Site icon ilakkiyainfo

ராதிகா சிற்­ச­பே­சனை நாடு கடத்­தா­தது ஏன்? – ஹரிகரன்

சர்­வ­தேச நெருக்­க­டிகள்  குறித்து அர­சாங்கம்  அச்சம் கொண்­டுள்­ளது என்­பதை, கனே­டிய நாடா­ளு­மன்ற உறுப்­பினர் ராதிகா சிற்­ச­பே­சனின் இலங்கைப் பய­ணத்தைக் கையாண்ட விதம் நன்­றா­கவே வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளது.

கனே­டிய நாடா­ளு­மன்ற உறுப்­பினர் ராதிகா சிற்­ச­பே­சனின் இலங்கைப் பயணம் கடந்த வாரம் கொழும்­பையும் கன­டா­வையும் பெரும் பர­ப­ரப்­புக்­குள்­ளாக்கி விட்­டது.

முன்­ன­றி­விப்­பின்­றியே அவர் இலங்­கைக்கு வந்­தி­ருந்­தாலும், அவ­ரது வருகை பற்­றிய தக­வல்கள் ஊட­கங்­களின் மூலம் வெளிச்­சத்­துக்கு வந்த பின்னர், அவ­ரது தனிப்­பட்ட பயணம் கூட பொது நிகழ்ச்­சி­நி­ர­லுக்­குட்­பட்ட ஒன்றாகிவிட்டது.

ஐந்து வயதில் மாவிட்­ட­பு­ரத்தில் உள்ள தமது வீட்டை விட்டு வெளி­யேறி, கன­டாவில் குடி­யே­றிய ராதிகா சிற்­ச­பேசன், கன­டாவின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக தமது சொந்த இடத்தை பார்­வை­யிட வந்­தி­ருந்தார்.

சுற்­றுலா விசாவில், தனிப்­பட்ட பய­ண­மாக இலங்கை வந்த அவரை, இரா­ணுவப் புல­னாய்வுப் பிரி­வி­னரும், அரச புல­னாய்வு முக­வர்­களும் நிழல் போலப் பின்­தொ­டர்ந்­தி­ருந்­தனர்.

நன்கு அறி­யப்­பட்ட ஒரு புலம்­பெயர் பிர­மு­க­ராக இருந்த ராதிகா சிற்­ச­பே­சனை, கன­டாவின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்­கான கட­வுச்­சீட்டைக் கொண்­டி­ருந்த அவரை, கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் குடி­வ­ ரவு அதி­கா­ரி­களால் இனங்­காண்­பது ஒன்றும் கடி­ன­மான காரி­ய­மில்லை.

பாது­காப்பு அமைச் சின் கீழ், அரச புல­னாய்வு அமைப்­பு­க­ளுடன் நேரடித் தொடர்­பு­டை­ய­தாக குடி­வ­ரவுத் திணைக்­களம் இருக்­கின்ற நிலையில், ராதிகா சிற்­ச­பே­சனால் ஒரு­போதும், ஒளிந்தோ மறைந்தோ இலங்­கைக்குள் வந்­தி­ருக்க முடியாது.

அவர் தன்னை வெளிப்­ப­டுத்­தியோ அல்­லது வெளிப்­ப­டுத்­தா­மலோ, அரச புல­னாய்வுப் பிரி­வு­களால் மோப்பம் பிடிக்­கப்­பட்டோ, அவரை புல­னாய்­வா­ளர்கள் பின்­தொ­டர்ந்­தி­ருக்­கலாம்.

கடந்த மாதம் 28 ஆம் திகதி எடிஹாட் விமா­னத்தில் கொழும்பு வந்த ராதிகா, மன்னார், கிளி­நொச்சிப் பய­ணங்­களை முடித்துக் கொண்டு, யாழ்ப்­பாணம் சென்ற பின்னர் தான், அவர் இலங்கை வந்த விவ­கா­ரமே ஊட­கங்­களில் வெளிச்சத்துக்கு வந்­தது.

அவர், ஆல­யங்­க­ளுக்குச் சென்ற போதும், இடம்­பெ­யர்ந்­தோரை சந்­திக்கச் சென்ற போதும், அவரைப் புல­னாய்­வா­ளர்கள் மொய்த்­தி­ருந்­தனர். அது­மட்­டு­மன்றி, அவர் தங்­கி­யி­ருந்த விடுதி கூட முழு­நேரக் கண்­கா­ணிப்­பி­லேயே இருந்துள்ள­தாகத் தக­வல்கள் கூறு­கின்­றன.

