ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Sunday, September 24
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    Home»உலகம்»9/11 போன்று இந்தியாவில் தாக்குதல் நடத்த மலேசிய விமானம் கடத்தல்?
    உலகம்

    9/11 போன்று இந்தியாவில் தாக்குதல் நடத்த மலேசிய விமானம் கடத்தல்?

    AdminBy AdminMarch 16, 2014No Comments4 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

     

    விமானத்தின் சமிக்ஞைகள் செய்மதி கட்டமைப்புகளில் பதிவு, விமானி வீட்டில் பலத்த சோதனை, விமானத்தை இயக்குவதற்கான மாதிரி விமானி அறையும் கண்டுப்பிடிப்பு, விமானி மீதும் சந்தேகம்

    விமானத்தின் சமிக்ஞைகள் செய்மதி கட்டமைப்புகளில் பதிவு
    காணாமல் போனதாகக் கூறப்படும் மலேசிய விமானத்தின் சமிக்ஞைகள் தமது செய்மதி கட்டமைப்புக்களில் பதிவாகியுள்ளதாக பிரித்தானியாவை தளமாகக் கொண்ட செய்மதி நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
    எம் ஏச் 370 என்ற குறித்த விமானம் 239 பேருடன் கடந்த 8ஆம் திகதி காணாமல் போயிருந்தது.
    இந்த விமானத்தை தேடும் பணிகள் சர்வதேச நாடுகளின் கப்பல்கள் மற்றும் விமானங்களின் ஒத்துழைப்புடன் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
    Miyazaki-Airport-(Japan)F05f5f

    இந்த நிலையிலேயே பிரித்தானியா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
    தமக்கு கிடைக்கப்பெற்றுள்ள இந்த சமிக்ஞைகள், தேடுதல் நடவடிக்கைகளுக்கு பெரிதும் உதவக்கூடும் எனவும் பிரித்தானியா நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
    இதேவேளை, குறித்த விமானம் தொடர்பிலான உண்மைத்தகவலை வெளியிடுமாறு சீனா, மலேசியாவைக் கோரியுள்ளது.
    அத்துடன், தமது தொழிநுட்ப வல்லுனர்களை மலேசியாவிற்கு அனுப்பியுள்ளதாகவும் சீனா அறவித்துள்ளது.
    விமானத்தின் தொலைத்தொடர்பு கட்டமைப்பு திட்டமிட்ட வகையில் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவலையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சீனா குறிப்பிட்டுள்ளது.article-2581817-1C5441ED00000578-457_964x1609

    விமானியின் வீட்டில் பலத்த சோதனை
    காணாமல் போன ஆர் 370 விமானம் கடத்தப்பட்டிருக்கக் கூடும் என்ற தகவல்கள் வெளியாகியிருப்பதைத் தொடர்ந்து அந்த விமானத்தின் விமானியான கேப்டன் சஹாரியின் வீட்டில்பொலிஸார் சோதனை நடத்தி உள்ளனர்.
    காணாமல் போன ஆர் 370 விமானத்தின் பாதையைத் தெரிவிக்கும் டிரான்போன்டர்  கருவியை விமானத்தில் இருந்தவர்கள்தான் வேண்டுமென்றே நிறுத்தியிருக்கின்றார்கள் என்றும் அதனால் விமானம் கடத்தப்பட்டிருக்கும் சாத்தியம் அதிகரித்திருக்கின்றது என்றும் புலனாய்வுத் துறையினர் கண்டுபிடித்திருப்பதைத் தொடர்ந்து,

    அந்த விமானத்தில் இருந்த பயணிகள், விமானிகள், விமானப் பணியாளர்கள் என அனைவரும் தற்போது காவல் துறையினரின் கண்காணிப்பிற்கும், புலனாய்வுகளுக்கும் உள்ளாகியிருக்கின்றார்கள்.

