ilakkiyainfo

விபத்துக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம் செய்த மாணவர்களைத் தாக்கியது இராணுவம்; இராணுவத்தினரை மன்னிப்புக் கேட்க வைத்து விடுவிப்பு

 

மஞ்சள் கோட்டினூடாக வீதியைக் கடந்து கொண்டிருந்த மாணவனை மோதிய விபத்துக்கு நீதி கேட்டு பாடசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் செய்த மாணவர்கள் மீது இராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இதனால் அப்பகுதியில் நீண்டநேரம் பதற்றம் நிலவியது.

பளையில் வீதிக்கடவையை கடக்க முற்பட்ட மாணவனை பேருந்து மோதியது. இப்பகுதியில் இவ்வாறான சம்பவங்கள் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து இதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் சிலர் மீது இராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து அப்பகுதியல் பதற்றமான சூழ்நிலை நிலவியது.

2840_content_DSC_0271
பொலிஸாரின் அசமந்தப் போக்கினாலேயே இத்தகைய விபத்துக்கள் இடம்பெற்றதாகக் கூறிய மாணவர்கள் இதற்குப் பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக்கோரியே ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் அப்பகுதியால் வாகனத்தில் வந்த இராணுவத்தினர் வீதியில் நின்ற சில மாணவர்களைத் தாக்கியுள்ளனர்.

இதையடுத்து இராணுவத்தினருக்கும் அப்பகுதியில் நின்ற மாணவர்கள், திரண்ட பொதுமக்களுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டது. இதையடுத்து மாணவர்கள் இராணுவத்தின் குறித்த வாகனத்தை வழிமறிப்புச் செய்தனர்.

நீண்டநேரம் நிலவிய இந்த முரண்நிலையை அப்புதிய இராணுவ முகாமின் பொறுப்பதிகாரி மன்னிப்புக் கேட்டு முடிவுக்குக் கொண்டு வந்தார். இதையடுத்து மாணவர்கள் குறித்த வாகனத்தை செல்ல அனுமதித்தனர். அத்துடன் பொலிஸார் பாடசாலை அதிபருடன் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து ஆர்ப்பாட்டம் முடிவுக்கு வந்தது.

Exit mobile version