ilakkiyainfo

பாரதிராஜா ஜோடியாகிறார் மயிலு ஸ்ரீதேவி!

 

ஜீவி பிரகாஷ் ஹீரோவாக நடிக்கும் இரண்டாவது படத்தில் பாரதிராஜாவுக்கு ஜோடியாக நடிக்கிறார் ஸ்ரீதேவி. பதினாறு வயதினிலே படத்தில் பாரதிராஜாவால் முன்னணி நடிகையாக உயர்ந்தவர் ஸ்ரீதேவி. அந்தப் படத்தில் மயிலுவாக வந்து மக்கள் மனங்களில் அமர்ந்தார். அதன் பிறகு இந்தியத் திரையுலகில் இணையற்ற நட்சத்திரமாக வலம் வந்தார்.

திருமணம் முடிந்து இப்போது அவரது இரு மகள்களும் நடிப்பு மாடலிங் என்று களமிறங்கியுள்ள நிலையில், மீண்டும் முழுவீச்சில் நடிக்கக் கிளம்பிவிட்டார் ஸ்ரீதேவி. அவரது மறுபிரவேசப் படமான இங்கிலீஷ் விங்கிலீஷ் நல்ல வெற்றியைப் பெற்றது.

தொடர்ந்து நல்ல வாய்ப்புகளை மட்டும் ஏற்றுக் கொள்கிறார் ஸ்ரீதேவி. தமிழில் ஜீவி பிரகாஷ் ஹீரோவாக நடிக்கும் த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தில் இயக்குநர் பாரதிராஜா முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார் என்பதை ஏற்கெனவே தெரிவித்திருந்தோம்.

இப்படத்தில் பாரதிராஜாவுக்கு ஜோடியாக நடிக்கப் போகிறவர் மயிலு ஸ்ரீதேவிதான். இயக்குநர் பாரதிராஜா ஏற்கெனவே சில படங்களில் நடித்திருந்தாலும், சமீபத்தில் வெளியான பாண்டிய நாடு மூலம் மிகச் சிறந்த நடிகர் என்ற பாராட்டைப் பெற்றுள்ளார். இப்போது பல இயக்குநர்களும் பாரதிராஜாவை தங்கள் படங்கள் முக்கிய வேடமேற்கக் கேட்டு வருகின்றனர்.

சைவம் படத்துக்காக நாசரின் கெட்-அப் இது!
22-04-2014
22-nasser-saivam-movie-600-jpg
எந்த வேடமாக இருந்தாலும் அந்த வேடமாகவே மாறிவிடுபவர் நாசர். படத்தில் தனது கதாபாத்திரத்துக்கு ஏற்ப தனது உடல் மற்றும் முக மொழிகளை மாற்றி கொண்டு நடிப்பதில் வல்லவர். ஏஎல் விஜய்யின் எல்லாப் படங்களிலும் நாசருக்கு தவறாமல் ஒரு பாத்திரம் இருக்கும்.

இப்போது ஏ எல் விஜய் இயக்கும் சைவம் படத்தில் முதியவர் கதாபத்திரத்திற்கு பாதி வழுக்கை விழுந்தவர் தோற்றத்தில் நடிக்கிறார் நாசர். தோற்றம் இயல்பாக இருக்க வேண்டும் என்பதற்காக தனது முடியை மழித்துக் கொண்ட நாசர், அசல் வழுக்கை தலையுடைய முதியவர் போன்று காட்சி தருகிறார்.

இந்தப் படத்துக்காக முடியை மழித்துக் கொண்டால்… மற்ற படங்களின் தொடர்ச்சி பாதிக்குமே என்பதால், நாசருக்குப் பொருத்தமான விக் ஒன்றை ஒப்பனை கலைஞர் பட்டணம் ரஷீத் செய்து கொடுத்துள்ளாராம்.




magdff123





Jodi no 1-07

Exit mobile version