சீனாவிற்கு அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்சேல் ஒபாமா மற்றும் அவர்களது மகள்கள் ஷாஷா மற்றும் மாலியா ஆகியோர் சுற்றுப்பயணம் செய்து வருகின்றனர்.
அவர்களது வருகையை ஒட்டி சீனா முழுவதும் ஒபாமா மாவோ என்ற பெயர்கள் அடங்கிய டீ-சர்ட்டுகள் பெருமளவு விற்பனையாகி வருகிறது.
சீனா-அமெரிக்கா ஆகிய இருநாடுகளின் மாணவர்களின் கல்வியறிவு மேம்பட எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து மிச்சேல் ஒபாமா சீன அரசு அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினா.
மேலும் அவர் தனது இரண்டு மகள்களுடன் சீனப்பெருஞ்சுவர் மற்றும் சீனாவின் மிகவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதியான Beijing suburbs பகுதிகளுக்கு சென்று சுற்றிபார்த்தார்.
உலக அளவில் இண்டர்நெட் உரிமம் பெறுவது குறித்து மிச்சேல் ஒபாமா சீன தகவல் தொழில்நுட்ப அதிகாரிகளிடம் ஆலோசனை செய்தார்.
மிச்சேல் ஒபாமாவின் வருகையை சீனர்கள் மிகுந்த மரியாதைக்குரிய சுற்றுப்பயணமாக இருக்க ஒத்துழைப்பு கொடுத்தனர் என அமெரிக்க அரசு அதிகாரிகள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
மிச்சேல் ஒபாமா வருகையை ஒட்டி ஏராளமான சிறப்பு டீ-சர்ட்டுகள் விற்பனையாகின. $60 மதிப்புள்ள இந்த டீ-சர்ட்டுகளை அனைவரும் வாங்கி அந்த இடத்திலேயே அதை அணிந்து மகிழ்ந்தனர்.