ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Saturday, September 30
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    Home»செய்திகள்»கள்க்காதல் விவகாரம்: லண்டனில் தனது மனைவியை 27 தடவை கத்தியால் குத்திய கோபிநாத்!
    செய்திகள்

    கள்க்காதல் விவகாரம்: லண்டனில் தனது மனைவியை 27 தடவை கத்தியால் குத்திய கோபிநாத்!

    AdminBy AdminMarch 5, 2014No Comments3 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    இங்கிலாந்து சமர்செட் பிராந்தியத்தில் பெண் ஒருவரை தாக்கிக் கொலை செய்த இலங்கையருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

    கடந்த வருடம் பிரித்தானியரொருவரை கொலை செய்தமை தொடர்பில் இலங்கையர் ஒருவர் இங்கிலாந்தில் கைது செய்யப்பட்டார்.

    இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

    கடந்த வருடம் கோபிநாத் வேலுசாமி என்பவர் மயூரதி என்ற பெண்ணொருவரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

    வௌ்ளசாமி கோபிநாத் என்ற 36 வயதுடைய இலங்கையருக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    குறித்த நபர் கடந்த வருடம் மயூரதி பேரின்பமூர்த்தி என்ற பெண்ணை தாக்கிக் கொலை செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

    மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கோபிநாத்திற்கு 18 வருட சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

    சமர்செட்டில் அமைந்துள்ள  ‘டியுடர் கோட்’ கட்டடத்திலிருந்து சடலம் மீட்கப்பட்டதோடு, சந்தேகநபரையும் பொலிஸார் கைது செய்திருந்தனர்.

    இந்நிலையில், சந்தேகநபரான கோபிநாத் கொலை செய்தமை உறுதியானதை அடுத்து இங்கிலாந்து நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

    சடலம் மீதான பிரேத பரிசோதனையில் குறித்த பெண் பலமுறை கூரிய ஆயுத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டமை தெரியவந்துள்ளது.

    சடலமாக மீட்கப்பட்டவர் இங்கிலாந்து குடியுரிமை பெற்ற இலங்கையர் எனவும், இலங்கை புகலிடக் கோரிக்கையாளரான இவரை, கொலை இடம்பெற்று ஒரு சில நிமிடங்களிலே பொலிஸார் கைது செய்து விட்டனர்.

    கொலையை அயலவர் ஒருவர் தன்னுடைய வீட்டின் கீழ்மாடியிலிருந்த வேளையில் கண்ணுற்றுள்ளார். அயலவரான பெர்னடெத், மயூரதியின் கூக்குரலைக் கேட்டதுடன், உதவிக்காக அயலவர்களையும் அழைத்துள்ளார்.

    கோபிநாத் வேலுசாமி, மயூரதியின் கழுத்தில் பல முறை தொடர்ச்சியாக குத்தியுள்ளார். பொலிஸாரின் வருகைக்கு முன்னரே மயூரதியின் உயிர் பிரிந்துவிட்டது.

    புன்னகைராஜா சேர்வராஜ் எனும் மற்றுமொரு இலங்கையருடன் மயூரதி புதிய உறவுமுறையினை பேணியமை தொடர்பில் கோபமுற்ற கோபிநாத் அவரை கொலை செய்துள்ளார்.

    தூரத்து உறவினரான ராஜ் பிரித்தானியாவிற்கு புலம்பெயர்ந்த பின்னர் இவர்களுடைய நெருங்கிய நண்பரானார். மயூரதி மீது கோபமுற்ற கோபிநாத் தன்னை ஏன் ஏமாற்றுகின்றாய் எனக்கேட்டுள்ளார்.

    மேலும் மயூரதி பாலியல் தொடர்புகளிற்காகவே ராஜ் என்பவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

    32 வயதான மயூரதி ஒரு பிள்ளையின் தாயாவார். மயூரதி, ராஜ் என்பவருடன் தன்னுடைய அடுக்கு மாடி குடியிருப்பிலுள்ள வீட்டை பகிர்ந்து கொண்டுள்ளார்.

    மேல்மாடியில் வசித்து வந்த அயலவரொருவரிற்கு கீழ் வீட்டில் நிகழும் சண்டையின் சத்தம் கேட்டுள்ளது. மயூரதி உதவி நாடி உரத்த குரல் எழுப்பியுள்ளார்.

