ilakkiyainfo

கோபிதாஸுக்கு அனைத்து உதவிகளையும் செய்தோம்: பிரிட்டன் தூதரகம்

மகஸீன் சிறைச்சாலையில் கடந்த ஜனவரி 24ஆம் திகதி மரணமான விஸ்வலிங்கம் கோபிதாஸ் சிறையில் இருந்த காலப்பகுதியில் அவருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் இலங்கைக்கான பிரித்தானியத் தூதரகம் மேற்கொண்டதாக தூதரகத்தின் நிபுணத்துவப் பிரிவு அதிகாரி ஜோன் நெய்ல் இன்று (01) தெரிவித்தார்.யாழ்ப்பாணத்தில் வசிக்கும் பிரித்தானியப் பிரஜாவுரிமை பெற்றவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்தாலோசித்து அதற்கு தீர்வு காணுதல் மற்றும் அவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்தல் தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஜோன் நெய்ல் யாழ்ப்பாணம் வருகை தந்திருந்தார்.

நெய்ல், யாழ் எக்ஸ்போ பிற் விருந்தினர் விடுதியில் வைத்த பத்திரிகையாளர்கள் சந்தித்த போது பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், ‘கோபிதாஸிற்கு சிறையில் இருக்கும் போது அவருக்கான அனைத்து உதவிகளையும் செய்திருந்தோம். இருந்தும் எமது திட்டத்தில் அவர் இறந்த பின்னர் அவரது குடும்பத்திற்கு நஷ;டஈடு கொடுப்பதற்கான ஏற்பாடுகள் இல்லை’ என்றார்.

‘பிரித்தானியப் பிரஜாவுரிமை பெற்று இங்கு வாழ்பவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காகவே வந்துள்ளேன். அதன் மூலம் அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு அவர்களின் தேவைகளையும் நிறைவு செய்யவுள்ளோம்.

குடும்பங்களைப் பிரிந்து இருப்பவர்களைச் சந்தித்து என்ன பிரச்சினை காரணமாக நீங்கள் பிரிந்து வாழ்கின்றீர்கள் என்பது தொடர்பாக அறிந்து அதனை பிரித்தானியாவிலுள்ள அவரது மற்றய குடும்ப அங்கத்தவர்களையும் வினாவி அவர்களை ஒரு இணக்கப்பாட்டிற்கு கொண்ட வர முயற்சிப்போம். அத்துடன் அவர்களின் பிரச்சினைகளை இரகசியமாக வைத்திருப்போம்’ என்றார்.

அத்துடன், இலங்கைச் சிறைகளில் இருக்கும் பிரித்தானிய பிரஜைகளுக்கு எவ்வளவு உதவிகள் செய்ய முடியுமோ அந்தளவு உதவிகளைச் செய்வோம். அத்துடன் அவர்களின் பாதுகாப்புத் தொடர்பில் இலங்கை இராணுவம் மற்றும் பொலிஸாருடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுப்போம்.

கொழும்பினை அண்டிய பகுதிகளில் இருக்கும் பிரித்தானிய பிரஜைகளுக்கு 24 மணிநேரத்தில் நாங்கள் உதவிகளைச் செய்வோம் என்பதுடன் தூர இடங்களில் வசிப்போருக்கு (யாழ்ப்பாணம், கிளிநொச்சி) 48 மணித்தியாலங்களுக்குள் தேவைப்படும் உதவிகளைச் செய்து முடிப்போம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

‘இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பிரித்தானிய கைதிகள் தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாது”
01-3-2014
british-flag

இலங்கையின் சட்டதிட்டங்களுக்கு அமைய கைது செய்யப்பட்டு சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பிரித்தானிய கைதிகளின் விடுதலை தொடர்பில் எமது அரசாங்கம் எதுவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாது என பிரித்தானிய தூதரகத்தின் ஆலோசனைப்பகுதி தூதுவர் ஜோன்நீல் தெரிவித்தார்.

சிறைக்கைதிகளின் விடுதலைக்கு அந்த நாட்டு அரசாங்கம் தான் நடவடிக்கை எடுக்க முடியும் அதேபோன்று  இலங்கை அரசாங்கமும் சிறைக்கைதிகளின் விடுதலைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர எம்மால் எதுவும் செய்ய முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் தங்கியுள்ள பிரித்தானிய பிரஜைகளின் நலன்சார் பிரச்சினைகளுக்கு உதவிகளை வழங்கும் முகமாக பிரித்தானிய தூதரகத்தின் ஆலோசனைப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட சந்திப்பு ஒன்று இன்று காலை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது இதன் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சிறைக்கைதிகளின் விடுதலைக்கு அந்த நாட்டு அரசாங்கம் தான் நடவடிக்கை எடுக்க முடியும் அதேபோன்று தான் இலங்கை அரசாங்கமும் சிறைக்கைதிகளின் விடுதலைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர எம்மால் எதுவும் செய்ய முடியாது.

இலங்கையின் சட்டதிட்டங்களுக்கு அமைய கைது செய்யப்பட்டு சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பிரித்தானிய கைதிகளின் விடுதலை தொடர்பில் எமது அரசாங்கம் எதுவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாது.

எனினும் அவர்களுக்கான மருத்துவம் உள்ளிட்ட நலன்சார் செயற்பாடுகளிலும் நாம் ஈடுபட்டு வருகின்றோம். அந்தவகையில் மரணமான கோபிதாஸ் சிறையில் இருக்கும் காலத்தில் அவருக்கு வேண்டிய உதவிகளை மேற்கொண்டு வந்தோம்.

அத்துடன் அவரது நிலை குறித்தும் அவருடைய உறவினர்களுக்கும் தெரிவித்திருக்கிறோம். இவ்வாறான செயற்பாடுகளையே எம்மால் மேற்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Exit mobile version