ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Sunday, September 24
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    Home»தொடர் கட்டுரைகள்»குரான் குறிப்பிடும் நட்சத்திரங்கள்: மனிதப் பார்வையா? இறைப் பார்வையா? (இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே (பகுதி – 21)
    தொடர் கட்டுரைகள்

    குரான் குறிப்பிடும் நட்சத்திரங்கள்: மனிதப் பார்வையா? இறைப் பார்வையா? (இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே (பகுதி – 21)

    AdminBy AdminMarch 28, 2014Updated:March 31, 2014No Comments3 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    இதுவரை நாம், குரான் இறைவனின் வேதம் தான் என்பதற்கு மதவாதிகள் அறிவியல் உண்மைகள், அறிவியல் முன்னறிவிப்புகள் என விதந்தோதியவைகள் அறிவியலாக  இல்லாமலிருக்கிறது  என்பதையும், புரட்டுகளாக இருக்கின்றன என்பதையும் பார்த்தோம். இனி குரானில் மதவாதிகளால் வெளிச்சமிட்டுக் காட்டப்படாத, மேற்கோளாக அதிகம் பயன்படுத்தப்படாத பகுதிகள், வசனங்கள் எவ்வாறு அறிவியலோடு முரண்படுகின்றன என்பதை கவனிக்கலாம்.

    விழுகின்ற நட்சத்திரத்தின் மீது சத்தியமாக குரான் 53:1

    ……… இன்னும் அவற்றை ஷைத்தான்களை (வெருட்டும்) எரிகற்களாகவும் ஆக்கினோம்……… குரான் 67:5

    சூரியன் சுருட்டப்படும் போது, நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும்போது குரான் 81:1,2

    இவைகள் நட்சத்திரங்கள் குறித்து குரான் குறிப்பிடும் வசங்களில் சில. இந்த வசனங்கள் நட்சத்திரங்கள் விழுவதாகவும், ஷைத்தானை விரட்டப் பயன்படும் கல்லாகவும்,  உதிர்ந்து  விழுவதாகவும் சுட்டுகின்றன. வசனம் 53:1 ல் நட்சத்திரம் விழுவதாக குறிப்பிடுகிறது.

    ஒரு பொருள் விழுவது எனும் சொல் எதைக்குறிக்கும்? ஒரு பொருள் அதன் இடத்திலிருந்து புவியீர்ப்பு விசையால் கவரப்பட்டு இழுத்துக்கொள்ளப்படுவதையே குறிக்கும். இங்கு நட்சத்திரம் விழுவதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது,

    ஆனால் எதன் மீது அல்லது எதன் விசையால் கவரப்பட்டு விழுகிறது என்பது குறிப்பிடப்படவில்லை. பூமியிலிருந்து மனிதர்களை நோக்கி கூறப்படுவதால்  பூமியில் விழுவதாக  கொள்வதற்கே வாய்ப்பிருக்கிறது.

    ஒரு நட்சத்திரம் பூமியில் விழ முடியுமா? பூமியை விட மடங்குகளில் பெரிய அளவில் உள்ள நட்சத்திரங்கள் பூமியில் எப்படி விழமுடியும்? பூமிக்கும் நட்சத்திரங்களுக்கும் இடையிலுள்ள தூரம் மிக மிக அதிகம், புவியீர்ப்பு விசை எட்டமுடியாத தூரங்களில் அவை இருக்கின்றன.

    பூமிக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரமே 14 கோடியே 95 லட்சம் கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது.

    இவ்வளவு பக்கத்தில் இருக்கும் நட்சத்திரமான சூரியன் பூமியின் மீது விழ வேண்டாம், கொஞ்சம் நெருங்கி வந்தாலே போதும் பூமி காணாமல் போய்விடும்.

    பூமியைவிட சூரியன் அளவில் 98 மடங்கு பெரியது, சூரியனை விட பல ஆயிரம் மடங்கு பெரிய நட்சத்திரங்களெல்லாம் விண்ணில் இருக்கின்றன.

    இவைகளில் எந்த நட்சத்திரம் பூமியின் மீது விழுவது. ஆக விழுகின்ற நட்சத்திரம் என குரான் குறிப்பிடுவதில் ஏதாவது அறிவியல் பார்வை இருக்கிறதா?