ஒரு கட்­டத்தில் அவர் விடு­தியில் இருந்து வெளி­யே­றவோ, யாரையும்  சந்­திக்­கவோ விடாமல் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­தாக பர­ப­ரப்புத் தகவல் வெளி­யாக, அது கனடா வரைக்கும் எதி­ரொ­லித்­தது. கனே­டிய அர­சாங்கம் உடனடியாகவே விழிப்­ப­டைந்து. கொழும்­புடன் தொடர்பு கொண்டு நிலை­மை­களை அறிந்து கொண்­டது.

தாம் ராதி­காவை தடுத்து வைத்­தி­ருக்­கவோ, கைது செய்ய எத்­த­னிக்­கவோ இல்லை என்று இலங்கை அர­சாங்கம் அறி­வித்­தது.

ஆனால், கைது செய்து நாடு­க­டத்த நேரிடும் என்று அச்­சு­றுத்தும் வகை­யிலும் இலங்கை அதி­கா­ரிகள் நடந்து கொண்­ட­தாக ராதிகா சிற்­ச­பேசன் தெரி­வித்­துள்ளார். இலங்­கையில் இருந்து வெளி­யே­றிய பின்னர், அவர் அத னைக் கூறவில்லை.

இலங்­கையில் இருந்­த­ப­டியே தான், தனக்கு அச்சுறுத்தல் விடுக்­கப்­பட்­ட­தாகக் கூறி­யி­ருந்தார். சுற்­றுலா விசாவில் வந்த ராதிகா சிற்­ச­பேசன், பல்­வேறு அர­சியல் பிர­மு­கர்­களை சந்­தித்­தி­ருந்தார். பல்­வேறு இடங்­க­ளுக்கச் சென்று பார்­வை­யிட்­டி­ருந்தார்.

அவரை, புல­னாய்­வா­ளர்­களும்  அதி­கா­ரி­களும்  பின்­தொ­டர்ந்து கண்­கா­ணித்த போதிலும், கைது செய்­வ­தற்­கான முயற்­சி­களில் இறங்­கு­வது போலப் பாவனை காட்­டிய  போதிலும், அவரைக் கைது செய்து நாடு­க­டத்தும் முயற்­சியில் அர­சாங்கம் இறங்­க­வில்லை. அது ஏன் என்­பது பல­ருக்கும் புரி­யாத விட­ய­மாக இருந்­தது.

கொமன்வெல்த் மாநாட்­டுக்கு சில நாட்கள் முன்­ன­தாக, நியூ­ஸி­லாந்தின் கிறீன் கட்சி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் கள் இருவர், வடக்கில் தமது பய­ணங்­களை முடித்துக் கொண்டு கொழும்பு திரும்­பிய போது, கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்டு திருப்பி அனுப்­பப்­பட்­டனர்.

அது­போ­லவே, சர்­வ­தேச ஊடக அமைப்பு ஒன்றின் பிர­தி­நி­தி­க­ளான அவுஸ்தி­ரே­லி­யாவை சேர்ந்­த­வர்­களும் திருப்பி அனுப்­பப்­பட்­டனர்.

இலங்­கையில் பிறந்த- நோர்­வேயில் வாழும் கவிஞர் ஜெய­பாலன், மாங்­குளம் வட­காட்டில் உள்ள தனது தாயாரின் கல்­ல­றையில் அஞ்­சலி செலுத்தச் சென்­ற­போது பிடிக்­கப்­பட்டு, தடுத்து வைக்­கப்­பட்டு நாடு கடத்­தப்­பட்டார்.

இரண்டு வாரங்­க­ளுக்கு முன்னர் கூட தமி­ழக ஊட­க­வி­ய­லா­ள­ரான மகா தமிழ் பிர­பா­கரன், கிளி­நொச்­சியில் கைது செய்­யப்­பட்டு, நாடு கடத்­தப்­பட்டார். இவை­யெல்லாம் நடந்து நெடு­நாட்­க­ளாகி விட­வில்லை.

இவை இரண்­டொரு மாதங்­க­ளுக் குள் நடந்த இலங்கை அர­சாங்­கத்தின் நாடு கடத்­தல்கள்.

இவை அனைத்­துமே சுற்­றுலா விசா வில் வந்து – அதற்­கு­ரிய விதி­மு­றை­களை மீறிச் செயற்­பட்­ட­தாகக் குற்­றம்­சாட்­டப்­பட்டே நாட்டை விட்டு வெளி­யேற்­றப்­பட்ட சம்­ப­வங்­க­ளாகும். இவை­யெல்லாம் நடந்த சூழலில் தான், கன­டாவின் நாடா­ளு­மன்ற உறுப்­பினர் ராதிகா சிற்­ச­பே­சனும் இலங்கை வந்­தி­ருந்தார்.

