Site icon ilakkiyainfo

சவுதியில் 5 இந்தியர்கள் உயிரோடு புதைப்பு: அதிர்ச்சி தகவல்!

சவுதி அரேபியாவில் 2010ம் ஆண்டு 5 இந்திய தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக உள்ளுர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 25 பேரை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை கத்தீப் பொது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

புதன்கிழமை நடைபெற்ற இறுதிக்கட்ட விசாரணையின்போது, குற்றவாளிகளில் மூன்று பேர் குற்றத்தை ஒப்புக்கொண்டதுடன், 5 ஆசிய தொழிலாளர்களை (இந்தியர்கள்) சித்ரவதை செய்து உயிருடன் புதைத்ததாக வாக்குமூலம் அளித்ததாக அரபு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இறந்தவர்களின் அழுகிய உடல்கள் சவுதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்தில் உள்ள ஒரு பண்ணையில் தோண்டி எடுக்கப்பட்டன.

இதுகுறித்து ஒரு குற்றவாளி கூறுகையில், “நானும் எனது நண்பரும் மது அருந்திக் கொண்டு இருந்தோம். அப்போது மற்றொரு நண்பரிடம் இருந்து இரவு 10 மணிக்கு போன் வந்தது. அவர் உடனடியாக பண்ணையில் வந்து சந்திக்குமாறு கூறினார்.

உடனடியாக நாங்கள் பண்ணைக்குச் சென்றோம். அங்கு 5 தொழிலாளர்கள் கை கட்டப்பட்ட நிலையில், அமர்ந்திருந்தை பார்த்தோம். இதுபற்றி என் நண்பரிடம் கேட்டேன். அதற்கு அவர், ஆதரவாளரின் மகள் மற்றும் மற்ற பெண்களை பாலியல் தொந்தரவு செய்ததால் கட்டியதாக கூறினார்.

நான் பார்க்கும் போது அவர்கள் கட்டப்பட்டு மயக்கத்தில் இருந்தனர். அதற்கு சற்று முன்னர் நாங்கள் மற்றொரு அறையில் மது குடிக்க மற்றும் கஞ்சா அடிக்க சென்றோம். நாங்கள் குடித்துக் கொண்டிருந்தபோது நான் அவர்களில் ஒருவனின் முகத்தில் அறைந்தேன்.

மேலும் அவர்கள் தப்பித்துச் செல்லாதபடி கயிறுகள் மற்றும் டேப்புகள் கொண்டு கட்டினோம். எங்களின் நண்பன் டிரக்கைக் கொண்டு அவர்கள் மீது ஏற்றினோம். பின்பு அவர்களை 2.5 மீட்டர் ஆழத்தில் புதைத்தோம்” என்று கூறினான்.

Exit mobile version