ilakkiyainfo

நீரி­ழி­வினால் ஏற்­படும் தீவிர நோய்கள்

நீரி­ழிவு நோயா­ளர்­களின் எண்­ணிக்கை வருடா வருடம் அதி­க­ரித்து வரு­கின்ற வேகம் அச்­சு­றுத்­த­லாக உள்­ளது. தொற்று நோய்­களைப் போலவே சமூக மட்­டத்தில் பெரு­கி­வரும் நீரி­ழிவு ஒரு நீண்ட கால பிரச்­சி­னை­யாக உருவெடுத்துள்­ளது. நீரி­ழி­வினால் நேர­டி­யான உட­ன­டிப்­பா­திப்­புகள் இல்­லாது விட்­டாலும் கட்­டுப்­பா­டற்ற நீரி­ழிவு நீண்­ட­காலம் தொடரும் போது இதனால் பார­தூ­ர ­மான விளை­வுகள் ஏற்­ப­டு­வ­துடன் மனித வாழ்வு அச்­சு­றுத்­த­லுக்கு உள்ளா­வ­துடன் இறப்­பையும் ஏற்­ப­டுத்­து­கி­றது.

நீரி­ழிவு நோயின் வகைகள்

நீரி­ழிவு நோய் இரு வகைப்­படும். அவை­யா­வன,

1. Diabetes Mellitus – Type I

2. Diabetes Mellitus – Type II

முத­லா­வது வகை நீரி­ழிவு நோய் மிக சிறிய வய­தி­லேயே ஏற்­ப­டு­கி­றது. இதற்கும் பரம்­பரை அல­கிற்கும் நிறைய தொடர்­புண்டு. இவர்­களில் சதை­யத்தில் இன்சுலின் ஓமோன் சுரக்­கப்­ப­டு­வ­தில்லை அல்­லது மிகக் குறை­வா­கவே சுரக்கப்­ப­டு­கி­றது. இதனால் இவர்கள் வாழ்நாள் முழு­வதும் இன்­சு­லினை ஊசி மருந்­தாக எடுக்க வேண்­டி­ய­வர்­க­ளாக இருக்­கி­றார்கள். இன்­சு­லினை மாத்­தி­ரை­க­ளாக வழங்க முடி­யாது.

இரண்­டா­வது வகை நீரி­ழிவு வயது வந்த பின்னர் ஏற்­ப­டு­கி­றது. இவர்­களில் இன்­சுலின் சதை­யத்தில் சுரக்­கப்­ப­டினும் போதி­ய­ளவில் சுரக்­கா­ம­லிருப்­ப­த­னா­லேயே நீரி­ழிவு ஏற்­ப­டு­கி­றது. இன்னும் சிலரில் இன்­சுலின் போதி­ய­ளவு சுரக்கப்பட்­டாலும் அவற்றை உடன் பயன்­ப­டுத்­து­வதில் தடங்கல் ஏற்­ப­டு­கி­றது.

மெல்­லி­ய­வர்­க­ளாக இருக்கும் முத­லா­வது வகை­யி­னரைப் போலன்றி இரண்­டா­வது வகை நோயா­ளிகள் பொது­வாக உடற்­ப­ருமன் உள்­ள­வர்­க­ளாக இருப்­பார்கள். இவர்­க­ளது நீரி­ழிவை மாத்­தி­ரைகள் மூலமும் உடற்­ப­யிற்சி மற்றும் உண­வுக்­கட்­டுப்­பாடு மூலமும் கட்­டுப்­பாட்­டுக்குள் பேண முடியும். முன்னர் 40 வய­து­களில் தோன்றும் இவ்­வகை நீரி­ழிவு அண்­மைக்­கா­ல­மாக 20 வய­து­க­ளி­லேயே ஏற்­ப­டு­கி­றது. நவீன உலகின் சீரற்ற உண­வுப்­ப­ழக்­கமும் உழைப்­பற்ற வாழ்க்கை முறை­யுமே இரண்டாம் வகை நீரி­ழிவு அதி­க­ரித்து வரு­கின்­ற­மைக்­கான கார­ண­மாகும்.

நீரி­ழிவு என்றால் என்ன?

