ilakkiyainfo

இலங்கை மீதான ஜெனீவா தீர்மானம் நிறைவேறியது: இந்தியா மீண்டும் காலை வாரியது

 

இலங்கையின் மனித உரிமைகள் விவகாரம் தொடர்பில் அமெரிக்காவின் முன்னெடுப்பில் ஜநா மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேறியுள்ளது. (இந்தியா மீண்டும்  தமிழர்களை ஏமாற்றியது.  சதாகாலமும்  இந்தியாவை  நம்பியிருந்த கூட்டமைப்பினர்   இனி  என்ன கதைசொல்லப்போகின்றார்கள் )

இலங்கை தீர்மானத்தை நிராகரித்தது.

12 நாடுகள் வாக்கெடுப்பிலிருந்து விலகியிருந்தன.

இந்தியா வாக்கெடுப்பிலிருந்து விலகிக் கொண்டது. இந்தோனேசியாவும் வாக்கெடுப்பிலிருந்து விலகிக்கொண்டது.

பாகிஸ்தான் இலங்கைக்கு ஆதரவாக தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தது. இலங்கை தொடர்பான விசாரணைகளுக்கு ஐநா மனித உரிமைகள் ஆணையத்திடம் போதுமான நிதிவளம் இல்லை என்று பாகிஸ்தான் கூறியது.

அதனால் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்படுவதை தாமதப்படுத்த வேண்டும் என்றும் பாகிஸ்தான் கேட்டுக்கொண்டது.

ஆனால், பொதுவான பட்ஜெட்டிலிருந்து இலங்கை விவகாரத்துக்கான தனியான நிதி ஒதுக்கப்படும் என்று ஆணையத்தின் நிதி விவகாரங்களுக்குப் பொறுப்பான அதிகாரி தெரிவித்தார்.

ஆனால், தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படுவதை தாமதப்படுத்துவதற்கான கோரிக்கையை ஏற்க முடியாது என்று அமெரிக்கா சுட்டிக்காட்டியது. வாக்களிப்பின் மூலமே நாடுகள் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்த முடியும் என்றும் அமெரிக்கா கூறியது.

மற்ற இணை அனுசரணை நாடுகளும் நிதிவளம் இல்லை என்ற வாதத்தை எதிர்த்துக் கருத்து வெளியிட்டன.

இறுதியாக தீர்மானத்திற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

மேலதிக தகவல்களை  எதிர்பாருங்கள்…

UNHRC1-600-1+நாடுகளின் பட்டியல்கள்

ஆதரவாக

1.     ஆஜர்ன்டினா
2.      ஒஸ்ரியா
3.      பெனின்
4.      பொட்ஸ்வானா
5.      பிரேஸில்
6.      சிலி
7.      கொஸ்டாரிகா
8.      கோர்டிவோரின்
9.      செக்குடியரசு
10.    எஸ்தோனியா
11.    பிரான்ஸ்
12.    ஜேர்மன்
13.    அயர்லாந்து
14.    இத்தாலி
15.    மெக்சிகோ
16.    மொன்டிநீக்ரோ
17.    பெரு
18.    கொரியா
19.    ருமேனியா
20.    மாக்கடோனியா
21.    சியாரா லியோ
22.    பிரித்தானியா
23.    அமெரிக்கா

எதிராக

1.    அல்ஜீரியா
2.    சீனா
3.    கொங்கோ
4.    கியூபா
5.    கென்யா
6.    மாலைத்தீவு
7.    பாகிஸ்தான்
8.    ரஷ்யா
9.    சவூதி அரேபியா
10.   ஐக்கிய அரபு இராஜ்ஜியம்
11.   வெனிசூலா
12.   வியட்னாம்

நடுநிலை

1.    புருக்கினோ பாசோ
2.    எத்தியோபியா
3.    காபன்
4.    இந்தியா
5.    இந்தோனேஷியா
6.    ஜப்பான்
7.    கஸகிஸ்தான்
8.    குவைத்
9.    மொரோக்கோ
10.   நமீபியா
11.   பிலிப்பைன்ஸ்
12.   தென்னாபிரிக்கா

ஐ.நா மனித உரிமை பேரவையில் அங்கத்துவம் வகிக்கம் நாடுகளின் புவியியல் பரம்பல் விகிதம்

ஆபிரிக்க நாடுகள்                                                                   13
ஆசிய பசுபிக் நாடுகள்                                                          13
இலத்தின் அமெரிக்க மற்றும் கரிபியன் தீவுகள்        8
மேற்கு ஐரோப்பிய நாடுகள்                                                 7
கிழக்கு ஐரோப்பிய நாடுகள்                                                6

Exit mobile version