    விமானி சஹாரியின் வீடு மலேசியக் காவல் துறையினரால் முற்றுகையிடப்பட்டிருப்பதாக அமெரிக்காவின் சிஎன்என் தொலைக்காட்சி படங்களோடு செய்திகள் வெளியிட்டிருக்கின்றது.
    மாதிரி விமானி அறை கண்டுபிடிப்பு
    இந்த விமானியின் வீட்டில் சிமுலேட்டர் (ளுiஅரடயவழச) எனப்படும் போயிங் 777 விமானத்தை இயக்குவதற்கான மாதிரி விமானி அறை போன்ற பகுதி நிர்மாணிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. காணாமல் போனதும் சஹாரி செலுத்திய போயிங் 777  விமானம்தான் என்ற நிலையில் ஏன் அவர் இப்படி ஒரு மாதிரி அறையை வீட்டில் நிர்மாணித்தார் என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.
    சந்தேகம் 
    விமானம் செலுத்துவதில் மிகவும் ஆர்வம் கொண்டிருந்த அந்த விமானி தனது பொழுது போக்கிற்காக இப்படி ஒரு மாதிரியை நிர்மாணித்திருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகின்றது.
    மாதிரி விமானி அறையில் சஹாரி இருப்பது போன்ற புகைப்படம் அவரது பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டிருப்பதால், அவர் இந்த நடவடிக்கையை இரகசியமாக செய்திருக்கவில்லை என்ற கருத்தும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.pilot-zaharie-ahmad-shah-malaysia-airlines

    அந்த புகைப்படத்தில், மாதிரி விமானி அறையோடு, மூன்று கணினிகள், கணினித் திரைகள், கம்பிகளுடன் கூடிய தொலைத் தொடர்புக் கருவிகளும் இணைக்கப்பட்டிருப்பது தெரிகின்றது.
    ஷா ஆலாமில் வசிக்கும் 53 வயதான சஹாரி அகமட் ஷா மிகுந்த சமூக அக்கறை கொண்டவர் என்றும் அவரை நம்பி தாராளமாக விமானத்தில் ஏறலாம் என்றும் காரணம் விமானப் பயணிகளுக்கு ஏதாவது ஒன்று என்றால் தனது உயிரைப் பணயம் வைத்து செயலாற்றக் கூடிய மனோபலம் கொண்டவர் அவர் என அவரது பக்கத்து வீட்டார் கூறியதாகவும் சிஎன்என் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
    நேற்று பிற்பகல் பிரதமர் நஜிப், விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற தகவலை வெளியிட்ட பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கு சிறிது நேரத்திற்குப் பின்னர் உடனடியாக காவல்துறையினர் சஹாரியின் வீட்டை முற்றுகையிட்டு சோதனை நடத்தினர்.
    காணாமல் போன விமானம் பற்றி தகவல்கள் ஏதும் கிடைக்குமா எனத் துப்பு துலக்கவே காவல் துறையின் வீட்டை சோதனையிட்டதாக பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக மலேசியாகினி செய்தி வெளியிட்டுள்ளது.
    பினாங்கில் பாலிக் புலாவில் உள்ள சஹாரியின் குடும்ப இல்லத்தைச் சோதனையிடுவதற்காக தங்களுக்கு இன்னும் ஆணை பிறப்பிக்கப்படவில்லை என்றும் காவல் துறை தலைவரின் கட்டளைக்காக தாங்கள் காத்திருப்பதாகவும் பினாங்கு காவல் துறையின் தலைவர் அப்துல் ரஹிம் ஹனாஃபி தெரிவித்துள்ளார்.
    9/11 போன்று இந்தியாவில் தாக்குதல் நடத்த மலேசிய விமானம் கடத்தல்?

    2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் திகதியன்று அமெரிக்கா பயங்கரவாதத் தாக்குதலுக்கு உள்ளாகி  தரைமட்டமாக்கப்பட்ட உலக வர்த்தக இரட்டை கோபுர கட்டிடங்கள்போன்று மாயமான மலேசிய விமானத்தை கடத்தி இந்தியாவை தாக்க திட்டமிட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
    Top-10-Worst-Deadliest-Terrorist-Attacks-in-the-History