    திருமதி ரெயிட் அவர்கள் நீச்சல் பயிற்சியிற்காக செல்லும் வழியில் யன்னலினூடாகவே இக்கொலையினை கண்டுள்ளார். அதையடுத்து பொலிஸாரிற்கு அறிவித்துள்ளார்.

    ஒரு சில நிமிடங்களிளே சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் கொலையாளியை கைது செய்துள்ளனர்.

    36 வயதான கோபிநாத் இதற்கு முன்னர் இங்கிலாந்தில் இயோவில் பகுதியிலே வசித்து வந்துள்ளார்.

    இலங்கையில் பெற்றோல் நிரப்பும் இடங்களில் தொழில்புரிந்த இவர், புலிகளிற்கு கையடக்க தொலைப்பேசிகளை விநியோகித்தார் என்று குற்றஞ்சாட்டப்படவுடன் பிரித்தானியாவிற்கு புலம்பெயர்ந்தார்.

    இவர் தீவிர குடிப்பழக்கத்திற்கு அடிமையாகியதுடன், சூதாட்டத்திலும் ஈடுப்பட்டார். இவர் இல்செஸ்டர் பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பினை ராஜ் மற்றும் மயூரதி ஆகியோருடன் பகிர்ந்து கொண்டார்.

    இவருடைய அளவிற்கு மிஞ்சிய குடிப்பழக்கம் காரணமாக வீட்டில் தங்கியிருந்தவர்களுடன் தொடர்சியான முரண்பாடுகள் தோன்றின.

    ராஜ் மற்றும் தனக்கிடையேயான உறவில் மயூரதி தலையீடு செய்வதாகக் கூறி தொடர்ச்சியாக பிரச்சினைப்பட்டார். தன்னுடைய பணத்தை ராஜ் கைப்பற்றி விடுவாரோ எனவும் அச்சமடைந்தார்.

    இயோவில் பகுதியில் வாழ்ந்த 8 மாதக் காலப்பகுதியில் இவர் தொடர்சியாக அதாவது 34 வெவ்வேறு குற்றச்செயல்களின் அடிப்படையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

    கொலைக் குற்றத்தை நிராகரித்த கோபிநாத் தான் கொலை செய்ய வேண்டுமென்ற நோக்கில் இதனைச் செய்யவில்லையெனவும், மயூரதி தன்னுடைய பாட்டியை கடுமையான வார்த்தையாகிய “பழைய பொருள்” எனக்கூறியமையினால் கடுமையான கோபமுற்றதாக பொலிஸாரிடம் தெரிவித்தார்.

    இவருடைய பாதுகாப்பு தரப்பினர் கொலையாளி மன அழுத்தத்தினால் துன்புறுவதாக தெரிவித்துள்ளனர்.

    மேலும் அவரது வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

    இதன் போது அவர் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்ட நிலையில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

    அவர் குறைந்தபட்சம் 18 வருடங்கள் சிறையில் கழிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது.

    yeovil3yeovil2கொலை இடம்பெற்ற வீடு

    Post Views: 48

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    காதலனை தோழிக்கு விருந்தாக்க ஆசைப்பட்ட காதலி.. அந்த நேரத்தில் அப்படி.. கட் ஆன ‘அந்த’ உறுப்பு

    September 27, 2023

    பொலிஸாரிடம் தப்பி ஓடிய இரு இளைஞர்கள் பரிதாப உயிரிழப்பு.

    September 27, 2023

    உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் இடம்பெற்றது என்ன? 2005 முதல் அரசியல் கொலைகளை செய்தவர்கள் யார்? சிறையிலிருந்து சுரேஸ் சாலேக்கு பிள்ளையான் தெரிவித்த செய்தி என்ன? ஆசாத் மௌலான தெரிவித்துள்ள புதிய தகவல்கள்

    September 24, 2023

    Leave A Reply Cancel Reply

    March 2014
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31  
    « Feb   Apr »
    Advertisement
    Latest News

    பிரபுதேவா நடிக்கும் ‘முசாசி’ படக்குழுவினரை சந்தித்த இலங்கை பிரதமர்

    September 30, 2023

    பாகிஸ்தானில் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் அடிதடி!!-வீடியோ

    September 30, 2023

    ரூ.1.25 கோடிக்கு விற்பனையான விநாயகர் லட்டு – ஹைதராபாத்தில் வினோதம்!

