும் கிடைகின்றது .

  மிகவும் முக்கியமானது , தமிழர்கள் தம்மை இந்திய ஆதரவாளர்களாக காட்டுவதும் ( கிரிக்கெட்டில் கூட இந்திய அணி வென்றால் அதை கொண்டாடுவது ) , இஸ்லாமியர்கள் அரபு விசுவாசத்தை காட்டுவதையும் விடுத்து , இலங்கையர் அனைவரும் நாம் பிறந்த நாட்டுக்கு விசுவாசமாக இருக்க பழகி கொள்ள வேண்டும். இந்த நாட்டு கலாச்சாரத்தை ஏற்று நடக்க வேண்டும். நம் நாடு நன்றாக இருந்தால் தான் நம் தலை முறை நன்றாக இருக்கும் , இல்லையேல் புலன் பெயர் தமிழர்கள் போல் வெள்ளை காரனுக்கு குண்டி , கோப்பை கழுவவும் , அந்நிய தேசங்களில் கக்கூசு கழுவுவதும் தான் இலங்கையர்களின் கடமையாக மாறி போகும்.

  ஆர்யா

  Reply to this comment
 3. M.ரஹ்மான்
  M.ரஹ்மான் June 22, 06:23

  முஸ்லிம் பெண்கள் மஹரமில்லாத (இரத்த சம்பந்தமில்லாத) ஆண்களை பார்ப்பதையே இஸ்லாம் தடுத்துள்ளது. அப்படியிருக்கையில் கழுத்தை பிடித்து பிரபாகரன் எங்கே? என்று கேட்டாள் என்று வாய்க்கு வந்ததையெல்லாம் எழுத வேண்டாம்.

  Reply to this comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

January 2021
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Latest Comments

இந்திய மீனவர்களை இனி மீனவர்கள் என்று அழைக்காமல் " கடல் கொள்ளையர்கள் " என்று குறிப்பிட்டு , கடல் கொள்ளையர்களுக்கு...

அப்படியே அங்குள்ள புலன் பெயர் ஈன (ஈழ) தமிழர்களுக்கு கனடாவில் ஒரு " தமிழ் ஈழத்தையும் " கொடுத்து ,...

சாத்தான் ஒழிந்தது , மக்களே இதை 19 மே 2009ல் பயங்கரவாத கொடூர சாத்தன் ஒழிந்ததை கொண்டடாடியதை போல் கொண்டாடுங்கள்....

சீனாவை எதிர்த்த எவரும் வாழ்ந்தது கிடையாது அது தெரிந்து தான் நெப்போலியன் சீனாவை கைப்பற்றும் ஆலோசனை தந்த தளபதியை ஓங்கி...

கொரோனா பணத்தாசை பிடித்தவனை எல்லாம் திருத்தியிருக்கோ ??? போட்டொன்று போகும் போது கொண்டு போக ஒன்றும் இருக்காது...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com