சென்னை: ‘தெய்வத்திருமகள்‘ படத்தில் விக்ரமின் மகளாக நடித்தவர் பேபி சாரா. தற்போது ‘கிரீடம்‘ விஜய் இயக்கும் ‘சைவம்‘ படத்தில் நடிக்கிறார்.
இப்படத்தை தயாரித்து இயக்கும் விஜய் கூறியதாவது:
குடும்ப பின்னணியில் உருவாகும் படம். தாத்தா நாசர், பாட்டி கவுசல்யாவை பார்க்க பேத்தியுடன் காரைக்குடி செல்கிறது ஒரு குடும்பம் அந்த குடும்பத்தில் நிகழும் சம்பவங்கள்தான் கதை. ‘தெய்வத்திருமகள்‘ படத்தில் நடித்த பேபி சாரா பேத்தியாக நடிக்கிறார்.
ஒருநாள் விளம்பர படத்தில் நடித்தால் இந்த குழந்தைக்கு ரூ.2 லட்சம் சம்பளம். படத்தில் நடிக்கும்போது 1 நாளைக்கு ரூ. 1 லட்சம் சம்பளம். மொத்தம் 40 நாட்கள் இப்படத்தில் நடித்துள்ளார். தமிழில் நான் அறிமுகப்படுத்தியதற்காக சம்பளம் குறைக்கவில்லையா என்கிறார்கள்.
சினிமா என்பது வியாபாரம் அதை முறைப்படி பின்பற்ற விரும்புகிறேன். நாசர் மகன் லுதுப் என்கிற பாஷா இப்படத்தில் அறி முகமாகிறார். ஜி.வி.பிரகாஷ் இசை. நீரவ் ஷா ஒளிப்பதிவு.
கமல் ஜோடியாக நடிக்க வருகிறார் கவுதமி
07-03-2014
சென்னை: சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருந்த கவுதமி கமல் மனைவியாக நடிக்க உள்ளார்.குரு சிஷ்யன், தேவர் மகன், ருத்ரா என பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் கவுதமி.
கடந்த சில வருடங்களாக கேன்சர் நோய் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பிறகு மீண்டு வந்தார். நீண்ட நாள் வெளியில் தலைகாட்டாமல் இருந்தவர் பின்னர் வழக்கம்போல் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தொடங்கினார்.
கமலின் படங்களுக்கு காஸ்டியூம் டிசைனராகவும் பணியாற்றினார். தற்போது மீண்டும் நடிக்க முடிவு செய்துள்ளார்.
மலையாளத்தில் மோகன்லால் நடித்த ‘த்ரிஷ்யம்‘ என்ற படம் தமிழில் ரீமேக் ஆகிறது. இதில் கமல் நடிக்கிறார். மலையாளத்தில் மோகன்லால் ஜோடியாக நடித்த மீனாவே கமலுக்கு ஜோடியாக நடிப்பார் என்று கூறப்பட்டது.
ஆனால் அது உறுதியாகவில்லை. இதையடுத்து கவுதமி ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.