சுக­தே­கி­யான உங்­க­ளது குரு­தியில் 12 மணித்­தி­யாலம் வெறும் வயிற்றில் இருந்த பின்னர் குளுக்­கோஸின் FBS – (70 – –110) Mg / dl ஆக இருக்க வேண்டும். குருதிக் குளுக்­கோசின் அளவு இதற்கு மேலாக வெறும் வயிற்றில் சோதிக்கும் போது அதி­க­ரித்து இருப்பின் அவர் நீரி­ழிவு நோயா­ள­ராவார்.

நாம் உண்ணும் உண­வி­லுள்ள மாச்­சத்து (Carbohydrate) குளுக்­கோ­சாக சமி­பாட்டின் போது மாற்­றப்­பட்டு குருதிச் சுகரில் கலக்­கி­றது. இது உடலின் சகல உறுப்­புக்­க­ளுக்கும் காவப்­பட்டு இன்­சுலின் ஓமோனின் உத­வி­யுடன் கலங்­க­ளுக்குள் செலுத்­தப்­ப­டு­கின்­றது. குளுக்கோஸ் ஒட்­சி­ச­னுடன் தாக்­க­முற்று சக்­தியை வெளி­யி­டு­கி­றது. இதன் மூலமே எமது உடல் இயக்கம் யாவும் செயற்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. இன்­சுலின் பற்­றாக்­குறை ஏற்­பட்டால் குளுக்கோஸ் கலங்­க­ளுக்குள் செலுத்­தப்­ப­டாமல் அதன் அளவு குரு­தியில் அதி­க­ரிக்­கின்­றது. இதையே நீரி­ழிவு என்­கிறோம்.


நீரி­ழிவு நோயின் அறி­கு­றிகள்

ஆரம்­பத்தில் நீரி­ழிவு எது­வித அறி­கு­றி­க­ளையும் வெளிக்­காட்­டு­வ­தில்லை. இதனால் நீரி­ழிவு நோயை நேர காலத்­துடன் இனம் காண்­பதில் தடங்கல் ஏற்­ப­டு­கின்­றது. நோயை இனங்­காண்­ப­தற்கு முன்­ன­தா­கவே நீரி­ழிவின் தாக்­கத்­தினால் குருதிக் குழாய்­களில் கொழுப்­புப்­ப­டிய ஆரம்­பித்து விடு­கி­றது. இது Atherosclerosis என்று அழைக்­கப்­ப­டு­கின்­றது.

இதை­ய­டுத்து உள்­ளு­றுப்­புக்­களும் பாதிப்­ப­டைய ஆரம்­பிக்­கின்­றன. நீரி­ழிவின் ஆரம்ப அறி­கு­றி­க­ளாக களைப்பு, அதி­க­ரித்த சிறுநீர் வெளி­யேற்றம், அதி­க­ரித்த பசி, புண்கள் மாறாமை, விரல்­க­ளுக்­கி­டையில் பங்கஸ் தொற்று, பால் உறுப்­பு­களில் கிருமித் தொற்­றுகள் என்­பன ஏற்­ப­டலாம். இவ் அறி­கு­றிகள் இருப்பின் உடனே குருதிக் குளுக்­கோசின் அளவைச் சோதிக்க வேண்டும். அத்­துடன் சலப் ­ப­ரி­சோ­த­னை­யிலும் குளுகோஸ் வெளி­யே­று­வதை இனம்­காண முடியும். FBS, PBBS, Hbaic, Lipid Profile முத­லான பரி­சோ­த­னை­க­ளையும் மேற்­கொள்­ளலாம்.

நீரி­ழிவு ஏற்­ப­டு­வ­தற்­கான காரணம்

நீரி­ழிவு பரம்­ப­ரையில் காவப்­ப­டக்­கூ­டிய ஒரு நோயாகும். இரண்டாம் வகை நீரி­ழி­வுக்கும் உடற்­ப­ருமன் மற்றும் உடற்­கொ­ழுப்பு என்­ப­வற்­றிற்கும் இடையே தொடர்­பி­ருப்­பது கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. நவீன உலகின் சீரற்ற உணவு முறையும் உட­லு­ழைப்­பற்ற வாழ்க்கை முறையும் இணைந்து ஒன்­றாக இருப்­பதை இன்­றைய நீரி­ழிவு நோயா­ளர்­களின் அதி­க­ரிப்­புக்கு பிர­தா­ன­மான கார­ண­மாக உள்­ளது. சிறு வய­தி­லி­ருந்தே அதிக எண்ணெய், கொழுப்பு, இனிப்பு வகை­களை உண்ண ஆரம்­பிக்­கி­றார்கள்.

