ilakkiyainfo

பாஜக அணியில் தேமுதிக-14, பாமக-8, பாஜக-8, மதிமுக 7 தொகுதிகளில் போட்டி- ராஜ்நாத்சிங் அறிவிப்பு!!

20-vijakanth-rajnath-600-jpg

சென்னை: தமிழக பாரதிய ஜனதா கூட்டணியில் தேமுதிக 14, பா.ம.க. 8, பா.ஜ.க. 8, ம.தி.மு.க.7 தொகுதிகளில் போட்டியிடும் என்று பாஜகவின் தேசியத் தலைவர் ராஜ்நாத்சிங் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

லோக்சபா தேர்தலுக்கான பாஜக கூட்டணியில் மதிமுக, தேமுதிக, பாமக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி ஆகியவை   இணைந்துள்ளன. இந்த கட்சிகளுடனான   தொகுதிப்  பங்கீட்டு  இழுபறி    தமிழக தேர்தல் அரசியல் வரலாற்றிலேயே   இல்லாதவகையில் உச்சபட்சமான       குழப்பமாக இருந்தது.

இதனால் பாரதிய ஜனதா கூட்டணி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று..நாளை என பல மாதங்களாக இழுபறியாகவே இருந்து வந்தது. இந்த நிலையில் ஒருவழியாக பல அதிருப்திகளுக்கு மத்தியில் பாஜக கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு முடிந்துள்ளது.

இதைத் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவதற்காக பாஜக தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங் இன்று பிற்பகல் சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் பாஜக தலைவர்கள் பொன்.

ராதாகிருஷ்ணன் இல. கணேசன் ஆகியோர் ராஜ்நாத்சிங்கை வரவேற்றனர். அதேபோல் பாஜக கூட்டணிக் கட்சியான மதிமுகவின் பொதுச்செயலர் வைகோவும் தொண்டர்களுடன் சென்று ராஜ்நாத்சிங்கை வரவேற்றார்.

ராஜ்நாத்சிங்குடன்    தேமுதிக, மதிமுக, பாமக தலைவர்கள் ஆலோசனை பின்னர்   சென்னையில் ஹோட்டல்   ஒன்றில் ராஜ்நாத் சிங்கை   கூட்டணிக் கட்சித்    தலைவர்கள்   சந்தித்துப் பேசினர்.

தேமுதிகவின்   தலைவர்   விஜயகாந்த், மதிமுகவின்  பொதுச்செயலர்   வைகோ, பாட்டாளி  மக்கள்   கட்சியின்   இளைஞரணித்   தலைவர் அன்புமணி ராமதாஸ், தலைவர் ஜி.கே. மணி, இந்திய ஜனநாயகக் கட்சியின் பாரிவேந்தர், புதிய நீதிக் கட்சியின் ஏ.சி. சண்முகம்,  கொங்கு  நாடு மக்கள்    தேசியக் கட்சியின் ஈஸ்வரன் உள்ளிட்டோர் ராஜ்நாத்சிங்குடன் ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனை முடிவடைந்த பின்னர் அனைத்து கூட்டணிக் கட்சித் தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர் அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்நாத்சிங் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில்  தேமுதிக, பாட்டாளி மக்கள் கட்சி, மதிமுக, இந்திய ஜனநாயகக் கட்சி, கொங்குநாடு    மக்கள் தேசியக் கட்சி ஆகியவை   இடம்பெற்றுள்ளதாக அறிவித்தார்.

தொகுதி பங்கீடு- தேமுதிகவுக்கு 14 அத்துடன் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீட்டு விவரத்தையும் ராஜ்நாத்சிங் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.

பாஜக அணியில்
தேமுதிக- 14

பாமக -8

பாஜக- 8

மதிமுக- 7

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி- 1

இந்திய ஜனநாயக கட்சி- 1 தொகுதிகளில் போட்டியிடும் என்று அறிவித்தார் ராஜ்நாத்சிங்.

இந்த அறிவிப்பின்போது இந்தக் கூட்டணி உருவாக காரணமாக இருந்த காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியனும் அங்கிருந்தார்.

