Site icon ilakkiyainfo

தெற்கு பாதாள உலகக் குழு உறுப்பினர் ‘பாலங்­கட ஹீனா’ சுட்டுகொல்லப்பட்டார்..

23 கொலைகள்,20 இற்கு மேற்­பட்ட கொள்­ளைகள்,  எண்­ணி­ல­டங்­காத  கப்பம் கோரல்கள் என தொடர்ந்த பாலங்­கட ஹீனாவின் சரித்­திரம் கடந்த 11 ஆம் திகதி இரத்­தி­ன­புரி, மஹ­வலவத்த காட்டில் முடி­வுக்கு வந்­தது.

தெற்கு பாதாள உலகக் குழுவின் மிக முக்­கிய உறுப்­பி­னர்­களில் ஒரு­வ­ராக   கரு­தப்­படும் ‘பாலங்­கட ஹீனா’ என அழைக்­கப்­படும் அரும கமகே சுகத்  சாமிந்­தவின் முடிவு இந்த மாதம் குற்­ற­வியல் தொடர்பில் மற்­று­மொரு பதி­வினை மீட்ட வைத்­துள்­ளது.

சிரேஷ்ட  பொலிஸ் அத்­தி­யட்சர் அஜித் ரோஹண

அதா­வது   ஆயுதம் காட்­டு­வ­தாக பொலி­ஸாரை அந்த காட்­டுக்கு அழைத்துச் சென்று பொலிஸார் மீது கைக் குண்­டொன்றை வீச முற்­பட்ட போது தற்­காப்பு நிமித்தம் இரத்­தி­ன­புரி பொலிஸ் நிலை­யத்தின் குற்­ற­வியல் பிரி­வுக்கு பொறுப்­பான பொலிஸ் பரி­சோ­தகர் அம­ர­சிறி மேற்கொண்ட  துப்­பாக்கி பிர­யோ­கத்தில் பாலங்­கட  ஹீனா உயி­ரி­ழந்­த­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் சிரேஷ்ட  பொலிஸ் அத்­தி­யட்சர் அஜித் ரோஹண தெரி­வித்தார்.

இதன் படியே 1999 ஆம் ஆண்டு முதல் பாரிய குற்­றங்­க­ளுடன்  தொடர்புபட்டு 2014 ஆம் ஆண்டு வரை அவ்­வா­றான நடவடிக்கைகளை தொடர்ந்த ஒரு பாதாள உலகப் புள்­ளியின் கதை முடி­வுக்கு வரு­கி­றது.

ஆம், கடந்த பெப்­ர­வரி மாதம்   13 ஆம் திகதி மாலை 6.00 மணி­ய­ளவில் இரத்­தி­ன­புரி பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட மலன்­கம பிர­தே­சத்தில் பிரபல  இரத்­தினக் கல் வியா­பா­ரி­யான சுமித் குண­சே­க­ரவை சுட்­டுக்­கொன்­று­விட்டு 80 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான மாணிக்கக்கல், 40 ஆயிரம் ரூபா பணம் ஆகி­ய­வற்றை கொள்­ளை­யிட்டு சென்­றமை தொடர்­பான  சம்­ப­வமே  பாலங்­கட ஹீனா­வுக்கு மர­ணத்தை அழைத்து வந்தது எனலாம்.

தெற்கு பாதாள உலகின் பிர­பல தலை­வ­ராக கரு­தப்­பட்ட ஆமி ஜினேவின் கையா­ளாக குற்­ற­வியல் உல­குக்குள் தனது 18 ஆவது வயதில் காலடி எடுத்து  வைத்த பாலங்­கட ஹீனா  தனது 32 ஆவது வயது வரை அந்த உல­கி­லேயே வாழ்ந்­த­துடன் மர­ணத்­தையும் சந்­திக்க நேர்ந்­தது.

