Site icon ilakkiyainfo

முதற்பயணமும், முடிவுப்பயணமும்…….!!(கவிதை)

மனசெல்லாம் சந்தோசம்
‘விழி’ களில்  ‘விழா’ க்கோலம் கொண்ட
ஒரு  ‘காதல்’ ஜோடியின்  ‘கனவு’
நிஜமாகுமுன் கடலுடன் கரைந்த   ‘கதை’… …………..

‘ரைற்றானிக்’ (TITANIC)  மனித இனம்
மறந்திடாது   மனசுக்குள்   இன்னும்
பூட்டிவைத்திருக்கும்  ‘மௌனம்’ கலந்த
முதற்பயணமும்,  முடிவுப்பயணமும்……………………..

தொண்ணூற்று ஒன்பது ஆண்டுகள்
ஓடி ஒளிந்த போதும்   ஓயாத நினைவலையாக
ஒவ்வொருவர் மனக்கண் முன்னே வந்துநிற்கும்
ஆழப்பனிக்கடலுக்குள் அடங்கிப்போன

ஆயிரத்து ஐநூற்று அறுவரின்
மூச்சுக்காற்றால்  உறைந்து போன
அந்தக்கப்பலின் பயணக்கதை
இன்றும்  ‘கண்ணீர்’ கலந்த உப்புக் காற்றோடு………………..

 

மரணங்கள்   எமக்கொன்றும் புதிதல்ல
இருந்தபோதும்  இந்தமரணங்கள்  ‘மனிதன்’
வாழும் வரை இறக்காது உயிர்வாழும்
ஏனெனில் இவர்கள் உலகெங்கும் வாழ்கிறார்கள்……….

ஜாக் ,ரோஸ் என்ற  இரு பருவச்சிட்டுகள்
உலகை மறந்து, உயரப்பறக்க ஆசைப்பட்டவேளை
கண்ட  ‘கண்கள்’ எல்லாம்  ‘பொறாமை’ கொண்டதோ?
அதனால் தான் என்னமோ பனி ‘மலை’ எமனானது…………….

வருமாண்டு நூறைத்தொட்டாலும்
மறுபடியும்   மறுபடியுமாக   வருவார்கள்
நிசப்த்தமான  நீண்ட   இருளுக்குள்ளே
என்ன நடந்ததென்று    இன்னும் சொல்ல…………….

இது ‘கவிதை’ யல்ல காவியமாக
பேசப்படுபவர்களின்   ‘ஆத்மாக்கள்’
இதை வாசிப்பவர்கள்   ‘தயவுசெய்து’
ஒரு நிமிடம் மௌனியுங்கள் எனக்காக அல்ல……………

இவர்கள் ஆத்மாக்கள்  சாந்திபெற
14 .சித்திரை .  ஒவ்வொரு வருடமும் மறக்காமல்
மௌனியுங்கள் முழுமையாக  அறிய
« TITANIC «   படம் பாருங்கள் நீங்களும் பகிருங்கள்………..

Exit mobile version