    67:5 ல் நடத்திரத்தை ஷைத்தானை விரட்டப்பயன்படும் எரிகல்லாக குறிப்பிடுகிறது குரான். ஷைத்தான் என்பது அல்லாவின் உதவியாளனாய் இருந்து கட்சிமாறிய ஒரு இனம்.

    முதல் மனிதனை (ஆதாம்) களிமண்ணால் படைத்து தன் உதவியாளர்கள் அனைவரையும் அழைத்து பணியுங்கள் என்று அல்லா கூற, அல்லாவின் ராஜ்ஜியத்தில் முதல் கலகக்குரல் ஒலிக்கிறது.

    நெருப்பால் படைக்கப்பட்ட நான் களிமண்ணால் படைக்கப்பட்ட மனிதனை பணிவதா என்று இப்லீஸ் எனும் உதவியாளன் மட்டும் மறுக்க, ராஜ்ஜியத்திலிருந்து விரட்டப்பட்டு ஷைத்தான் என்ற பெயரில் பல்கிப்பெருகி மனிதர்களை குரானின் வழியிலிருந்து கெடுத்துக்கொண்டிருக்கிறான்.

    இது மனிதர்கள் அல்லாவை பின்பற்றாமலிருக்கும் மனிதர்களின் அடிப்படை குறித்த குரானின் காரியக் கற்பனை. இந்த ஷைத்தான்கள் வானத்திலிருக்கும் அல்லாவின்   ராஜ்ஜியத்தில், அல்லாவும் மலக்குகளும் (அல்லாவின் உதவியாளர்கள், ஷைத்தானும் முன்னர் ஒரு மலக்கு தான்) பேசிக்கொள்வதை ஒட்டுக்கேட்கிறதாம்.

    அப்படி ஒட்டுக்கேட்க முயற்சிக்கையில்தான் நட்சத்திரங்கள் எரிகற்களாக ஷைத்தான்களை விரட்டுகிறதாம். இதைத்தான் அந்த வசனம் குறிப்பிடுகிறது. இதில் எங்காவது அறிவியல் பார்வை தென்படுகிறதா? அப்படி நட்சத்திரங்கள் பூமியை நெருங்கமுடியுமா?

    இரவில் வானத்தைக் கவனித்தால் எரிகற்கள் விழுவதை பார்த்திருக்கலாம். இதை வைத்து அவை ஷைத்தானை விரட்டுவதாக முகம்மது சுவராசியமாக கதைகட்டியிருக்கிறார், அவ்வளவுதான்.

    Hubble's deepest view of the universe yet81 ம் அத்தியாயத்தின் முதல் இரண்டு வசனங்கள் நட்சத்திரங்கள் குறித்த அல்லாவின் பார்வை அறிவியலோடு எவ்வளவு தீவிரமாய் முரண்படுகிறது என்பதை இன்னும் விரிவாக அம்பலப்படுத்துகிறது. அந்த வசனங்களில் சூரியன் சுருட்டப்படுகிறது.

    நட்சத்திரங்கள் உதிர்ந்து விழுகின்றன. உலகத்தின் இறுதி நாளில் அதாவது நியாயத்தீர்ப்பு நாளில் உலகத்தின் அழிவு எப்படி இருக்கும் என்று இந்த அத்தியாயம் விவரிக்கிறது. அதில் தான் சூரியன் சுருட்டப்படுகிறது, நட்சத்திரங்கள் உதிர்ந்து விழுகின்றன.

    நட்சத்திரங்கள் உதிர்கின்றன என்றால், சூரியனும் உதிரத்தானே வேண்டும். ஏனென்றால் சூரியனும் ஒரு நட்சத்திரம் தானே. எனவே சூரியன் ஒரு நட்சத்திரம் என்பது அல்லாவுக்கு தெரியவில்லை. அவருடைய பார்வையில் புள்ளியைப்போல் மினுக்கிக் கொண்டிருப்பதுதான் நட்சத்திரம்.

