ilakkiyainfo

லண்டனில், இரும்பு தடுப்புகளை உடைத்துக் கொண்டு பள்ளத்தில் பாய்ந்த ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட்!

லண்டனில், அதிவேகமாக வந்த ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் எஸ்யூவி ஒன்று கட்டிடத்திற்கும் சாலைக்கும் இடையிலான பள்ளத்தில் பாய்ந்தது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த பெண் உள்பட 4 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

லண்டனின், வடக்கு ஆக்ஸ்போர்டு சாலையில் இந்த விபத்து நடந்தது. விபத்துக்குள்ளான கார் இதுவரை 700 கிமீ தூரம் மட்டுமே ஓடிய புதிய காராகும். விபத்திலிருந்து அந்த பெண்கள் சிறிய காயங்களுடன் தப்பியதே பெரிய விஷயம் என்று நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். விபத்தில் சிக்கிக் கிடந்து மீட்கப்பட்ட அந்த காரின் படங்களை ஸ்லைடரில் காணலாம்.
28-1395993305-rangerover-sport1

அதிவேகம்

அதிவேகத்தில் வந்த அந்த காரை ஓட்டி வந்த பெண் பிரேக் பிடிக்க முயன்றும் வழுக்கிச் சென்று பள்ளத்தில் பாய்ந்துள்ளது.

சொருகிய கார்

அங்கு இருந்த இரும்பு தடுப்புகளையும் உடைத்துக் கொண்டு பள்ளத்தில் கார் சொருகிக் கொண்டதால், பலத்த சேதமடைந்தது.

பலத்த சேதம்

கூரை, கண்ணாடி ஜன்னல்கள் என பெரும்பாலான பாகங்கள் நொறுங்கிவிட்டன. எஞ்சினை தவிர வேறொன்றும் தேறாது என்ற அளவில் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீட்புப் பணி

தகவல் கிடைத்து வந்த தீயணைப்புப் படையினர் கிரேன் உதவியுடன் காரை மீட்டனர்.


மதிப்பு

80000 பவுண்ட்டுகள் விலை கொண்ட அந்த காரை மீண்டும் சரிசெய்ய பெரும் செலவு பிடிக்கும் என்று இன்ஸ்யூரன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

எஞ்சின்

இந்த சக்திவாய்ந்த காரில் 510 பிஎச்பி பவரை அளிக்கும் 5.0 லிட்டர் வி8 சூப்பர்சார்ஜ்டு எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.

தடுப்பு

விபத்து நடந்த இடத்தில் கார் மீட்கப்பட்டவுடன் தற்காலிக தடுப்புகளை போலீசார் அமைத்துள்ளனர்.

Exit mobile version