    மலேசியாவில் இருந்து 239 பேருடன் சீனாவுக்கு கடந்த சனிக்கிழமை கிளம்பிய விமானம் மாயமானது. அந்த விமானத்தை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
    சீனா 10 செயற்கைக்கோள்களை விமானத்தை தேடும் பணியில் ஈடுபடுத்தியுள்ளது. இந்தியாவும் தனது கடற்படையை தேடல் வேட்டையில் இறக்கியுள்ளது. விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என்று இத்தனை நாட்கள் கூறப்பட்டது. ஆனால் தற்போது விமானம் கடத்தப்பட்டிருக்கக்கூடும் என்ற சந்தேகம் வலுத்துள்ளது.
    இந்நிலையில் வெளியுறவுக் கொள்கை ஆய்வாளரும், முன்னாள் அமெரிக்க துணை செயலாளருமான ஸ்ட்ரோப் டால்பாட் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
    9.11 தாக்குதல் போன்று இந்தியாவில் தாக்குதல் நடத்த மலேசிய விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

    மலேசியா விமானத்தை தேடும் பணி சென்னை கடற்கரை வரை நீட்டிப்பு
    காணாமல் போன மலேசியா விமானத்தை தேடும் பணி சென்னை கடலிலில் இருந்து சுமார் 300 கி.மீட்டர் தொலைவு வரை விஸ்தரிக்கப்பட்டுள்ளதாக மலேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    இந்தியப்பெருங்கடல் பகுதியில்
    இந்த நிலையில் மலேசிய விமானத்தை இந்தியப் பெருங்கடல் பிரதேசத்தில் தேட அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இந்தியப் பெருங்கடலின் அடிமட்டத்தில் அந்த விமானம் சிக்கி இருக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பில்தான், இந்தியப் பெருங்கடல் பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட உள்ளதாக அமெரிக்க ராணுவம் மற்றும் விமான போக்குவரத்து துறை வல்லுனர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.
    அந்தமான் கடல் பகுதியில்
    மலாக்கா ஜலசந்திக்கு மேற்கே அந்தமான் கடல் பகுதியில் இந்த விமானத்தை தேடும் பணியில், இந்தியாவுடன் அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான பி-3சி ஆரியன் கண்காணிப்பு விமானம் ஈடுபட உள்ளது.

    article-2581488-1C502A6A00000578-886_634x460

    சென்னை கடற்கரை வரை
    இந்த நிலையில், மலேசிய விமானத்தை தேடும் பணி சென்னை கடற்கரை விஸ்தரிக்கப்பட்டுள்ளது. மலேசியா அரசின் வேண்டுகோளை அடுத்து வங்காள விரிகுடா கடல் பகுதியிலும் தேடுதல் பணியை இந்தியா தொடங்கியுள்ளது.
    வங்காள விரிகுடா பகுதியில்
    மலேசிய அரசின் வேண்டுகோளை அடுத்து, இந்தியா 9,000 சதுர கிலோமீட்டர் வங்காள விரிகுடா கடல்பகுதியில் தேடும் பணியை விரிவுபடுத்தியுள்ளது. சென்னை கடலிலில் இருந்து சுமார் 300 கி மீட்டர் தொலைவு வரை தேடும் பணி விஸ்தரிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
    article-2581488-1C4D911B00000578-358_634x367

    Post Views: 50

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    மலேசியாவில் மூன்று இலங்கையர்கள் படுகொலை – ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கிவைக்கப்பட்ட நிலையில் சடலங்கள் மீட்பு- சந்தேகநபர்களும் இலங்கையர்கள்

    September 23, 2023

    செப்டெம்பர் மாதத்தில் 75,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை

    September 23, 2023

    ரஸ்யாவின் கிரிமியா கருங்கடல் கடற்படைதளத்தின் மீது உக்ரைன் நீண்டதூர ஏவுகணை தாக்குதல்

    September 23, 2023

    Leave A Reply Cancel Reply

    March 2014
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31  
    « Feb   Apr »
    Advertisement
    Latest News

    கேணல் மும்மர் கடாபி: இந்திரா காந்தியை லிபியா வரவழைக்க கடைபிடித்த உத்தி என்ன தெரியுமா?

