Site icon ilakkiyainfo

இந்தியாவை நம்பியிருந்து ஏமாந்த சுரேஸ் எம்.பி..யின் அவலக்குரல்! (வீடியோ)

 

இந்தியா..இந்தியா..  என  எப்பொழுதுமே  இந்தியாவை  நம்பியிருந்த  கூட்டமைப்பினரை  இந்தியா  நல்லா  ஏமாற்றி விட்டது.  இந்தியா  எங்களுக்கு  தீாவை  பெற்று  தரும்..,  இந்தியா  எங்களுக்கு  சார்பான  நாடு.., இந்தியா   எப்பொழும்    தமிழர்களின  பக்கம்  தான் இருக்கின்றது..,

இந்தியா  மூலம்  இலங்கையரசை  பயமுறுத்தி  எங்களுக்குரிய அரசியல்  தீர்வை பெற்றுக்கொள்ளலாம்  என்கின்ற   நினைப்பில்  காலத்தை  ஓட்டிக்கொண்டிருந்த  கூட்டமைப்பினரின்   தலையில  இந்தியா  இத்தோடு  மூன்றாவது   தடவையாக   மண்ணை    அள்ளிப்  போட்டுள்ளது.

அதேநேரம்  மூன்றாவது  தடவையாக   இலங்கையை   இந்தியா  காப்பாற்றிவிட்டுள்ளது.

இலங்கையை   சர்வதேசத்தின்  பிடியிலிருந்து எப்படி காப்பாற்றலாம்  என்பதையிட்டு  தான்  இந்தியாவின்   முழு கரிசனையே ஒழிய..,  ஈழத்தமிழர்களின்  மீது  இந்தியாவுக்கு  எந்தவித   கரிசனையும் கிடையாது.

இந்தியா  ஏமாற்றம்  தந்ததாம!!

இந்த தீர்மானத்துக்கான வாக்களிப்பில் இருந்து   இந்தியா விலகி இருந்தமை, அதற்காக  அதன் தூதுவர் கூறிய காரணங்கள், மற்றும் போதுமான நிதி இல்லை என்பதை காரணம் காட்டி அந்த தீர்மானத்தை பின்போடவும், சர்வதேச விசாரணையை தடுக்கவும் பாகிஸ்தான் கொண்டுவந்த எதிர்ப்புகள் ஆகியவற்றுக்கு இந்தியா ஆதரவு வழங்கியமை ஆகியவை குறித்து இலங்கை தமிழ் மக்கள் ஏமாற்றம் அடைந்திருப்பதாகவும்  சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளர். (தமிழ் மக்கள்  இந்தியாவை  நம்பியிருந்து  ஏமாற்றமடைந்தார்களா அல்லது  கூட்டமைபினர்  இந்தியாவை  நம்பியிருந்து ஏமாற்றமடைந்தார்களா )

இந்தியாவிடமிருந்து   தமிழர்கள்  எதை பெற்றுக்கொள்ளலாம?

வீபூதி, சந்தனம், குங்குமம் … இவைகளை தான் இந்தியாவிடமிருந்து  தமிழர்கள் பெற்றுக்கொள்ளலாம். இவைகளை  பெற்றுக்கொண்டு  வடிவாக  நெற்றியில  பூசிகொண்டு  திரியவேண்டியதுதான்.

இந்தியாவின்  சகவாசத்தை (தமிழக அரசியல் வாதிகள் உட்பட)  எப்பொழுது   ஈழத்தமிழன்   தவிர்த்துக்கொள்கின்றானோ  அன்று  தான்  தமிழர்களுக்கு  விடிவு வரும்.

Exit mobile version