ilakkiyainfo

புலிகளின் புதிய தலைவர் எனக் கருதப்படும் கோபியின் தாய் கைது

 

83 வயதான திருமதி. ராசமலர் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் தேடப்பட்டு வரும் விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் எனக் கருதப்படும் கோபியின் தாயாரையும் மற்றுமொரு  பெண்ணொருவரையும் பயங்கரவாத புலனாய்வு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கிளிநொச்சி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட இவ்விருவரும் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டு பயங்கரவாத புலனாய்வு பிரிவின் தலைமையகத்தில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோகண தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் எனக் கருதப்படும் கோபியின் தாயாரான செல்வநாயகம் ராசமலர் என்பவரும் அவருடன் தங்கியிருந்த மற்றுமொரு பெண் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேர்வின் சில்வா தனக்கான கல்லறைக்கு அடிக்கல் நாட்டினார்
25-03-2014

மேர்வின் சில்வா தனக்கான கல்லறைக்கு அடிக்கல் நாட்டினார் அமைச்சர் மேர்வின் சில்வா தனக்கான கல்லறைக்கு இன்று காலை அடிக்கல் நாட்டியுள்ளார்.

பொரள்ளை கனத்தை மயானத்திலுள்ள தனது தாயின் கல்லறைக்கு அருகிலேயே தனக்கான கல்லறைக்கு அவர் அடிக்கல் நாட்டியுள்ளார்.

தனது மறைவுக்கு பின்னர், தனது சாம்பலை இங்கு அடக்கம் செய்ய வேண்டுமென அவர் ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் யுவதிகளை இராணுவத்தில் இணையுமாறு கோரி, ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு!
25-03-2014
Tamil_women_soldier_p1
தமிழ் யுவதிகளை இராணுவப் படையில் இணைந்து கொள்ளுமாறு கோரி தமிழர்கள் வாழும் பிரதேசங்களில் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

ஆலங்கேணி, ஈச்சந்தீவு, உப்பாறு, சின்னத்தோட்டம் முதலான பகுதிகளில் அறிவிக்கப்பட்டு வருவதுடன் துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

இளம் யுவதிகளே உங்களுக்கு விருப்பமான தொழில் என்று தலைப்பிடப்பட்ட துண்டுப் பிரசுரத்தில் இலங்கை இராணுவத்திற்கு தமிழ் பயிலுநர் பெண் சிப்பாய்களை ஆட்சேர்ப்புக்கான நேர்முகப்பரீட்சை திருகோணமலை 22 ஆவது படைமுகாமில் நடைபெற்று வருகின்றன.

தகைமைகளாக திருமணம் செய்யாத இலங்கைப் பெண் பிரஜையாக இருத்தல் வேண்டும் 18-24 வயதுக்குட்பட்டவர்களாக இருத்தல், நல்ல உடல் ஆரோக்கியமிக்கவராக இருத்தல் வேண்டும். குறைந்தது 8 ஆம், 9 ஆம் தரங்கள் படித்திருத்தல் வேண்டும்.

மாதாந்தம் 42 ஆயிரத்து 498 ரூபாய் பயிற்சிக் காலத்தில் வழங்கப்படும். உணவு, தங்குமிடவசதிகள் உள்ளிட்ட பல நன்மைகள் வழங்கப்படும்.

அத்துடன் 15 வருடங்கள் முடிந்து ஓய்வு காலத்தில் ஓய்வூதியமும் வழங்கப்படும். மேலும் இலவசக் காப்புறுதி, இலவச வைத்திய வசதி, இலவச சீருடை, இலவச பயண வசதி, இராணுவ நலன்புரி வசதிகள் என்பனவும் வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version