அத்­துடன் அதி­க­நேரம் கணினி, தொலைக்­காட்சி என்­ப­ன­வற்றின் முன்னர் அமர்ந்து இருக்­கி­றார்கள். உட­லு­ழைப்பு குறை­வாக இருப்­பதால் உடல் பரு­ம­ன­டை­கி­றது. உடற் திணிவு சுட்டெண் (BMI) 24இற்கு குறை­வாக பேணுதல் அவ­சியம். சிறு வய­தி­லி­ருந்தே எடையைக் கட்­டுப்­பாட்­டுக்குள் வைத்­தி­ருக்­காது விட்டால் நீரி­ழிவு ஏற்­படும் சாத்­தியம் அதி­க­மாகும்.

நீண்­ட­கால நீரி­ழிவின் தாக்­கங்கள்

நீண்­ட­காலம் தொடர்ச்­சி­யாக நீரி­ழிவு நோயை கட்­டுப்­பாட்­டுக்குள் வைத்­தி­ருக்­கா­விட்டால் பல பார­தூ­ர­மான விளை­வு­களை ஏற்­ப­டுத்தும் நோய்கள் உரு­வாகும் சாத்­தியம் ஏற்­ப­டு­கி­றது. அதிலும் நீரி­ழி­வுடன் உயர் குருதி அழுத்தம் கொலஸ்ட்ரோல் என்­பன சேர்ந்­தி­ருப்பின் அது மிகவும் ஆபத்­தா­னது.

நீரி­ழிவால் ஏற்­ப­டக்­கூ­டிய பாதிப்­புக்­க­ளா­வன,

1. மார­டைப்பு (Myocardian Imfarction)

2. மூளை­ய­டைப்பும் பக்­க­வா­தமும் (Strock) – CVA

3. சிறு­நீ­ரக செய­லி­ழப்பு (Renal Failure)

4. கண்­பார்­வைக்­ கு­றை­பாடு

5. நரம்பு செய­லி­ழிப்பு (Diabetic Nephropathy)

6. கால்­களில் தொற்றும் அங்க இழப்பும்

7. கொலஸ்ட்ரோல் அதி­க­ரிப்பு

8. உயர் குருதி அழுத்தம் (Hypertension)

உடலின் பிர­தான உறுப்­புக்­க­ளான மூளை நரம்புத் தொகுதி, இதயம், சிறு­நீ­ரகம் முத­லா­னவை பாதிப்­புக்­குள்­ளாகும் போது நோயாளி பல சிர­மங்­களை எதிர்­கொள்­வ­துடன் மர­ணத்­தையும் எதிர் கொள்ள வேண்­டி­யி­ருக்கும்.

மார­டைப்பு

குருதிக் குழாய்­க­ளுக்குள் கொழுப்பு படிவு ஏற்­ப­டு­வதை நீரி­ழிவு துரி­தப்­ப­டுத்­து­வதைக் குறிப்­பிட்­டி­ருந்தேன். இப்­ப­டி­வுகள் இதயத் தசை­க­ளுக்கு குரு­தியை வழங்கும் கொற­னறி ஆட்­ட­றி­களில் படியும் போது குருதி குழாய் தடைப்­ப­டு­கி­றது. இவ்­வா­றான தடைகள் ஏற்­படும் போது கலங்­க­ளுக்கு கிடைக்கும் ஒட்­சிசன் ,குளுக்கோஸ் என்­பன குறை­வ­டை­கின்­றன.

இதனால் போதிய சக்­தியை வெளி­யிட முடி­யாமையினால் கலங்கள் செயற்­பட முடி­யாமல் போவ­துடன் இறக்கவும் ஆரம்­பிக்­கின்­றன. இதனால் அஞ்­ஜைனா, இஸ்­சீ­மியா என்­பன ஏற்­ப­டு­கி­ன்றன.

