வயோதிபர் ஒருவரால் செலுத்தப்பட்ட இலகுரக விமானம் ஒன்றும் பரசூட்டில் குதித்த நபரொருவரும் மோதி விபத்துக்குள்ளான விபரீத சம்பவம் அமெரிக்க புளோரிடா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
எனினும் இந்த சம்பவத்தில் அதிசயிக்கத்தக் வகையில் விமானியான ஷனொன் திரெமனியும் (87 வயது) பரசூட்டில் குதித்த ஜோன் பொரெஸ்டும் (49 வயது) உயிர் தப்பியுள்ளனர்.
தென் லேகலான்ட் விமான நிலையத்தில் இடம்பெற்ற இந்த விபத்தின் போது பரசூட் மோதிய விமானம் பரசூட்டை இழுத்தவாறு பறந்து தரையில் முன் பகுதி மோத விழுந்துள்ளது.