    அதனால் தான் அவை உதிரவைக்கப்படுகின்றன, சூரியன் பெரியதாய் இருக்கிறது எனவே அது சுருட்டப்படுகிறது. ஐ.ஆர்.எஸ் 5 போன்ற நட்சத்திரங்களெல்லாம் உதிரும் போது, அதை விட பத்தாயிரம் மடங்கு சிறிய சூரியன் சுருட்டப்படுகிறது என்றால், இது அறிவியல் பார்வையா?

    bird_tree_sunநட்சத்திரங்களால் மனிதர்களுக்கு ஏற்படும் பயன் என்ன? அல்லது எதற்காக அல்லா நட்சத்திரங்களைப் படைத்திருக்கிறான்? இதற்கான விடை ஸஹீஹுல் புஹாரி ஹதீஸ் எண்கள் 3198, 3199 ஆகிய இரண்டுக்கும் இடையில் நட்சத்திரங்கள் எனும் தலைப்பில் இருக்கிறது.

    ௧) அவற்றை வானத்திற்கு அலங்காரமாக ஆக்கியுள்ளான்.

    ௨) ஷைத்தான்களை எறிந்து விரட்டுவதற்கான கருவியாக ஆக்கியுள்ளான்.

    ௩) அவற்றின் வாயிலாக வழியறிந்து கொள்வதற்கான அடையாளங்களாக அவற்றை ஆக்கியுள்ளான்.

    இந்த மூன்றைத்தான் நட்சத்திரங்களை படைத்தததன் காரணங்களாக அந்த ஹதீஸ் கூறுகிறது. வெளியைக்கடந்து ஸூப்பர் நோவாக்களிலிருந்து பூமியை அடையும் காஸ்மிக் கதிர்களை ஒருபுறம் ஒதுக்கிவைத்துவிடுவோம்.

    சூரியன் எனும் நட்சத்திரம் இல்லையென்றால் மனித இனம் ஏது? சூரியக்குடும்பத்தில் பூமியின் இருப்புக்கு சூரியன் ஆற்றும் பருண்மையான காரணங்களையெல்லாம் விட்டுவிட்டாலும் கூட, சூரியன் இல்லாமல் ஒரு புல்பூண்டுகூட பூமியில் இருக்கமுடியாதே.

    தாவரங்கள் சூரிய ஒளியைக் கொண்டே பச்சயம் தயாரிக்கின்றன. உயிரினங்கள் சூரிய ஒளியைக்கொண்டே வெப்பம் பெருகின்றன.

    ஆக பூமியில் அனைத்தும் உயிர்வாழத்தேவையான ஆதாரங்கள் சூரியன் எனும் நட்சத்திரத்தின் வழியாக பெற்றுக்கொண்டிருக்கும் போது, வழியைக் கண்டறிவதற்கான அடையாளமாக கூறுவது, ஆண்டவனின் அனைத்தும் அறிந்த பண்பையே கேள்விக்குறியாக்கவில்லையா? ஓதத்தெரியாத உம்மி நபிக்கு (முகம்மது) வேண்டுமானால் இவைகள் தெரியாமல் இருந்திருக்கலாம், அந்த இறைவனுக்கு………..?

    இரவு வானத்தில் எரிகற்கள் விழுவதைப் பார்த்து, நட்சத்திரம்தான் விழுகிறது என்று எண்ணி தன்னுடைய குரானில் முகம்மது வசனங்களை கட்டியமைத்திருக்கிறார் என்பதற்கு இது ஒரு தெளிவான அத்தாட்சியில்லையா? மதவாதிகள் பதில் கூறலாம்.

    -செங்கொடி-

    Post Views: 116

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    “சனாதன தர்மம் – 1”- ( Sanathana Dharma – 1)

    September 23, 2023

    மார்பில் ரவைகள் பாய இரத்த வெள்ளத்தில் விழுந்தார் யாழ்.மேயர் துரையப்பா!: (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – (பகுதி 3)

    September 22, 2023

    முதலாம் உலகப்போரின் அதிர்வுகள்: நேச நாடுகளின் உதவிகளைப் பெறுவதில் ரஷ்யா சந்தித்த சிக்கலும் தீர்வும்!

    September 20, 2023

    Leave A Reply Cancel Reply

    March 2014
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31  
    « Feb   Apr »
    Advertisement
    Latest News

    கேணல் மும்மர் கடாபி: இந்திரா காந்தியை லிபியா வரவழைக்க கடைபிடித்த உத்தி என்ன தெரியுமா?

