Site icon ilakkiyainfo

ஆசிய கோப்பை கிரிக்கெட் : பாகிஸ்தான் த்ரில் வெற்றி (வீடியோ)

 மிர்பூர்: மிர்பூரில் நடந்த பாகிஸ்தான்- பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முன்னதாக டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதன்படி களமிறங்கிய வங்கதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை 326 ரன்கள் குவித்தது. பங்களாதேஷ் அணியில் அதிகபட்சமாக  அபாரமாக விளையாடிய தொடக்க ஆட்டக்காரர் அனாமுல்ஹக் 100 ரன்கள் எடுத்து அசத்தினார்.

மேலும் இம்ரூல் கேயஸ் 59, மோமினால் ஹக் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். கடைசியில் அதிரடியாக விளையாடிய கேப்டன் ரஹிம் மற்றும் ஷகிப் அல்ஹசன் இருவரும் பாகிஸ்தான் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர்.

முஷ்குபிர் ரஹிம் 51, ஷகிப் அல் ஹசன் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் கடைசி வரை களத்தில் இருந்தனர். பாகிஸ்தான் தரப்பில் சயித்அஜ்மல் 2, தல்கா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனை அடுத்து  327 ரன்கள் என்ற கடினமான   வெற்றி இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 49.5 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 327 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் தரப்பில் அபாரமாக விளையாடிய அகமது ஷேசாத் சதமடித்து அசத்தினார். 123 பந்துகளில் 12 பவுண்டரி, 1 சிக்சருடன் 103 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

ஹபீஸ் 52 ரன்கள் எடுத்தார். மிஸ்பா 4, மக்சூத் 2, ரஹ்மான் 8 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் அப்ரிடி அதிரயாக விளையாடி 25 பந்துகளில் 7 சிக்சருடன் 59 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார்.

பவாத் ஆலம் 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி த்ரில் வெற்றி பெற்றது. பங்களாதேஷ் தரப்பில் மோமினால் ஹக் 2, ஷகிப்அல்ஹசன் 1, ரசாக் 1, மகமதுல்லா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

(ஒளிபரப்பை பார்க்க இங்கே அழுத்தவும்:http://www.starsports.com/cricket/video/index.html?v=1309779   )

Exit mobile version