Site icon ilakkiyainfo

ஆற்று வெள்ளத்தை கடந்து செல்ல வியட்நாம் மக்கள் கண்டுபிடித்த நூதன முறை. வீடியோ இணைப்பு.

வியட்நாம் நாட்டில் தற்போது கனமழை பெய்து வருகிறது ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆறுகளுக்கு இடையே உள்ள பாலம் பழுதாகி பல இடங்களில் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.

இந்நிலயில் வியட்நாம் நாட்டில் உள்ள கிராமத்தினர் ஆற்றை கடந்து பள்ளிக் குழந்தைகளையும் ஆசிரியர்களையும் கொண்டு செல்ல ஒரு நூதன முறையை கடைபிடித்து வருகின்றனர்.

ஒரு பெரிய பிளாஸ்டிக் கவரில் ஒவ்வொருவரையும் உள்ளே நுழைத்து அவர்களை ஒரு கையால் பிடித்துக்கொண்டு மற்றொரு கையின் உதவியால் நீந்தி அக்கரைக்கு சென்று அவர்களை சேர்த்துவிடும் பணியை செய்து வருகின்றனர்.

இந்த முறையில்தான் ஆசிரியர், ஆசிரியைகளும் பள்ளிக்கு செல்கின்றனர். இவ்வாறு உதவுவதற்காகவே அந்த கிராமத்தினர் சிலரை நியமித்து உள்ளனர்.

இந்த நூதன முறையின் மூலம் பள்ளிக்குழந்தைகள் தங்கு தடங்கல் இன்றி பள்ளிக்கு சென்று வருகின்றனர்.  இந்த பகுதியில் உள்ள ஒருவர் இந்த சம்பவத்தை வீடியோ எடுத்து இணையத்தில் பதிவு செய்துள்ளார்.

அந்த வீடியோ தற்போது உலகம் முழுவதும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டு வருகிறது. நமது தேடிப்பார் பார்வையாளர்களுக்காக நம் இணையதளத்திலும் இந்த வீடியோவை பதிவு செய்திருக்கின்றோம்.

Exit mobile version