தமிழகத்தில் பாஜக-பாமக தொகுதிச் சிக்கல் தீர்ந்தது

தமிழகத்தில் பாஜக அணியில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு எந்தத் தொகுதிகள் என்ற பிரச்சினையில் ஏற்பட்ட முட்டுக்கட்டை நிலை தீர்ந்து, இன்று  பாஜக அணியில்  போட்டியிடும்  கட்சிகளின் தொகுதி விவரங்கள் அறிவிக்கப்பட்டன.

பாரதீய ஜனதாக் கூட்டணியில் தேமுதிகவிற்கு 14 இடங்களும், பாட்டாளி மக்கள் கட்சிக்கு 8 இடங்களும், பாரதீய ஜனதாக் கட்சிக்கு 8 இடங்களும், ம.தி.மு.கவிற்கு 7 இடங்களும் கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி ஆகியவற்றுக்குத் தலா 1 இடமும் அறிவிக்கப்பப்ட்டுள்ளது என பாஜகவின் தேசியத் தலைவர் ராஜ்நாத்சிங் இன்று சென்னையில் அறிவித்தார்.

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை முதலில் துவங்கிய கட்சி பாரதீய ஜனதாக் கட்சிதான். இருந்தபோதும், இந்தக் கூட்டணியில் தொகுதி உடன்பாடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து இழுபறியாகவே நீடித்துவந்தன.

முதலில் எண்ணிக்கை தொடர்பான பிரச்சினைகளும் பிறகு எந்தத் தொகுதி யாருக்கு என்ற குழப்பமும் நீடித்தது.

இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்றுவந்தன.

இதைத் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவதற்காக பாஜக தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங் இன்று பிற்பகல் சென்னை வந்தார்.

இதற்குப் பிறகு ராஜ்நாத் சிங்கை தே.மு.திக தலைவர் விஜயகாந்த், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, பாட்டாளிமக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி   ராமதாஸ், தலைவர் ஜி.கே. மணி, இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவர் பாரிவேந்தர், கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் ஈஸ்வரன் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர்.

அதற்குப் பிறகு நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சந்தித்துப் பேசினர். தேமுதிகவின் தலைவர் விஜயகாந்த், மதிமுகவின் பொதுச்செயலர் வைகோ, பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், தலைவர் ஜி.கே. மணி, இந்திய ஜனநாயகக் கட்சியின் பாரிவேந்தர், புதிய நீதிக் கட்சியின் ஏ.சி. சண்முகம், கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் ஈஸ்வரன் உள்ளிட்டோர் ராஜ்நாத்சிங்குடன் ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனை முடிவடைந்த பின்னர் அனைத்து கூட்டணிக் கட்சித் தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். தமிழக பாரதீய ஜனதாக் கூட்டணியில் ஏற்பட்டுள்ள தொகுதிப் பங்கீட்டு விவரத்தையும் ராஜ்நாத்சிங் அதிகாரபூர்வமாக வெளியிட்டார்.

போட்டியிடும் கட்சிகள், தொகுதிகள் விவரம்

பாரதீய ஜனதாக் கட்சிக்கு தென்சென்னை, வேலூர், தஞ்சாவூர், நீலகிரி, கோயம்புத்தூர் , சிவகங்கை, ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

தே.மு.திகவிற்கு, திருவள்ளூர், மத்திய சென்னை, வடசென்னை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், திருச்சி, கடலூர், மதுரை, திருநெல்வேலி, திருப்பூர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ம.தி.மு.கவிற்கு, காஞ்சிபுரம், ஈரோடு, தேனி, விருதுநகர், தூத்துக்குடி, ஸ்ரீபெரும்புதூர், தென்காசி ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

பாட்டாளி மக்கள் கட்சிக்கு அரக்கோணம்,கிருஷ்ணகிரி, தருமபுரி, ஆரணி, சிதம்பரம், மயிலாடுதுறை, திருவண்ணாமலை, நாகப்பட்டினம் ஆகியதொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்ட்டுள்ளன.

கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சிக்கு பொள்ளாச்சி தொகுதியும் இந்திய ஜனநாயகக் கட்சிக்கு பெரம்பலூர் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளன.

இந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராஜ்நாத் சிங், பாரதீய ஜனதாக் கட்சி ஆட்சிக்கு வந்தால், தமிழக மீனவர் பிரச்சனைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

Exit mobile version