ilakkiyainfo

ஜெர்மனியில் நடைபெற்ற “இஸ்லாமிய வார” நிகழ்ச்சியில் நிர்வாணமாக நுழைந்து ஆர்பாட்டம் செய்த பெண்கள். (படங்கள்)

group Femen,

ஜெர்மனி பெர்லின் நகரில்  ”பெர்லின் இஸ்லாமிய வாரம்” நேற்று தொடங்கியது. ஜெர்மனி பெர்லின் நகரில் அமைந்துள்ள அரங்கில் நடைபெற்ற நிகழ்வில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என் பலர் கலந்துகொண்டனர்.

இந் நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரையும்  அதிர்ச்சிக்கும் உள்ளாக்கும் வகையில்   அரங்கில் தீடீரென நுழைந்த அரைநிர்வாண பெண்கள்  ஆர்ப்பாட்டம்  செய்தனர்.

கிழக்கு ஐரோப்பாவில் தொடங்கப்பட்ட  பெமென் (topless group Femen) (பெண் விடுதலைக்காக, கருத்து வேறுபாடு கொண்ட அரசாங்கங்கள் மற்றும் அமைப்புக்களுக்கு  எதிராக நிர்வாணமாக்  போராடும் அமைப்பு)  அமைப்பை சேர்ந்த மூன்று பெண்கள் அரைநிர்வாணமாக இஸ்லாம் எதிர்ப்பு வாசகங்கள் உடலில்  எழுதிக்கொண்டு நிகழ்ச்சி நடக்கும் அரங்குக்குள் புகுந்தனர்,

உடன் செயற்பட்ட பொலிஸார் குறித்த பெண்களை அரங்கை விட்டு அப்புறப்படுத்தினர்.

இதனைதொடர்ந்து தமது இணையதளத்தில் இஸ்லாம் மார்க்கம் வன்முறையை ஊக்குவிப்பதாகவும் உலகில் நடைபெறும் குற்றங்களுக்கு இஸ்லாமே மார்க்கமே பெறுப்பு என்ற தொனியில் கருத்து வெளியிட்டுள்ளனர்.

பெண் விடுதலைக்காக போராடும் பெமென் கடந்த வருடம்   அரச தலைவர்கள் ஜெர்மன் அதிபர் -ஏஞ்ஜலா மேக்கல்  ரஷ்ய அதிபர் புடின் ஆகீயோரின் சந்திப்பின் போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நிர்வான போராட்டம் நடத்தியமை குறிப்பிடத்தக்கது,

History: A Femen protester can be seen here last year confronting Vladimir Putin and Angela Merkel

Exit mobile version