    September 24, 2023

    உடுக்கை Entrance; திரிசூல Light; சிவன் வடிவில் உருவாகும் பிரம்மாண்ட கிரிக்கெட் மைதானம்!-வீடியோ

    September 24, 2023

    என் கணவர் பாக்ஸிங் செய்ய ரெடி.. சீமானின் சவாலை ஏற்று நாள் குறித்த வீரலட்சுமி..!

    September 24, 2023

    2 குழந்தைகளுடன் பெண் போலீஸ் உயிரை மாய்த்த விவகாரம்: கள்ளக்காதல் பிரச்சனையில் போலீஸ்காரரும் தற்கொலை

    September 24, 2023

    மலேசியாவில் மூன்று இலங்கையர்கள் படுகொலை – ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கிவைக்கப்பட்ட நிலையில் சடலங்கள் மீட்பு- சந்தேகநபர்களும் இலங்கையர்கள்

    September 23, 2023
    • மகாவம்சத்தில் புதைந்துள்ள…/ பகுதி 01
    • அத்துமீறிய தலாய் லாமா? 8 வயது சிறுவனிடம் சில்மிஷமா? அதுவும் பொது இடத்தில். -(வீடியோஇணைப்பு)
    • ரஷ்ய அதிபர் புதினை கைது செய்வது சாத்தியமா? யுக்ரேன் போர்க்குற்ற வழக்கில் சர்வதேச நீதிமன்றம் பிடிவாரண்ட்
    • ஆபாச பட நடிகையுடனான தொடர்பை மறைக்க பணம் கொடுத்த குற்றச்சாட்டு – டிரம்ப் கைது செய்யப்படுவாரா?
    • ஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்ததாக ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவாகிறது ட்ரம்ப்

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    Recent Posts
    • கேணல் மும்மர் கடாபி: இந்திரா காந்தியை லிபியா வரவழைக்க கடைபிடித்த உத்தி என்ன தெரியுமா?
    • உடுக்கை Entrance; திரிசூல Light; சிவன் வடிவில் உருவாகும் பிரம்மாண்ட கிரிக்கெட் மைதானம்!-வீடியோ
    • என் கணவர் பாக்ஸிங் செய்ய ரெடி.. சீமானின் சவாலை ஏற்று நாள் குறித்த வீரலட்சுமி..!
    • 2 குழந்தைகளுடன் பெண் போலீஸ் உயிரை மாய்த்த விவகாரம்: கள்ளக்காதல் பிரச்சனையில் போலீஸ்காரரும் தற்கொலை
    Recent Comments
      Quick Links
      • முகப்பு
      • இந்தியா
      • உலகம்
      • வெளிநாட்டு
      • சினிமா
      • விளையாட்டு
      • ஆரோக்கியம்
      • சுற்றுலா
      • வினோதம்
      • அரசியல்
      Quick Links
      • கட்டுரைகள்
      • தொடர் கட்டுரைகள்
      • கவிதைகள்
      • கலைகள்
      • வீடியோ
      • புகைப்பட தொகுப்பு
      • தொழில்நுட்பம்
      • வேலைவாய்ப்பு
      • கல்வி
      Quick Links
      • ஆரோக்கியம்
      • அந்தரங்கம்
      • ஆன்மீகம்
      • சுற்றுலா
      • சிறப்பு செய்திகள்
      • வினோதம்
      BRAKING NEWS
      • மகாவம்சத்தில் புதைந்துள்ள…/ பகுதி 01
      • அத்துமீறிய தலாய் லாமா? 8 வயது சிறுவனிடம் சில்மிஷமா? அதுவும் பொது இடத்தில். -(வீடியோஇணைப்பு)
      • ரஷ்ய அதிபர் புதினை கைது செய்வது சாத்தியமா? யுக்ரேன் போர்க்குற்ற வழக்கில் சர்வதேச நீதிமன்றம் பிடிவாரண்ட்
      • ஆபாச பட நடிகையுடனான தொடர்பை மறைக்க பணம் கொடுத்த குற்றச்சாட்டு – டிரம்ப் கைது செய்யப்படுவாரா?
      • ஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்ததாக ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவாகிறது ட்ரம்ப்
      2023 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

      swissreplicas.to

      bestwatchreplica.co
      replica watches

      swiss replica website

      fake rolex for sale
      relogios replicas
      Go to mobile version