Site icon ilakkiyainfo

‘ஏண்டா ஹீரோ ஆனோம்?’னு எனக்கே அசிங்கமா இருக்கு. சந்தானத்தின் கலகல பேட்டி

என்னது… சந்தானம், ஹீரோவா நடிக்கிறானா?’னு அதிர்ச்சியாகி நம்ம ஹீரோ ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் அடுத்தடுத்துப் பேசினாங்க. ‘மச்சான், எங்களுக்கு ஃப்ரெண்டா வந்து காமெடி பண்ணுவ. இப்ப நீயே ஹீரோ. இதுல உனக்கு யாரு ஃப்ரெண்டு?’னு போன்ல கேட்டான் ஆர்யா.

‘மச்சான் ஹாலிவுட்ல அர்னால்டுக்கு எல்லாம் ஃப்ரெண்டே கிடையாதுடா. தனியா வந்து, தனியாவே ஃபைட் பண்ணிப் பட்டையைக் கிளப்புவாரு. அப்படித்தான் மச்சான் இதுல நான்’னு சொன்னேன். அவன் எகிறிக் குதிச்சுச் சிரிச்சது இந்த எண்ட்ல இருந்த எனக்குப் புரிஞ்சது!”-ஆர்ம்ஸ் ஏற்றி, பாலீஷ் கூட்டி பளபளக்கிறார் சந்தானம்.

100 படங்களில் காமெடியன் என்ற மைல்கல்லுக்குப் பிறகு, ‘வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்’ படத்தில் ஹீரோ என்ட்ரி கொடுக்கிறார்.

”ஆர்யா, அப்படிச் சொன்னார். மத்தவங்கள்லாம் என்ன சொன்னாங்க?”

”சிம்பு, ‘என்ன ஹீரோ… என்ன பண்றீங்க?’னு விசாரிச்சார். ‘அந்த வார்த்தையைச் சொல்லாதீங்க’ன்னேன். ‘ஏன்… என்னாச்சு?’னு கேட்டார். ‘நான் ஹீரோவா நடிக்கிறதுக்குள்ள வி.டி.வி.கணேஷ் எல்லாம் ஹீரோ ஆகிட்டார். ‘ஏண்டா ஹீரோ ஆனோம்?’னு எனக்கே அசிங்கமா இருக்கு. அதனால நீங்க ‘சந்தானம்னே கூப்பிடுங்க’ன்னேன்.

சிம்பு லைனை கட் பண்ணதும் பக்கத்துல இருந்த கணேஷ், ‘ஏண்டா அவரு உனக்கு போன் பண்ணார்னா, ஊர் உலகத்தைப் பத்தி ஏதாச்சும் பேசுங்க. என்னை ஏண்டா ஊறுகாய் ஆக்குறீங்க?’னு காண்டானார். ‘ஹீரோவா நடிக்கிற. முடி எல்லாம் கரெக்டா இருக்கா.

மார்க்கெட்ல ஏகப்பட்ட புது விக் வந்திருக்கு. சாம்பிள் பார்த்தியா?’னு மெசேஜ் பண்ணார் ஜீவா. ‘நானும் யூத்தான்யா…’னு ரிப்ளை பண்ணேன். இப்படி… பல போட்டி பொறாமைகளுக்கு மத்தியில்தான் ஹீரோவா நடிக்க வேண்டியிருக்கு!”

”காமெடிப் பயணம் தெளிவாப் போயிட்டு இருக்கிறப்ப, ஏன் இந்தத் திடீர் திருப்பம்?”

”பழைய பல்லவிதான். ஆனா, இது, இந்தக் கதைக்காக எடுத்த முடிவு. இந்தப் படத்துல ஒரு காமெடியன்தான் ஹீரோவா நடிக்க முடியும். ஏன்னா, அப்பாவியாவும் இருக்கணும்; அப்ளாஸும் அள்ளணும். அப்போ ஒரு எஸ்டாபிளிஷ்டு ஹீரோவால இதைப் பண்ண முடியாது. புதுமுகமும் தாங்க மாட்டார். ஆக, எனக்கான சப்ஜெக்ட்டாத் தோணுச்சு. உடனே ஓ.கே. சொல்லிட்டேன்.

மத்த படங்களைவிட   கொஞ்சம் எக்ஸ்ட்ரா காமெடி, பளிச் பன்ச் மட்டும் சேர்த்துட்டு நான் ஹீரோ ஆகலை. ‘நான் எது பண்ணாலும் தியேட்டர்ல கைதட்டுவாங்க’னும் நினைக்கலை. ஸ்க்ரிப்ட்ல ஆரம்பிச்சு என் ஸ்கின்டோன் வரைக்கும் சிறிசும் பெருசுமா நிறைய சுவாரஸ்யம் சேர்த்திருக்கோம்.

