ரூ.5000 கோடி சொத்து மதிப்புள்ள அயர்லாந்து மில்லியனர் ஹெலிகாப்டர் விபத்தில் பலி. அதிர்ச்சி புகைப்படங்கள். ரூ.5000 கோடி சொத்து மதிப்புள்ள அயர்லாந்து மில்லியனர் ஹெலிகாப்டர் விபத்தில் பலி. அதிர்ச்சி புகைப்படங்கள்.
Lord Ballyedmond
சுமார் 5000 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து மதிப்புள்ள மாபெரும் மில்லியனர் ஒருவர் நேற்று மாலை ஹெலிகாப்டர் விபத்து ஒன்றில் பரிதாபமால பலியானார். அவருடன் சேர்ந்து இந்த விபத்தில் மொத்தம் நான்கு பேர் பலியாகியுள்ளனர்.
அயர்லாந்து நாட்டின் மிகப்பெரிய மில்லியன் Lord Ballyedmond என்ற தொழிலதிபர் நேற்று மாலை ஹெலிகாப்டரில் தனது உதவியாளருடன் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத ஏற்பட்ட விபத்து காரணமாக ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கி விழுந்த விபத்து ஒன்றினால் பரிதாபமாக பலியானார்.
இவர்களுடன் ஹெலிகாப்டரை இயக்கிய இரண்டு பைலட்டுக்களும் மரணம் அடைந்தனர்.
மரணம் அடைந்த ஹெலிகாப்டரின் பைலட்டுக்களின் பெயர்கள் Mr Dickerson and Mr Hoyle என்றும், Lord Ballyedmond மற்றும் அவருடைய உதவியாளர் Declan Small அவர்களும் இந்த விபத்தில் மரணம் அடைந்துள்ளனர்.
இந்த விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறும்போது, ‘ஹெலிகாப்டர் பயங்கர சத்தத்துடன் அந்த பகுதியில் இருந்த மரங்களில் சிக்கி கீழே விழுந்ததாக கூறியுள்ளனர். விபத்திற்கு காரணமாக ஹெலிகாப்டரில் உள்ள ஆயில் லீக் ஆனதாக கூறப்படுகிறது.
இந்த விபத்து Gillingham Hall, home of Lord Ballyedmond in Norfolk என்ற இடத்தில் நடந்துள்ளது. போலீஸார் விபத்து பகுதிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.