ilakkiyainfo

வாயில் குட்டி,ஆற்றில் வெள்ளம்,கடக்கும் தாய்ச் சிங்கம் – (படங்கள்)

கென்யாவின் மாசை மாரா தேசியப் பூங்காவில் , ஒரு ஆற்றை, நீரில் அடித்துச் செல்லக்கூடிய அபாய நிலையிலும், வாயில் குட்டியைக் கவ்வியபடி கடக்கும் துணிச்சலான தாய்ச் சிங்கம் (புகைப்படமெடுத்தவர் கிரேக்க வனவிலங்குப் புகைப்பட நிபுணர் கைரியக்கோஸ் கஸிராஸ்)
article-2570990-1BF1A64E00000578-670_634x420நதியின் அக்கரையில் இருக்கும் மற்ற சிங்கங்களுடன் சேர்ந்து கொள்ளும் ஆவலில், இந்த தாய்ச் சிங்கம், தனது குட்டியை வாயில் கவ்வியபடி, ஆற்றின் குறுக்கே நடக்கிறது.
சிங்கங்கள்தான், பூனை விலங்கினத்தில், உண்மையில் கூடிவாழும் விலங்குகள். இந்த இனத்தில் பெண் சிங்கங்கள், உறவுகளுடன் சேர்ந்து ஆண் சிங்கங்களின் கண்காணிப்பில் வாழ்கின்றன. ஆண் சிங்கங்கள் பெண் சிங்கங்களைக் கூட அடிக்கடி தங்களுக்குள் கடுமையான ,உயிராபத்தை விளைவிக்கும் மோதல்களில் ஈடுபடும்.
பெண் சிங்கங்கள்தான் இரவு வேளைகளில் பெரும்பாலான வேட்டைகளில் ஈடுபடும்.

சிங்கங்கள் ஆண்டு முழுவதும் குட்டிகளை ஈன்றெடுக்கின்றன. ஒரு ஆண்டுக்கு மேல் வாழக்கூடிய ஒரு குட்டியைப் பெற, சிங்கங்கள் சுமார் 3,000 முறை கூட வேண்டியிருப்பதாகக் கணக்கிடப்படுகிறது.


அதிகம் குட்டிகள் பெற்ற சிங்கக் குழுக்கள்தாம் ஆறுகள் இணையும் இடத்துக்கு அருகே உள்ள நிலப்பரப்புகளைப் பிடித்துக்கொண்டு வாழ்கின்றன என்று அண்டை நாடான தான்சானியாவில் 45 ஆண்டு காலம் நடத்தப்பட்ட ஆய்வொன்று கூறுகிறது.

இந்தப் பகுதிகள் ஆண்டு முழுவதும் தண்ணீர் வசதிகள் கொண்டவையாக இருக்கின்றன. நிழல் கிடைக்கிறது. பதுங்கி இருந்து வேட்டையாட தகுதியான இடம் இந்தப் பகுதிகளில் இருக்கும். இந்த மாதிரி பெறுமதியுள்ள இடங்களில் வசிக்கவேண்டுமானால், சிங்கங்களுக்கு, சிங்கக் குழுக்கள் தரும் பலமான பாதுகாப்பு தேவை.

Exit mobile version