படத்துல டான்ஸ், சேஸிங், ரன்னிங்னு நிறைய இருக்கு. திடீர்னு ஒருநாள் கொஞ்ச தூரம் ஓடிட்டு, ‘கால் பிடிக்குது, தொடை பிடிக்குது’னு உட்கார்ந்து ரெஸ்ட் எடுத்து ரெஸ்ட் எடுத்து நடிச்சா, ரெண்டு வருஷமாகும் படத்தை முடிக்க! அதுவும் போக, ‘வயித்தைப் பாரு தலகாணி மாதிரி வெச்சிருக்கான்’னு நாமளே பலரை ஓட்டியிருக்கோம்.

இப்போ நாமளும் அப்படி வந்து நின்னா, எல்லாரும் சிரிப்பாங்கள்ல. அதனால ஜிம் ஓட்டம், டான்ஸ் ஆட்டம்னு எல்லா ஏரியாலயும் பட்டி, டிங்கரிங் பார்த்துட்டுத்தான் நடிக்க ஆரம்பிச்சேன். பார்த்தா கொஞ்சாமாவது ‘ஹீரோ லுக்’ வருதுல்ல!”

”வருது… வருது… ஆனா, அது மட்டும் போதுமா?”

”எவ்வளவோ யோசிக்கிறோம்… அதை யோசிக்க மாட்டோமா? ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’-வில் பவர்ஸ்டார் மாதிரி இந்தப் படத்துலயும் ஒரு சர்ப்ரைஸ் மேஜிக் வெச்சிருக்கோம். ஆனா, அதைப் பத்தி அப்புறம் பேசலாம்!”

”இப்பவே சொல்லுங்க…!” என்று அழுத்திக் கேட்டதும்…

” ‘லட்டுக்கு ஒரு பவர்ஸ்டார்’னா ‘வல்லவனுக்குப்  புல்லும் ஆயுதம்’ல ஒரு சோலார்ஸ்டார். ஆமா ப்ரோ… நம்ம ராஜகுமாரன் சார், படத்துல பிரமாதமான ஒரு கேரக்டர் பண்றார். ‘காரம் சாப்பிட்டு கண்ணுல தண்ணி வந்து பாத்திருப்ப. கலாய்ச்சுக் கலாய்ச்சே கண்ணுல தண்ணி வந்து பாத்திருக்கியா?’னு என்கிட்ட  கேட்பார். ‘பார்த்ததில்லை’ம்பேன். ‘இதுல நீ பார்ப்ப’னு சொல்வார். இது ஒரு டீஸர்தான். இப்படி படம் முழுக்க அவரோட அழும்பு தூள் பறக்கும்!

படத்தோட இயக்குநர் ஸ்ரீநாத், என் நண்பன். ‘சந்தோஷ் சுப்ரமணியம்’ல நடிக்கும்போதே, ‘நீ, நான், பிரேம்ஜி மூணு பேரும் சேர்ந்து ஒரு படம் பண்ணலாம் மச்சான். நான்தான் டைரக்ஷன்’னு சொல்லிட்டு இருப்பான். அவனுக்கு டைரக்ஷன்தான் ஆர்வம். ஆனா, நடிக்கும் வாய்ப்புதான் வந்துச்சு. இப்போ அவன் திறமையை நிரூபிக்கிற மாதிரி இந்தப் படம் அமைஞ்சிருக்கு!”

”உங்க ஆதர்சம் கவுண்டமணியும் ஹீரோவா நடிக்க ஆரம்பிச்சுட்டாரே!”

”எனக்கு தங்கவேலு, கவுண்டமணி… இவங்க ரெண்டு பேரும்தான் இன்ஸ்பிரேஷன்னு பல தடவை சொல்லியிருக்கேன். கவுண்டமணி அண்ணன்கிட்ட எப்பப் பேசினாலும், செம லந்து கொடுப்பார். ஏதோ ஒரு படம் வந்து செம மொக்கை வாங்கின சமயத்துல பேசினேன். ‘அண்ணே அந்தப் படம் பயங்கரமாப் போயிட்டு இருக்கு. டிக்கெட்டே கிடைக்கலையாம்’னு சொன்னேன்.

பட்டுனு, ‘ஏன் டிக்கெட்டே அடிக்கலையா?’னு கேட்டார் பாருங்க ஒரு கேள்வி… அதுதான் கவுண்டர்! சுந்தர்.சி, ராஜேஷ், பூபதி பாண்டியன், சுராஜ்னு காமெடியில பின்ற எல்லா டைரக்டர்ஸும், ‘அவர்கூட சேர்ந்து ஒரு படம் பண்ணுங்க. சூப்பரா இருக்கும்’னு சொல்லுவாங்க. அந்த ஐடியா எனக்கும் உண்டு.

ஆனா, அவர்கிட்ட இதைப் பத்தி நான் இதுவரை பேசினதே இல்லை. இப்போ இந்தப் பேட்டி மூலமா சொல்றேன்… இப்ப அவரும் ஹீரோவாப் பண்ணிட்டு இருக்கார். நானும் பண்றேன். அதனால எங்க ரெண்டு பேருக்கும் ஏத்த மாதிரி டபுள் ஹீரோ சப்ஜெக்ட் வந்துச்சுனா, அண்ணன்கிட்ட போய் கேட்கலாம்னு இருக்கேன்

Thanks to vikatan.com

Exit mobile version