    September 24, 2023

    உடுக்கை Entrance; திரிசூல Light; சிவன் வடிவில் உருவாகும் பிரம்மாண்ட கிரிக்கெட் மைதானம்!-வீடியோ

    September 24, 2023

    என் கணவர் பாக்ஸிங் செய்ய ரெடி.. சீமானின் சவாலை ஏற்று நாள் குறித்த வீரலட்சுமி..!

    September 24, 2023

    2 குழந்தைகளுடன் பெண் போலீஸ் உயிரை மாய்த்த விவகாரம்: கள்ளக்காதல் பிரச்சனையில் போலீஸ்காரரும் தற்கொலை

    September 24, 2023

    மலேசியாவில் மூன்று இலங்கையர்கள் படுகொலை – ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கிவைக்கப்பட்ட நிலையில் சடலங்கள் மீட்பு- சந்தேகநபர்களும் இலங்கையர்கள்

    September 23, 2023
    • மகாவம்சத்தில் புதைந்துள்ள…/ பகுதி 01
    • அத்துமீறிய தலாய் லாமா? 8 வயது சிறுவனிடம் சில்மிஷமா? அதுவும் பொது இடத்தில். -(வீடியோஇணைப்பு)
    • ரஷ்ய அதிபர் புதினை கைது செய்வது சாத்தியமா? யுக்ரேன் போர்க்குற்ற வழக்கில் சர்வதேச நீதிமன்றம் பிடிவாரண்ட்
    • ஆபாச பட நடிகையுடனான தொடர்பை மறைக்க பணம் கொடுத்த குற்றச்சாட்டு – டிரம்ப் கைது செய்யப்படுவாரா?
    • ஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்ததாக ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவாகிறது ட்ரம்ப்

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    Recent Posts
    • கேணல் மும்மர் கடாபி: இந்திரா காந்தியை லிபியா வரவழைக்க கடைபிடித்த உத்தி என்ன தெரியுமா?
    • உடுக்கை Entrance; திரிசூல Light; சிவன் வடிவில் உருவாகும் பிரம்மாண்ட கிரிக்கெட் மைதானம்!-வீடியோ
    • என் கணவர் பாக்ஸிங் செய்ய ரெடி.. சீமானின் சவாலை ஏற்று நாள் குறித்த வீரலட்சுமி..!
    • 2 குழந்தைகளுடன் பெண் போலீஸ் உயிரை மாய்த்த விவகாரம்: கள்ளக்காதல் பிரச்சனையில் போலீஸ்காரரும் தற்கொலை
    Recent Comments
      Quick Links
      • முகப்பு
      • இந்தியா
      • உலகம்
      • வெளிநாட்டு
      • சினிமா
      • விளையாட்டு
      • ஆரோக்கியம்
      • சுற்றுலா
      • வினோதம்
      • அரசியல்
      Quick Links
      • கட்டுரைகள்
      • தொடர் கட்டுரைகள்
      • கவிதைகள்
      • கலைகள்
      • வீடியோ
      • புகைப்பட தொகுப்பு
      • தொழில்நுட்பம்
      • வேலைவாய்ப்பு
      • கல்வி
      Quick Links
      • ஆரோக்கியம்
      • அந்தரங்கம்
      • ஆன்மீகம்
      • சுற்றுலா
      • சிறப்பு செய்திகள்
      • வினோதம்
      BRAKING NEWS
      • மகாவம்சத்தில் புதைந்துள்ள…/ பகுதி 01
      • அத்துமீறிய தலாய் லாமா? 8 வயது சிறுவனிடம் சில்மிஷமா? அதுவும் பொது இடத்தில். -(வீடியோஇணைப்பு)
      • ரஷ்ய அதிபர் புதினை கைது செய்வது சாத்தியமா? யுக்ரேன் போர்க்குற்ற வழக்கில் சர்வதேச நீதிமன்றம் பிடிவாரண்ட்
      • ஆபாச பட நடிகையுடனான தொடர்பை மறைக்க பணம் கொடுத்த குற்றச்சாட்டு – டிரம்ப் கைது செய்யப்படுவாரா?
      • ஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்ததாக ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவாகிறது ட்ரம்ப்
      2023 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

      swissreplicas.to

      bestwatchreplica.co
      replica watches

      swiss replica website

      fake rolex for sale
      relogios replicas
      Go to mobile version