ilakkiyainfo

யூரோவுக்கு மாறியதால் செல்லாக்காசான இத்தாலி பெண்ணின் 100 மில்லியன். லிரா பணம்

 

இத்தாலி பெண் ஒருவர் தனது வீட்டின் பெட்டகம் ஒன்றில் இருந்து 100 மில்லியன் லிரா ரொக்க பணத்தை கண்டெடுத்துள்ளார். ஆனால் இத்தாலி ஒரு தசாப்தத்திற்கு முன்னரே யு+ரோ நாணயத்திற்கு மாறியதால் அவரது இந்த செல்வம் செல்லாதது என்று அந்நாட்டு வங்கி; குறிப்பிட்டுள்ளது.

கிளவ்டியா மொரட்டி என்ற பெண் தனது மாமாவின் வீட்டில் இருந்து இந்த 100 மில்லியன் லிராவையும் கண்டெடுத்துள்ளார். தனது மாமா மரணித்த நிலையில் அவரது சொத்துகளுக்கு மொரட்டியே உரிமை கோருகிறார்.
article-2583647-1C64724600000578-504_308x442
தொலைபேசி மையம் ஒன்றில் பணியாற்றும் குறித்த பெண், தான் கண்டெடுத்த பணத்துடன் இத்தாலி மத்திய வங்கிக்கு சென்று அவைகளை புழக்கத்தில் இருக்கும் யூரோ நாணயமாக மாற்ற முயற்சித்திருக்கிறார். ஆனால் முழுப்பணமும் பெறுமதியற்றது என்று மத்திய வங்கி கூறிவிட்டது.

இந்நிலையில் இந்த பணத்தை புழக்கத்திற்கு கொண்டுவர மொரட்டி நீதிமன்றத்தை நாடியிருக்கிறார். இந்த பணம் 51,654.69 யுரோக்கள் (ஒரு கோடி ரூபா) பெறுமதியானது என அவர் வழக்கு தொடுத்திருக்கிறார்.

கடந்த 2002 ஆம் ஆண்டு யு+ரோ நாணயத்திற்கு மாறிய இத்தாலி, புழக்கத்தில் இருந்த லிராவை யு+ரோவாக மாற்ற கால வரையறையை வழங்கியிருந்தது.


இதன்படி கடந்த 2011 டிசம்பர் 6 ஆம் திகதியுடன் இந்த நாணய மாற்றுக்காலம் முடிவுக்கு வந்தது. எனினும் யுரோ மண்டலத்தில் இருக்கும் ஜெர்மன், அயர்லாந்து உட்பட ஒன்பது நாடுகள் தனது பழைய நாணயத்தை மாற்றுவதற்கு கால வரையறை விதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


GeoBeats

Exit mobile version