Site icon ilakkiyainfo

இலங்கை வெற்றி: பங்களாதேஷ் பரிதாபம் (வீடியோ)

ஆசிய கிண்ண கிரிக்கெட்டில், ஏற்கனவே இறுதிசுற்றுக்குள் நுழைந்த இலங்கை, தனது இறுதி லீக்கில் தொடர் தோல்விகளை சந்தித்து வந்த பங்களாதேஷ் அணியை 3 விக்கெட்க்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்து 50 ஓவர்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து 204 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து இலங்கை அணிக்கு 205 ஓட்டங்கள் என்ற  வெற்றி இலக்கை நிர்ணயம் செய்தது.

பங்களாதேஷ் அணியில் அதிகப்பட்சமாக அனாமுல் ஹக 49 ஓட்டங்களையும், சம்சூர் ரஹ்மான் 39 ஓட்டங்களையும் எடுத்தனர்.

இதனையடுத்து பதில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 208 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றது.

துடுப்பாட்டத்தில் மஹேல, சங்கக்கார மற்றும் ஜனித் பெரேரா ஆகியோர் ஏமாற்றமளிக்க இறுதிவரை ஆட்டமிழக்காது நிதானமாக துடுப்பெடுத்தாடிய மெத்தியூஸ் அரைச் சதத்தை கடந்து 74 ஓட்டங்களை பெற்று அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

 

(நேரடி ஒளிபரப்பை பார்வையிட இங்கே அழுத்தவும் http://www.starsports.com/cricket/video/index.html

Exit mobile version