ஆனால், ராதிகா விட­யத்தில் இலங்கை அர­சாங்­கத்­தினால் அவ்­வாறு நடந்துகொள்ள முடி­ய­வில்லை.

ஏனென்றால், அண்­மைய நாடு­ க­டத்தல் சம்­ப­வங்கள் அனைத்­துக்கும் சுற்­றுலா விசா விதி­முறை மீறல்­களே காரணம் என்று அர­சாங்கம் கூறிய போதிலும் அதனை சர்­வ­தேச மனி­த­உ­ரிமை அமைப்­புகள் ஏற்­க­வில்லை.

ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளையும் சுதந்­தி­ர­மான பார்­வை­யா­ளர்­க­ளையும் அர­சாங்கம் கட்­டுப்­ப­டுத்­து­வ­தா­கவும் கருத்து வெளிப்­பாட்டு சுதந்­தி­ரத்தை நசுக்­கு­வ­தா­கவும் தான் இவை வெளி­யு­ல­கினால் பார்க்­கப்­பட்­டன.

இத்­த­கைய சூழலில் ராதி­காவை கைது செய்து நாடு­க­டத்­து­வது ஒன்றும் கடி­ன­மான காரியம் இல்­லா­விட்­டாலும், அதன் விளை­வுகள் பார­தூ­ர­மாக அமையும் என்­பதை அர­சாங்கம் உணர்ந்­தி­ருந்­தது. அதனால் தான், ராதிகா சிற்­சபேசனால், புல­னாய்­வா­ளர்­களின் தொந்­த­ர­வுகள்  இருந்­தாலும், தனது பயண   நிகழ்ச்சித் திட்­டத்தை   திட்­ட­மிட்­ட­படி நிறை­வேற்ற முடிந்­தது. குறிப்­பாக, ஜெனீவா கூட்­டத்­தொ­ட­ருக்கு தயா­ராகத் தொடங்­கி­யுள்ள அர­சாங்­கத்­துக்கு, ராதிகா போன்­ற­வர்­களை நாடு கடத்­து­வது பாரிய பின்­ன­டைவை ஏற்­ப­டுத்தக் கூடிய ஆபத்து இருந்­தது.

சற்று காலம்­த­வ­றி­யேனும் அர­சாங்கம் இந்த உண்­மையை புரிந்து கொண்­டுள்­ளது என்றே தெரி­கி­றது. அது­மட்­டு­மன்றி, மிக அண்­மையில் கூட புலம்­பெ­யர்ந்து சென்­ற­வர்கள் மீளத் திரும்பி வர­வேண்டும் என்று பாது­காப்புச் செயலர் கோத்­தா­பய ராஜபக் ஷ அழைப்பு விடுத்­தி­ருந்தார்.

கன­டாவின் இரா­ஜ­தந்­திரப் பாது­காப்பைக் கொண்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான ராதி­கா­வுக்கே, அவ்­வாறு திரும்ப வர­மு­டி­யாத நிலை உள்­ளது என்­பது உறு­தி­யானால், அந்த அழைப்பு உண்­மை­யா­னது அல்ல என்­றாகி விடும்.

கவிஞர் ஜெய­பாலன் நாடு­க­டத்­தப்­பட்ட விவ­கா­ரத்தில் இலங்கை அர­சாங்கம் கடு­மை­யான அழுத்­தங்­களை சந்­திக்க நேரிட்­டது.

அதா­வது, தனது தாய்­நாட்டில் அவ­ருக்கு ஏற்­பட்ட கசப்­பான அனு­ப­வ மும், தனது சொந்த நிலத்தில் உள்ள தாயின் சமாதியை பார்க்கச் சென்ற தற்காகவே கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டதும், புலம் பெயர் தமிழர்கள் விடயத்தில் இலங்கை அரசாங்கத்தின் அணுகுமுறை தவறானது என்ற கருத்தை ஏற்படுத்தியது.

இத்தகைய நிலையில், ராதிகா சிற்ச பேசன் நாடுகடத்தப்பட்டிருந்தால் கூட, அதன் மூலம் இலங்கைக்கு எது வும் கிடைத்து விட்டிருக்காது.  மாறாக, அது பிரச்சினைகளைத் தான் ஏற்படுத்தியிருக்கும்.

தமக்குப் பிடிக்காதவர்களையெல் லாம் பிடித்து நாடு கடத்துவதென்ற கொள்கை தவறானது என்று இப்போ தாவது உணர்ந்திருந்தால், அது அர சாங்கத்துக்கு ஒரு நல்லதொரு மாற் றத்துக்கான அறிகுறியாக கருதலாம்.

ஆனால், ஜெனீவா கூட்டத்தொட ருக்குப் பின்னர், வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

(ஹரிகரன்)

Exit mobile version