Site icon ilakkiyainfo

இலங்கை அணிக்கு விசேட கொடுப்பனவு

 ஆசியக் கிண்ணத்தை கைப்பற்றிய இலங்கை கிரிக்கெட் அணிக்கு விசேட கொடுப்பனவு வழங்க இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.

இதன்படி 100,000 அமெரிக்க டொலர்கள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இவ்வாண்டு இடம்பெறவுள்ள உலகக் கிண்ண இருபதுக்கு- 20 போட்டிகளில் கலந்துகொள்ள இலங்கை அணிக்கு 500,000 டொலர்கள் வழங்கப்படவுள்ளது.

இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றால் 250,000 டொலர்களும், கிண்ணத்தைக் கைப்பற்றினால் மேலதிகமாக 250,00 டொலர்களும் வழங்கப்படவுள்ளன.

அதேவேளை, 2015ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ண போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ள இலங்கை அணிக்கு 750,000 டொலர்களும், இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றால் 250,000 டொலர்களும், இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றால் 750,000 டொலர்களும் வழங்கப்படவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

Exit mobile version