அடைப்­புகள் பெரி­தாகப் பெரி­தாக மார்பு வலியும் இய­லாமை, களைப்பு என்­ப­னவும் ஏற்­ப­டு­கின்­றன. ஒரு குறிப்­பிட்ட அள­வுக்கு மேல் தசையின் கலங்கள் இறக்கும் போது இதயம் பம்ப் பண்ண முடி­யாது போகி­றது. இந்த நிலையில் மார­டைப்பு ஏற்­பட்டு மர­ணமும் சம்­ப­விக்­கின்­றது.

மார­டைப்பின் அறி­கு­றி­க­ளாக மார்பு வலி, களைப்பு மித­மான வியர்வை, கழுத்து ,கைகளில் வலி வயிற்று வலி என்­ப­னவும் ஏற்­ப­டலாம். மார்பு வலி இடப்­பு­ற­மாக அல்­லது நடு நெஞ்சில் ஏற்­படும். நோயாளி கதைப்­பதில், மூச்­செ­டுப்­பதில் சிர­மப்­ப­டுவர். துரி­த­மாக வைத்­தி­ய­சா­லைக்குக் கொண்டு சென்றால் மட்­டுமே காப்­பாற்ற முடியும். முதல் நான்கு மணித்­தி­யா­லத்­திற்குள் அதிக மர­ணங்கள் ஏற்­ப­டு­கின்­றன. அரை மணி நேரத்­திற்குள் பொது வைத்­தி­ய­சா­லைக்குக் கொண்டு சென்றால் சிகிச்­சை­ய­ளித்து காப்­பாற்ற சாத்­தி­ய­முண்டு.

2. மூளை­ய­டைப்பு

கட்­டுப்­பா­டற்ற நீரி­ழிவு நோயா­ளர்­களில் clots ஏற்­பட்டு காலம்­பட்டு மூளைக்குச் செல்லும் குருதிக் குழாய்­களை அடைப்­ப­தனால் மூளை­ய­டைப்பு ஏற்­ப­டு­கி­றது. இளை­யோரை விட வய­தா­ன­வர்­களை அதிகம் பாதிக்கும் இந்த நோயினால் மர­ணமும் பக்­க­வா­தமும் ஏற்­படும் சாத்­தியம் உண்டு. மூளைக்குச் செல்லும் ஒட்­சிசன் குறை­வ­டை­வ­தனால் மூளைக் கலங்கள் பாதிப்­புக்­குள்­ளாகி செய­லி­ழப்­ப­த­னா­லேயே இந்த நிலைமை ஏற்­ப­டு­கின்­றது. தீவிர மூளை­ய­டைப்புக் குருதிக் குழாய்கள் வெடித்து மூளைக்குள் இரத்தம் பெருகி அழுத்­து­வதால் ஏற்­படும் போதும் ஆபத்து அதி­க­மாகும்.

3. சிறு­நீ­ரக செய­லி­ழப்பு

கட்­டுப்­பா­டற்ற நீண்ட நாள் நீரி­ழி­வினால் ஏற்­ப­டக்­கூ­டிய இன்­னொரு பார­தூ­ர­மான பிரச்­சினை சிறு­நீ­ரக செய­லி­ழப்­பாகும். எமது உட­லி­லுள்ள தேவை­யற்ற கழிவுப் பொருட்­களை வெளி­யேற்­று­வது சிறு­நீ­ரகம். இது செயற்­ப­டா­து­விட்டால் தினமும் உண்­டாகும் கழி­வுகள் உடலில் தேங்கி ஆபத்தை ஏற்­ப­டுத்தும்.

4. கண்­பார்வை இழப்பு

கட்­டுப்­பா­டற்ற நீரி­ழி­வினால் கண்­வில்லை மங்­க­லாகி (Cateract) ஏற்­ப­டலாம். சத்­திர சிகிச்சை மூலம் புதிய வில்­லையை மாற்­றலாம். இதை விட மிகவும் ஆபத்­தான நிலை விழித்­தி­ரையில் ஏற்­படும் பாதிப்­பாகும். இதனால் பார்வை இழப்பு ஏற்­படும் சாத்­தியம் உண்டு. நேரத்­துடன் இனம் கண்டால் லேசர் (laser) சிகிச்சை மூலம் குண­மாக்க முடியும். விழித்­திரை விலகல் விழி நரம்பு பாதிப்­புறல் என்­ப­வற்­றிற்கு சிகிச்­சை­ய­ளித்தல் சிர­ம­மா­னது. விழி உட்­கு­ழித்­தி­ர­வ­மான Aquous Humour மாசு­பட்டால் அதை லேசர் சிகிச்சை மூலம் மாற்ற முடியும்.