கடந்த பெப்­ர­வரி மாதம் 18 ஆம் திகதி தனது மனைவி, பிள்­ளை­யுடன் காரில் இரத்­தினபுரி நக­ரி­லி­ருந்து தனது வீட்­டுக்கு சென்­று­கொண்­டி­ருந்த மாணிக்கக் கல் வியா­பா­ரி­யான சுமித் குண­சே­கர, தனது வீட்டை அடைந்த போது பிர­தான நுழை வாயிலை திறக்க காரில் இருந்து இறங்­கிய சமயம் பின் தொடர்ந்­து­வந்த துப்­பாக்கி தாரி­களால் கொலை செய்­யப்­பட்டார்.

சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் அஜித் ரோஹண

அத்­துடன்  அவர் வசம் இருந்த 80 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான மாணிக்கக் கல், 40 ஆயிரம் ரூபா பெறு­ம­தி­யான பணமும் கொள்ளையிடப்பட்ட­தாக சுமித் குண­சே­க­ரவின்  மனை­வி­யினால் பொலிஸில் செய்­யப்­பட்ட  முறைப்­பாட்டில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ள­தாக சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் அஜித் ரோஹண தெரி­வித்தார்.

இதனை தொடர்ந்து விசா­ர­ணை­களை தொடர்ந்த இரத்­தி­ன­புரி பொலிஸ் நிலை­யத்தின் குற்­ற­வியல் பிரி­வுக்கு பொறுப்­பான பொலிஸ் பரிசோதகர் அம­ர­சிறி தலை­மை­யி­லான பொலிஸ் குழு இந்த கொலை, கொள்­ளையின் பின்­ன­ணியில் பாலங்­கட ஹீனா உள்­ளதை கண்டுபிடித்தனர்.

எனினும்,பொலி­ஸா­ரி­ட­மி­ருந்து  தலை­ம­றை­வா­கி­யி­ருந்­ததால் பாலங்­கட ஹீனாவை கைது செய்­வதில் இரத்­தி­ன­புரி பொலிஸார் சிர­மங்­களை எதிர்­கொண்­டனர்.

இவ்­வா­றா­ன­தொரு நிலை­யி­லேயே பாலங்­கட ஹீனாவை கைது செய்யும் பொறுப்பு பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்­க­கோ­னினால் பொலிஸ் விசேட அதி­ர­டிப்­ப­டை­யி­ன­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­ப­டு­கி­றது.

பொலிஸ் விசேட அதி­ர­டிப்­ப­டையின் நிர்­வா­கி­யாக செயற்­படும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சரச் சந்­திர ரண­வ­ன­வி­டம் ­பா­லங்­கட ஹீனாவை கைது செய்யும் பொறுப்பு ஒப்ப­டைக்­கப்­பட்­டது.

இதனை அடுத்து பிரதிப் பொலிஸ் மா அதிபர் சரச் சத்­திர ரண­வ­னவின் ஆலோ­ச­னைக்­க­மைய விசேட அதி­ர­டிப்­ப­டையின் விசேட குழு பாலங்­கட ஹீனாவை கைது செய்யும் நோக்கில் அவரை தேடும் பட­லத்தை தொடங்­கி­யது.

மாணிக்கக் கல் வியா­பா­ரி­யான சுமித் குண­சே­க­ரவின் கொலை இடம்­பெற்று ஒரு மாதம் நிறை­வ­டைய நெருங்­கிய நிலையில் பாலங்­கட ஹீன தொடர்­பான தகவல் ஒன்று பொலிஸ் விசேட அதி­ர­டிப்­படை புல­னாய்வுப் பிரி­வுக்கு கிடைத்­தது.

இதனை அடுத்து பிரதிப் பொலிஸ் மா அதிபர் சரத்சந்­திர ரண­வ­னவின் ஆலோ­ச­னைக்கு அமைய செயற்­பட்ட பொலிஸ் விசேட அதி­ர­டிப்­ப­டை­யினர் ஹிக்­க­டுவை, தொட்­ட­க­முவை பிர­தே­சத்தில் உள்ள வீடொன்றில் இருந்து பாலங்­கட ஹீனாவை கைது செய்­தனர்.

