ilakkiyainfo

சவுதி அரேபியாவில் இரண்டு வீட்டுப்பணிப்பெண்களின் அட்டகாசம். அரேபியர்கள் ஆத்திரத்தில்!! (வீடியோ இணைப்பு)

சவுதி அரேபியாவில் இரண்டு வீட்டுப்பணிப்பெண்கள் தம் எஜமானாரின் குழந்தைகளை அடிக்கும் வீடியோ வெளியாகி சவுதி அரேபியர்களை ஆத்திரத்திற்க்கு உள்ளாக்கியுள்ளது.

சுமார் 2 மில்லியனுக்கும் அதிகமான தெற்கு ஆசிய ,ஆபிரிக்க பெண்கள் வீட்டுப்பணியாளர்களாக இருக்கும் சவுதி அரேபியாவில் சம்பவத்துடன் தொடர்புடய இரு பெண்களும் எத்தியோபியர்கள் எனவும் சவுதி நாளிதழ் அல்- அஜல் செய்தி வெளியிட்டுள்ளது…

யூ டியூபில் வெளியான ஒரு வீடியோவை மேற்கோள்காட்டியே குறித்த செய்தியை அல்- அஜல் சவுதி நாளிதழ் செய்திவெளியிட்டுள்ளது.

‘கண்ணுக்கு கண்: ஆசிட் வீசி பெண்ணின் பார்வையை பறித்தவருக்கு கண் பார்வை பறிப்பு! (ஈரானில் தண்டணை! )

eye-gougingஒரு பெண்ணின் முகத்தில் ஆசிட் வீசி அப்பெண்ணின் (Shirin ) கண்களை குருடாக்கிய ஒரு ஆணின் (Jamshid ) கண்களை குருடாக்கி சிறையில் அடைக்குமாறு இரான் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளத்தாக அரபு ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.

அதே நேரம் குறித்த சம்பவத்தில் அப்பெண்னின் வலது காது, மூக்கும் சேதம் அடைந்தது.

குறித்த குற்றமிழைத்தவருக்கு அப்பெண் இழந்தது போலவே வலது காது மற்றும் மூக்கு அகியவையைய்யும் வெட்டி அகற்றி சிறையில் அடைக்குமாறு இரானின் NCRI (The National Council of Resistance of Iran) ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அரபு ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

NCRI (The National Council of Resistance of Iran) வலது காது மற்றும் மூக்கு அகியவையைய்யும் வெட்டி தன்டனை வழங்கினால் தான் இனிமேலும் குற்றமிழைப்பவர்களுக்கு அச்சம் ஏற்படும் எனவும் கருத்து தெரிவித்துள்ளது .

கடந்த வருடம் மட்டும் ஈரானில் 500- 625 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளனர்.

ஈரானின் இக்கடுமையான  தன்டனைகளுக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேச்சாளர்  (வழமைபோல்) விசனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடதக்கது.

 

Exit mobile version