    September 30, 2023

    நான் நம்பிக்கை இழந்துவிட்டேன் – உலகம் என்னை கைவிட்டுவிட்டது – அரகலய ஆர்ப்பாட்ட வீடியோவை வெளியிட்ட குற்றசாட்டுக்குள்ளான – 13 மாதங்கள் இலங்கையில் மறைந்துவாழும் பிரிட்டிஸ் பெண்

    September 30, 2023

    காணாமல்போன பெண்ணின் சடலம் தலை, கை, கால்கள் அற்ற நிலையில் மீட்பு – வெளியான அதிர்ச்சி தகவல் !

    September 30, 2023
    • ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை: கனடாவுடன் உளவு தகவல்களை பகிரும‘Five Eyes Intelligence Alliance’ பற்றி தெரியுமா?
    • ஹிட்லர் இறந்த போது அவருடன் இருந்த பெண் யார் தெரியுமா?ஹிட்லர் இறந்த நாளன்று நடந்த அதிர்ச்சிகரமான சம்பவங்கள்!
    • மகாவம்சத்தில் புதைந்துள்ள…/ பகுதி 01
    • அத்துமீறிய தலாய் லாமா? 8 வயது சிறுவனிடம் சில்மிஷமா? அதுவும் பொது இடத்தில். -(வீடியோஇணைப்பு)
    • ரஷ்ய அதிபர் புதினை கைது செய்வது சாத்தியமா? யுக்ரேன் போர்க்குற்ற வழக்கில் சர்வதேச நீதிமன்றம் பிடிவாரண்ட்

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    Recent Posts
    • பிரபுதேவா நடிக்கும் ‘முசாசி’ படக்குழுவினரை சந்தித்த இலங்கை பிரதமர்
    • பாகிஸ்தானில் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் அடிதடி!!-வீடியோ
    • ரூ.1.25 கோடிக்கு விற்பனையான விநாயகர் லட்டு – ஹைதராபாத்தில் வினோதம்!
    • நான் நம்பிக்கை இழந்துவிட்டேன் – உலகம் என்னை கைவிட்டுவிட்டது – அரகலய ஆர்ப்பாட்ட வீடியோவை வெளியிட்ட குற்றசாட்டுக்குள்ளான – 13 மாதங்கள் இலங்கையில் மறைந்துவாழும் பிரிட்டிஸ் பெண்
    Recent Comments
      Quick Links
      • முகப்பு
      • இந்தியா
      • உலகம்
      • வெளிநாட்டு
      • சினிமா
      • விளையாட்டு
      • ஆரோக்கியம்
      • சுற்றுலா
      • வினோதம்
      • அரசியல்
      Quick Links
      • கட்டுரைகள்
      • தொடர் கட்டுரைகள்
      • கவிதைகள்
      • கலைகள்
      • வீடியோ
      • புகைப்பட தொகுப்பு
      • தொழில்நுட்பம்
      • வேலைவாய்ப்பு
      • கல்வி
      Quick Links
      • ஆரோக்கியம்
      • அந்தரங்கம்
      • ஆன்மீகம்
      • சுற்றுலா
      • சிறப்பு செய்திகள்
      • வினோதம்
      BRAKING NEWS
      • ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை: கனடாவுடன் உளவு தகவல்களை பகிரும‘Five Eyes Intelligence Alliance’ பற்றி தெரியுமா?
      • ஹிட்லர் இறந்த போது அவருடன் இருந்த பெண் யார் தெரியுமா?ஹிட்லர் இறந்த நாளன்று நடந்த அதிர்ச்சிகரமான சம்பவங்கள்!
      • மகாவம்சத்தில் புதைந்துள்ள…/ பகுதி 01
      • அத்துமீறிய தலாய் லாமா? 8 வயது சிறுவனிடம் சில்மிஷமா? அதுவும் பொது இடத்தில். -(வீடியோஇணைப்பு)
      • ரஷ்ய அதிபர் புதினை கைது செய்வது சாத்தியமா? யுக்ரேன் போர்க்குற்ற வழக்கில் சர்வதேச நீதிமன்றம் பிடிவாரண்ட்
      2023 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

      swissreplicas.to

      bestwatchreplica.co
      replica watches

      swiss replica website

      fake rolex for sale
      relogios replicas
      Go to mobile version