இந்த கைதா­னது கடந்த 10 ஆம்   திகதி இடம்­பெற்­றது. பாலங்­கட   ஹீனா­வுடன் சேர்த்து அவ­ரது கையாள் என கரு­தப்­படும் 37 வய­தான  நபர்ஒருவ­ரையும் பாலங்­கட ஹீனா­வுக்கும் அவ­ரது உத­வி­யா­ள­ருக்கும் தங்­கு­மிடம் அளித்த 35 வய­தான பெண் ஒரு­வ­ரையும் இதன் போது அதி­ர­டிப்­ப­டை­யினர் கைது செய்­தனர்.

இதனை அடுத்து சுமித் குண­சே­க­ரவின் கொலை தொடர்­பான விசா­ர­ணை­க­ளுக்­காக பாலங்­கட ஹீனா அதி­ர­டிப்­ப­டை­யி­னரால் 10 ஆம் திகதி இர­வோ­டி­ர­வாக இரத்­தி­ன­புரி பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்ளார்.

அதி­ர­டிப்­ப­டை­யி­ன­ரி­ட­மி­ருந்து பாலங்­கட ஹீனாவை பொறுப்­பேற்ற இரத்­தி­ன­புரி பொலிஸ் நிலை­யத்தின் குற்­ற­வியல் பிரி­வுக்கு பொறுப்­பான பொறுப்­ப­தி­காரி அம­ர­சிறி, தனது குழு­வி­ன­ருடன் இணைந்து பாலங்­கட ஹீனாவை விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தி­யுள்ளார். இதன் போதே பாலங்­கட ஹீனா தனது உயி­ருக்கு உலை வைக்கும் அந்த சம்­ப­வத்தை திட்­ட­மிட்­டுள்ளார்.

மாணிக்கக் கல் வியா­பா­ரியின் கொலைக்கு பயன்­ப­டுத்­தப்­பட்­ட­தாக கூறப்­படும் துப்­பா­க்கி­யையும் மேலும் பல ஆயு­தங்­க­ளையும் இரத்­தி­ன­புரி,மஹ­வலவத்த காட்டில் மறைத்து வைத்­துள்­ள­தாக பாலங்­கட ஹீனா பொலி­ஸா­ரிடம் தெரி­வித்­துள்ளார்.

அந்த வாக்கு மூலத்தை பதிவு செய்­து­கொண்ட பொலிஸார் கடந்த 11 ஆம் திகதி, அதா­வது பாலங்­கட ஹீனா கைது செய்­யப்­பட்ட மறு­தினம் காலை­யி­லேயே ஹீனா­வையும் அழைத்­துக்­கொண்டு மஹ­வ­லவத்த காட்­டுக்கு ஆயு­தங்­களை மீட்க சென்­றுள்­ளனர்.

பொலிஸ் பரி­சோ­தகர் அம­ர­சிறி தலை­மை­யி­லான குழு­வி­னரே சந்­தேக நபரை அழைத்துச் சென்­றுள்­ளனர். இதன் போது காட்டின் ஒரு பகு­தியை அடைந்­த­போது   சந்­தேக நப­ரான பாலங்­கட ஹீனா அங்கு மறைத்து வைத்­தி­ருந்த கைக் குண்­டொன்றை எடுத்து பொலிஸார் மீது தாக்க முற்பட்­டுள்ளார்.

இதனை அடுத்து பொலிஸ் பரி­சோ­தகர் அம­ர­சிறி தற்­காப்பு நிமித்தம் பாலங்­கட ஹீனா மீது துப்­பாக்கி பிர­யோகம் மேற்­கொள்ள, காய­ம­டைந்த ஹீனா இரத்­தி­ன­புரி வைத்­தி­ய­சா­லைக்கு கொண்­டு­செல்­லப்­பட்­டுள்ளார். எனினும் அங்கு கொண்டு செல்­லப்­படும்போதே பாலங்­கட ஹீனா என்ற பாதாள உலகின் இருண்ட சரித்­திரம் முடி­வுக்கு வந்­தி­ருந்­தது.

பொலிஸ் துப்­பாக்கிப் பிர­யோ­கத்தில் கொல்­லப்­பட்ட பாலங்­கட ஹீனா என அறி­யப்­படும் அரும கமகே சுகத் சாமிந்த முல்­கி­ரி­கல பிர­தேச பாட­சாலை ஒன்றில் சாதா­ரண தரம் வரை கல்வி பயின்­றவர்.