கால்­களை இழத்தல்

நீரி­ழிவு நோயா­ளர்­க­ளுக்கு பாதத்தில் தொற்­றுகள் ஏற்­ப­டு­வது அதிகம். நரம்­புகள் பழு­த­டை­வ­தனால் காலில் காயம் தொற்று ஏற்­பட்­டாலும் வேதனை தெரி­யா­த­மை­யினால் இவர்கள் காயங்­களை உதா­சீ­த­னப்­ப­டுத்தி விடு­கி­றார்கள். அத்­துடன் இவர்­க­ளது கால் பாதத்­திற்கு வரும் குருதி குழாய்­க­ளுக்குள் படிவு ஏற்­ப­டு­வ­தனால் நோயெ­திர்ப்புக் கலங்கள் குரு­தி­யுடன் போதி­ய­ளவு வரு­வ­தில்லை. அவ்­வாறே உயிர் எதிரி மருந்­துகள் வரு­வதும் குறை­வ­டை­வதால் புண்கள் லேசில் மாறு­வ­தில்லை.

போதிய ஒட்­சிசன் இன்றி தசைகள் இறந்து gawgrene ஏற்­பட்டு கறுத்­துப்­போ­கி­றது. கிருமித் தொற்­று­களும் உட்­சென்று cellulitis ஐ ஏற்­ப­டுத்­து­கின்­றது. இவற்­றிற்கு சிகிச்­சை­ய­ளிக்கும் போது சக்­தி­மிக்க அதி­க­ளவு கூட்­டாக உயிரி எதிரி மருந்­து­களே பல­ன­ளிக்­கின்­றன. மேலும் குருதிக் குளுக்­கோசின் அளவை கட்­டுப்­பாட்­டுக்குள் வைத்­தி­ருக்­கா­விட்டால் அதி­க­ரித்த கிரு­மித்­தொற்றும் பெருக்­கமும் ஏற்­படும் சாத்­தி­ய­முண்டு.

நீரி­ழிவு நோயாளர்கள் காயங்களுக்கும் தொற்றுக்களுக்கும் நேரகாலத் துடன் சிகிச்சை பெறாது விட்டால் விரலையோ பாதத்தையோ காலையோ இழக்க வேண்டி நேரிடலாம். நோயாளியைக் காப்பதற்காக காலின் பகுதியை நீக்க வேண்டி ஏற்படலாம். இது Amputation என அழைக்கப்படுகிறது.

ஒட்டுமொத்தமாக நீரிழிவு நோயாளர்கள் கட்டுப்பாட்டுடன் குருதி குளுக்கோசின் அளவை சரியான எல்லைக்குள் பேணுவதே சாலச்சிறந்தது. சிகிச்சையை ஒரு போதும் நிறுத்துதல் ஆகாது. உணவுக்கட்டுப்பாடும் தேகாப்பியாசம் என்பன முக்கியமாகும். அத்துடன் இடையிடையே முக்கிய உறுப்புகள் தொடர்பான மருத்துவ பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.

வருடா வருடம் கண்களைப் பரிசோதிக்க வேண்டும். கால்களைப் பாதுகாத்திட பொருத்தமான பாதணிகளை அணிய வேண்டும். காயங்கள் ஏற்பட்டிருக்கிறதா என தினமும் பார்க்க வேண்டும். கொலஸ்ட்ரோல்,பிரஷர் முதலானவற்றை இடைக்கிடை சோதிக்க வேண்டும். குருதி குளுக்கோஸ் கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றதாவென இடைக்கிடை பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். தொடர்ந்து கிளினிக்கில் வைத்திய ஆலோசனை பெறுதல் வேண்டும். கட்டுப்பாடான வாழ்வு முறையே சுகவாழ்வைத் தரும்.

டாக்டர் ச. முரு­கா­னந்தன்

Exit mobile version