ilakkiyainfo

மனைவியின் பிரிவு, காதலியுடன் பிரச்சனை: தற்கொலை செய்ய விமானத்தை கடலில் விட்ட கேப்டன்?

கோலாலம்பூர்: மாயமான விமானத்தின் கேப்டன் ஜஹரி அகமது ஷா உறவுச் சிக்கல்களில் சிக்கித் தவித்து வந்ததால் அவர் விமானத்தை இயக்கும் மனநிலையிலேயே இல்லை என்று அவர் நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மாயமாகி இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கியதாக அறிவிக்கப்பட்ட மலேசிய விமானத்தின் கேப்டன் ஜஹரி அகமது ஷா(52). அவர் வேண்டும் என்றே விமானத்தை பல்வேறு இடங்களுக்கு கொண்டு சென்று கடலுக்குள் பாயவிட்டிருக்கலாம் என்று நிபுணர்கள் கருதுகிறார்கள். இந்நிலையில் ஷா குறித்து அவரது நண்பர் ஒருவர் புதிய தகவல்களை அளித்துள்ளார்.vimani
மனைவி ஷாவுக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அவரது மனைவி அவரை பிரிந்துவிட்டார். அவர்கள் கோலாலம்பூரில் ஒரே வீட்டில் வாழ்ந்தபோதிலும் பிரிந்தே இருந்தனர். இதனால் ஷா கவலையில் இருந்தார்.
பெண் தொடர்பு
மனைவியை பிரிந்த ஷாவுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. அந்த பெண்ணுடனான உறவிலும் அவருக்கு சிக்கல் ஏற்பட்டது. இந்த உறவுச் சிக்கல்களால் அவர் மன உளைச்சலில் இருந்தார். அவர் விமானத்தை இயக்கும் மனநிலையிலேயே இல்லை என்றார் ஷாவின் நண்பர்.
தற்கொலை
கேப்டன் ஷா வேண்டும் என்றே விமானத்தை பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு சென்று அதை கடலுக்குள் பாயவிட்டிருக்கிறார் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். அதாவது அவர் தற்கொலை செய்ய விமானத்தை பயன்படுத்தி உள்ளார்.
பயணிகள்
ஷா விமானத்தை 45,000 அடி உயரத்திற்கு கொண்டு சென்று அந்த உயரத்திலேயே 23 நிமிடம் விமானத்தை வைத்து அதன் பிறகே கீழ் நோக்கி வந்துள்ளார். அந்த உயரத்தில் 12 நிமிடங்களிலேயே ஆக்சிஜன் தீர்ந்திருக்கும். இதனால் விமானம் கடலுக்குள் விழுவதற்கு முன்பே பயணிகள் ஆக்சிஜன் இன்றி சுயநினைவை இழந்திருப்பார்கள் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
கேப்டன்
கடந்த 8ம் தேதி விமானத்தை இயக்கும் முன்பு கேப்டன் ஷா ஒரு பெண்ணுடன் தனது செல்போனில் பேசியுள்ளார். அதன் பிறகே அவர் விமானத்தை இயக்கி வேறு பாதையில் சென்றுள்ளார். அதனால் இது தற்கொலை முயற்சியாக இருக்கலாம் என்றே நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
Exit mobile version