ilakkiyainfo

பயிற்சி துன்புறுத்தல் வீடியோ உண்மையானதே’: இலங்கை இராணுவம் (வீடியோ இணைப்பு)

இலங்கை  இராணுவத்தில் பெண் இராணுவ பயிலுனர்களுக்கு பயிற்சி கொடுக்கும்போது, பயிற்சியாளர்கள் அவர்களை கேலி செய்து- திட்டி, தாக்கி துன்புறுத்துவதாக  இணையதளங்களில்  பரவியுள்ள வீடியோ காட்சிகள் உண்மை தான் என்று இலங்கை இராணுவம் கூறியுள்ளது.

குறித்த பயிற்சி பெறும் இராணுவ வீராங்கனைகள் நடத்தப்பட்ட விதம் தொடர்பில் இராணுவ சட்டவிதிகளுக்கு முரணாக நடந்துகொண்ட இராணுவ வீரர்களுக்கு இராணுவ சட்டத்தின் கீழ் தண்டனை அளிக்கப்படும் என்றும் இலங்கை இராணுவம் கூறியுள்ளது.

கடந்த 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அனுராதபுரத்தில் பெண் இராணுவ அணியொன்றுக்கு பயிற்சி அளிக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ காட்சி இதுவென்று  இராணுவப்  பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

‘இராணுவ வீரர்கள் தங்களின் இராணுவ பயிற்சி விதிமுறைகளை மீறி பயிலுநர்களுக்கு தண்டனை கொடுத்துள்ளனர். தவறிழைத்தவர்களுக்கு இராணுவ சட்டத்தின் படி தண்டனை கொடுக்கவும் என்றும் இனிமேல் இப்படியான சம்பவமொன்று நடக்காதிருக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார் இராணுவப் பேச்சாளர்.

‘வீடியோவை எடுத்தவரும் இருக்கிறார். அதில் வருகின்ற இராணுவ வீரர்களும் தாங்கள் தான் என்று ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். அதன்மூலம் வீடியோ உண்மையானது தான் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது’ என்றும் அவர் கூறினார்.

tamil_army_003
இலங்கை இராணுவத்தில் தமிழ்ப் பெண்கள்

யுத்தம் முடிவடைந்த பின்னர் இலங்கை இராணுவம் தமிழ்ப் பெண்களையும் இராணுவத்தில் சேர்த்துவருகிறது

இலங்கை இராணுவம் மனித உரிமைகளை மீறியுள்ளதாக சர்வதேச மட்டத்தில் குற்றச்சாட்டுக்கள் இருந்துவருகின்றன.

இலங்கை இராணுவத்தின் மீது மேலும் மேலும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுவதை தடுப்பதற்கு இலங்கை இராணுவம் நடவடிக்கை எடுக்கவில்லையே என்று தமிழோசை இராணுவப் பேச்சாளரிடம் சுட்டிக்காட்டியது.

‘இலங்கை இராணுவம் மனித உரிமை மீறல்களை அனுமதிக்கும் இராணுவம் அல்லவென்பது இந்த வீடியோ தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதன் மூலமே உறுதியாகிவிட்டது’ என்றர் ருவான் வணிக சூரிய.

இலங்கையில் முன்னெப்போதும் இல்லாதவாறு தமிழ்ப் பெண்களும் இராணுவத்தில் சேர்த்துக்கொள்ளப்படுகின்றனர். இப்போது வெளியாகியிருக்கின்ற காட்சிகளைப் பார்க்கும்போது, தமிழ்ப் பெண்கள் இராணுவத்தில் இணைவதற்கு அச்சப்படுவார்களே என்றும் தமிழோசை சுட்டிக்காட்டியது.

‘அது உண்மையில் தவறான கருத்து..இப்போது இலங்கை இராணுவத்தில் நூற்றுக்கும் அதிகமான தமிழ்ப் பெண்கள் பணியாற்றுகிறார்கள். தங்களுக்கு எப்படி இராணுவத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது என்று அவர்களுக்குத் தெரியும்’ என்றார் பிரிகேடியர் வணிகசூரிய.

தற்போது வெளியாகியுள்ள வீடியோ காட்சியில் இருப்பது தமிழ்ப் பெண்கள் அல்ல என்றும், தமிழ்ப் பெண்களை சேர்த்துக் கொள்ள முன்னமே இந்த சம்பவம் நடந்துள்ளது என்றும் அவர் கூறினார்.

பிரிகேடியர் வணிகசூரிய B.B.C தமிழோசைக்கு அளித்த செவ்வி

 

முக்கிய குறிப்பு  ** இதேவேளை மேற்படி சிங்களப் பெண்கள்  மீதான 2012ல் பயிற்சியின்  போதான நடவடிக்கையை, சில தமிழ் ஊடகங்கள், இந்தப் பெண்கள் “அண்மையில் இலங்கை இராணுவத்தில் சேர்க்கப்பட்ட தமிழ் பெண்கள் மீது நடத்தப்படும் கொடுமை பாருங்கள்” எனக் கூறி பொய்ப் பிரச்சாரத்தில்  ஈடுபட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.

தமிழ் பெண்களுக்கு  இராணுவ பயிற்சியின்போது   இலங்கை  இராணுவம்   துன்பம்  விழைவித்ததை  ஓப்புகொண்டதாகவே  இன்றும்..   இச்செய்தியை   புலியாதரவு  இணையதளங்கள்  பிரசுரிக்கின்றன.

ழைய  வீடியோ  ஒளி நாடாவை  நல்ல விலைக்கு  இராணுவம்  புலியாதரவு  ஊடகங்களுக்கு    விற்பனை  செய்திருக்கின்றார்கள்   என்பது தெட்ட தெளிவாக  தெரிகின்றது.

Exit mobile version