எனினும் பாலங்­கட ஹீனாவின் மூத்த சகோ­த­ரி­களில் ஒரு­வ­ரான பிர­தீபா நந்­தனீ எனப்­ப­டு­பவர் பிர­தே­சத்தின் போக்­கிரி ஒரு­வரால் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்தப் பட்ட சம்­ப­வத்தை அடுத்து அது தொடர்பில் தட்டிக் கேட்கச் சென்றே அவர் குற்­ற­வியல் உல­குக்குள் புகுந்­தவர் என கூறப்­ப­டு­கி­றது.

‘கழுவா’ எனப்­படும் அந்த போக்­கிரி ஊரின் பெரிய சண்­டி­ய­னா­கவும் விளங்­கி­யுள்ளான்.

இத­னி­டையே துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உள்­ளான சகோ­த­ரிக்கு ஆண் குழந்தை ஒன்றும் கிடைத்­துள்­ளது. எனினும் ‘கழுவா’ இது தொடர்பில் கணக்கி­லெ­டுக்­க­வில்லை.

பொலி­ஸாரின் நட­வ­டிக்­கையும் அப்­போது பெரிய அளவில் வெற்றி அளிக்­கா­ததால் களத்தில் தானே இறங்கி ‘கழு­வா­வுக்கு எதி­ராக போரா­டு­வது என ஹீனா தீர்­மா­னித்­துள்ளார்.

இதற்­காக இரா­ணு­வத்­தி­லி­ருந்து தப்பி வந்­துள்ள தனது உறவு முறைக்­கா­ர­ரான ஆமி ஜினே என்ற தெற்கின் முதல் நிலை பாதாள உலகக் குழு தலை­வ­ருடன் சேர்ந்து பாலங்­கட ஹீனா செயற்­ப­ட­லா­யினார்.

பொலி­ஸா­ருக்கு எதி­ரா­கவே மனித உரிமை தொடர்பில் முறைப்­பா­ட­ளித்த குற்­ற­வாளி என்ற நிலையில் ஆமி ஜினேவை தெரி­யா­த­வர்கள் இருக்க முடி­யாது.

எது எவ்­வா­றா­யினும் கழு­வாவை ஆமிஜினே­வுடன் சேர்ந்து தீர்த்துக் கட்­டிய பாலங்­கட ஹீனா குற்­ற­வியல் உலகில் தொடர்ந்தும் சஞ்­சரிக்கலானார். அன்று முதல் பல்­வேறு குற்றச் செயல்­க­ளூ­டாக பல­ரது உயிரை பறித்த பாலங்­கட ஹீனா, வீர­கெட்­டிய பொலி­ஸாரின் தாக்குதலில் காய­ம­டைந்து  மாத்­தறை வைத்­தி­ய­சா­லையில்   வைத்து  உயிரிழந்த ஆமி ஜினேவின் இடத்தை நிரப்பும் விதமாகவும் கொலைக்கு பழிவாங்கும் விதமாகவும் குற்றவியல் வாழ்வை தொடரலானான்.

இதன் தொடராக பல உயிர்களை பறித்த பாலங்கட ஹீனா, கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்த நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு ஒக்டோபர் 15 ஆம் திகதி பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார். இந் நிலையிலேயே பாலங்கட ஹீனா மாணிக்கக் கல் வியாபாரியை கொலை செய்து தனக்கான முடிவினை தேடிக்கொண்டான்.

‘ஆயுதம் எடுத்தவனுக்கு ஆயுதத்தாலேயே சாவு ‘ என்பார்கள். பாலங்கட ஹீனா விடயத்திலும் அது நிரூபிக்கப்பட்டுள்ளது வன்முறைக்கு வன்முறை தீர்வாகாது.

சட்டம் தன் கடமையை செய்யவில்லை எனக் கூறி ஆயுதம் ஏந்தும் ஒவ்வொருவரின் நிலைமையும் பாலங்கட ஹீனாவின் முடிவை ஒத்ததாகவே இருக்கும்.

எம்.எப்.எம்.பஸீர்

Exit mobile version