ilakkiyainfo

டொரண்டோவில் 4 மாடி கட்டிடத்தின் இரும்புச்சாரம் சரிந்து விழுந்தது. நூலிழையில் தப்பிய கார்.(படங்கள், வீடியோ)

scaffolding-fallsடொரண்டோவில் 4 மாடி கட்டிடத்தின் இரும்புச்சாரம் சரிந்து விழுந்தது. நூலிழையில் தப்பிய கார். டொரண்டோவில் 4 மாடி கட்டிடத்தின் இரும்புச்சாரம் சரிந்து விழுந்தது. நூலிழையில் தப்பிய கார்.

டொரண்டோவில் உள்ள downtown பகுதியில் நான்கு மாடி கட்டிடம் ஒன்றில் கட்டிட வேலைக்காக அமைக்கப்பட்டிருந்த இரும்புச்சாரம் திடீரென நிலைகுலைந்து கிழே விழுந்தது. அந்த நேரத்தில் அவ்வழியே சென்று கொண்டிருந்த கார் ஒன்று நூலிழையில் விபத்தில் இருந்து தப்பியது. இதனால் அந்த காரின் டிரைவரும், பயணி ஒருவரும் காயமின்றி உயிர் தப்பினர்.

டொரண்டோவில் உள்ள downtown பகுதியின் 17 Peter St., just south of Richmond Street West என்ற இடத்தில் நான்கு மாடி கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தின் கட்டிட பணிக்காக இரும்பிலான சாரம் அமைக்கப்பட்டிருந்தது.

இந்த சாரத்தின் ஒரு பகுதி, நேற்று மதியம் திடீரென சரிந்து சாலையில் விழுந்தது. அப்போது அவ்வழியே ஒரு கேப் கார் பயணித்தது. மிகச்சரியாக அந்த கார் மீது சாரம் விழு இருந்த நிலையில் கார் ஓட்டுனர்   சாமர்த்தியமாக காரை திருப்பி, விபத்தில் இருந்து நூலிழையில் உயிர் தப்பினார். அவருடைய   காரில் பயணம் செய்த பயணிக்கும் எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை.

Exit mobile version