கடந்த 30 வருட கால யுத்தத்தில் மிக மோசமான பாதிப்புக்களை எதிர்கொண்ட யாழ்ப்பாணம் இன்று முற்றிலும் வேறுபட்டதாக காட்சி தருகின்றது.
கற்பனையில்கூட மக்கள் எதிர்பார்த்து இராத அளவுக்கு அபரமித மாற்றங்கள் இங்கு நேர்ந்து உள்ளது.
யாழ்ப்பாணத்துக்கு தற்போது வந்து சேர்ந்து உள்ள புதுமையாக கார்கீல்ஸை குறிப்பிட முடியும். யாழ்ப்பாண மாவட்டத்தின் மிக பிரமாண்ட வர்த்தக ஸ்தாபன தொடர்மாடி இதுவே ஆகும். வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி யாழ்ப்பாணத்திலுள்ள கார்கில்ஸ் தனியார் நிறுவன சதுக்கத்திற்கு 09 மார்ச் 2014 விஜயம் செய்தார்.
கார்கில்ஸ் (Cargills Square) பூட் சிற்றி, கே.எப்.சி உணவகம், சைவ மற்றும் அசைவ உணவகங்கள், கடைகள், முப்பரிமாண தோற்றங்களை காண்பிக்கக் கூடிய ஒரு திரையரங்கு உட்பட குளிரூட்டப்பட்ட மூன்று திரையரங்குகள் என்பன இக்கட்டத் தொகுதியில் அமைந்துள்ளன.